Friday, May 17, 2024
HomeApps5 சூப்பரான ஆண்ட்ராய்டு ஆப்கள்

5 சூப்பரான ஆண்ட்ராய்டு ஆப்கள்

I suggest these 5 android apps for new users

Google Playstore இல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்கள் அப்லோட் செய்யப்படுகின்றன . இருந்தாலும் குறிப்பிட்ட சில ஆப்கள் மட்டுமே தவிர்க்க முடியாததாகி விடுகின்றன . அப்படிப்பட்ட 5 சிறந்த ஆப்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.

புதிதாக மொபைல் வாங்குகிறவர்கள் என்னனென்ன ஆப்கள் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்பதில் சற்று குழப்பம் அடைவார்கள். அவர்களுக்கு முதல் 5 ஆப்களை இங்கே பரிந்துரை செய்கிறேன்.

நான் தினசரி இந்த 5 ஆப்களையும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறேன். எனது அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த ஆப்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Best 5 Android Mobile Apps :

  1. ES FILE EXPLORER
  2. EVERNOTE MOBILE APP
  3. NOVO LAUNCHER
  4. SWIFT KEY App
  5. MX PLAYER

ES FILE EXPLORER

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களானாலும் புதிதாக வாங்குபவர்களாகவும் இருந்தாலும் file களை பார்ப்பதற்கும் கையாளுவதற்கும் (View and Access files) அதிகமாக தரவிறக்கம் செய்வது ES FILE EXPLORER  தான் .

ez file explorer
ez file explorer

Features :

  • மொபைலின் Storage Space முடிவது போன்று இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்பினாலும் தேவை இல்லாத file களை நீக்க Space Analyser வசதி இருகின்றது .
  • உங்களது மொபைலில் Wifi வசதி இருப்பின் ES FILE EXPLORER வைத்திருக்கும் இன்னொரு நண்பருடன் file களை பகிர்ந்துகொள்ள முடியும்.
  • ஒரு Mobile App ஐ Install செய்யவோ அல்லது Uninstall செய்யவோ இதில் வசதி இருக்கின்றது .
  • மேலும் backup எடுத்து வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் இருகின்றது .

EVERNOTE MOBILE APP

தொடர்ச்சியாக வேலைகளை செய்வோர், சில குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி, குறிப்புகள் எடுப்பதற்காகவே ஒரு சிறப்பான ஆப் இருக்கிறது என்றால் அது EVERNOTE APP தான்.

Features :

  • இந்த ஆப்பில் text, images, audio, video என அனைத்துவிதமான format file களையும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் .
  • முக்கிய சிறப்பம்சமே மொபைல் , கணிணி உள்ளிட்ட எந்த device மூலமாகவும் ஒரே login ஐ பயன்படுத்தி file களை upload செய்யவும் access செய்யவும் முடியும்.

NOVO LAUNCHER

தற்போது Playstore இல் இருக்கக்கூடிய Launcher App களில் சிறப்பான வசதிகளை கொண்டது NOVO Launcher . பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் புதிய customization களையும் கொண்டிருப்பதனால் அதிகம்பேரால் விரும்பப்படுகிறது .

Features :

  • Icon Themes, Subgrid Positioning, Colour Controls என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
  • இலவசமாகவும் இதனை download செய்து பயன்படுத்திடலாம் ஆனால் prime version இல் அதிகபடியான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

SWIFT KEY App

கிட்டத்தட்ட 250 மில்லியன் பயனாளர்கள் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்துள்ளனர் . இதனுடைய முக்கிய சிறப்பம்சமே Artificial Intelligence மூலமாக பயன்படுத்துபவர் எந்த வார்த்தையை type செய்ய வருகின்றார் என்பதனை அறிந்து அதனை suggest செய்வது தான் .

Features :

  • Smarter Auto correct – type செய்திடும் போது தவறாக Spelling Mistake செய்தால் கூட உங்களுக்காக சரி செய்து தரும் . இன்னும் கூடுதலாக வார்த்தைகளுக்கு இடையில் Space கூட விட்டு விடும் .
  • தற்போது Gif file களை search செய்திடும் வசதியும் இருக்கின்றது.
    Customizable Layout , Attractive themes, flow typing என பல விரும்பத்தகுந்த வசதிகளை கொண்டிருக்கிறது .

MX PLAYER

அனைத்துவிதமான audio format, video formatகளையும் சப்போர்ட் செய்யக்கூடிய Video playerகளில் மிக முக்கியமானது . திரைப்படம் பார்க்கும்போது subtitle வேண்டும் என தோன்றினால் அங்கேயே இணையதளத்தில் தேடும் வசதி கூடுதல் சிறப்பு .

mx player app
mx player app

Features :

  • வீடீயோவை Zoom செய்திடும் வசதியும் ஒலியை கூட்டிடும் வசதியும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது .
  • Screen kid Lock : நாம் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையினை தொட்டால் எதுவும் நடைபெறாமல் தொந்தரவில்லாமல் பார்ப்பதற்கு இந்த வசதி பயன்படுகின்றது .
  • Youtube வீடியோக்களை கூட இங்கே நீங்கள் பார்க்க முடியும்.

Conclusion

இதுதவிர இன்னும் ஏராளமான மொபைல் ஆப்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவை குறித்தும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

இதுதவிர புதியவர்களுக்கு நீங்கள் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பை பரிந்துரை செய்திட நினைத்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.

உங்களுக்காக பின்வரும் பதிவுகளை பரிந்துரை செய்கிறேன்.

கண் குறைபாடுள்ளவர்கள் படிக்க ஹானரின் PocketVision App

CRED எப்படி இயங்குகிறது?

இந்த பிரவுசரை பயன்படுத்தினால் யாராலும் கண்காணிக்க முடியாது

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular