Sunday, May 12, 2024
HomeAppsகூகுளின் ‘Task Mate’ : பணம் சம்பாதிக்க இன்னொரு வழி

கூகுளின் ‘Task Mate’ : பணம் சம்பாதிக்க இன்னொரு வழி

Google Task Mate

கூகுள் நிறுவனம் Task Mate என்ற ஆப்பை சோதித்து வருகிறது. இதில் கொடுக்கப்படும் வேலைகளை செய்து முடிப்பதன் மூலமாக பணம் ஈட்ட முடியும். தற்போது சோதனை நிலையில் இந்த ஆப் இருக்கிறது.

கொரோனா தொற்று ஆரம்பித்த பிறகு அதிகபட்சமான நபர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். அதே சமயம் கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு வேலைகளை துரிதமாக மற்றும் குறைந்தபட்ச செலவில் முடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கின்ற விதத்தில் கூகுள் ‘Task Mate’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் தங்களுடைய ஜிமெயில் கணக்கை வைத்து பயனாளர்கள் இணைந்துகொள்ள முடியும். 

 

அதில் கொடுக்கப்படக்கூடிய வேலைகளை செய்துமுடிப்பதன் வாயிலாக பணம் ஈட்டலாம். உதாரணத்திற்கு, கூகுள் நிறுவனம் ஒரு முகவரியை கொடுத்து அந்த இடத்தில் இருக்கும் XXXX என்ற கடையின் முகப்பை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் என்ற வேலையை கொடுக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வேலையை பயனாளர் ஒருவர் எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்று கடையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் அதனை சரிபார்த்த பிறகு அவருக்கு கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும். Google Business வெரிஃபிகேஷன் வேலைக்காக இப்படி கூகுள் செய்யலாம். 

இந்த  ‘Task Mate’  ஆப்பில் கூகுள் மட்டுமின்றி கூகுள் பிசினஸில் இருக்கும் பிற நிறுவனங்களும் கூட வேலையை பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் அந்த வேலைகள் எப்படி இருக்கும், எவ்வளவு வேலைக்கான சம்பளமாக வழங்கப்படும் என்பது போன்ற விசயங்கள் அந்த ஆப் பொதுவெளிக்கு விடப்பட்டால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். தற்சமயம் வெளியான புகைப்படங்களின் அடிப்படையில் பார்த்தால் கட்டணம் அனைத்தும் டாலர்களிலேயே வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கு ரூபாயில் விடப்படுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது. 

 

கூகுள் ஏற்கனவே பயனாளர்களின் தகவல்களை சேமிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால் இப்போது அதில் வழங்கப்படும் வேலையின் வாயிலாக பயனாளர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்பது சற்று மகிழ்ச்சியான விசயமாகவே பார்க்கப்படுகிறது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular