Friday, May 10, 2024
HomeTech ArticlesHalow Wifi : 1 கிமீ வரைக்கும் வேலை செய்திடும் புதிய வைபை தொழில்நுட்பம்

Halow Wifi : 1 கிமீ வரைக்கும் வேலை செய்திடும் புதிய வைபை தொழில்நுட்பம்

What Is HaLow WiFi?

If you’re not familiar with the term “HaLow” then this is the article for you. HaLow is a new standard for wireless internet that is able to transmit data at significantly lower frequencies than its predecessor, Wi-Fi. HaLow operates in the 900 MHz range, which makes it 50 percent closer to your body than Wi-Fi. 


நாம் நினைத்துப்பார்க்க முடியாத அசாத்தியமான விசயங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதிலே புதிய வரவு தான் Halow Wifi என்கிற புதிய தொழில்நுட்பம். இந்த புதிய வைபை தொழில்நுட்பத்தின் மூலமாக  சுமார் 1 கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் வைபை வசதியை பெற முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். Halow Wifi எப்படி வேலை செய்கிறது? தற்போதுள்ள Wifi க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? வாருங்கள் பார்க்கலாம்.

மொபைல் இன்டர்நெட்டில் 2G சேவையில் ஆரம்பித்து இன்று 5G க்கு முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் Wifi தொழில்நுட்பம் மட்டும் ஆரம்பித்த நிலையிலேயே தான் இருக்கிறது. சில மாறுபாடுகளை கண்டிருந்தாலும் கூட நாம் தற்போது பயன்படுத்திவரும் Wifi தொழில்நுட்பம் ஆனது அதிகபட்சமாக 150 அடி அல்லது 46 மீட்டர் வரைக்கும் தான் வேலை செய்யும். தற்போது முழு வீட்டையும் ஸ்மார்ட் ஆக்கும் தொழில்நுட்பங்கள் அதாவது ஆங்கிலத்தில் Internet of Things (IoT) என்று சொல்வார்களே அது வந்தபிறகு Wifi யின் வேலை செய்திடும் தொலைவு என்பது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. ஒருவர் வீட்டிற்குள் Wifi மோடம் ஐ வைத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள கேட்டையோ அல்லது சிசிடிவி கேமராவையோ Wifi உடன் இணைக்க நினைத்தால் அது முடியாமல் போகலாம். ஆனால் Halow Wifi செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் அது சாத்தியம் ஆகலாம். BusinessInsider கொடுத்துள்ள தகவல்படி Halow Wifi க்கு அனுமதி கிடைத்துவிட்டதாக தெரியவருகிறது.

What is Halow Wifi? How Does It Work?

நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் Wifi ஆனது 2.4GHz முதல் 5GHz வரைக்குமான ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தி செயல்படுகிறது. அதிக அதிர்வெண் கொண்ட அலைவரிசையை பயன்படுத்துவதால் அதிக அளவிலான தகவலை பரிமாறிக்கொள்ள முடியும். இதனால் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க முடியும். ஆனால் தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் Halow Wifi யில் sub-1 GHz ரேடியோ அலைவரிசையை பயன்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, இதனைக்கொண்டு 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொபைல், சிசிடிவி உள்ளிட்ட கருவிகளோடு இணைத்து இன்டர்நெட் சேவையை வழங்க முடியும். ஆனால் தற்போது உள்ளது போல அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க முடியாது. குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகளை பயன்படுத்துவதால் இன்டர்நெட் வேகம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு ஸ்மார்ட் ஹாம்க்கு அதுவே போதுமானதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதேபோல நாம் தற்போது பயன்படுத்தும் Wifi கருவிகளுக்கு தேவைப்படும் ஆற்றலை விடவும் வெகு குறைவான ஆற்றலே இதற்கு தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Halow Wifi செயல்பாட்டுக்கு இன்னும் முழுமையாக வரவில்லை. ஆனால் இதற்கான முயற்சிகள் வெகுவாக நடைபெற்று வருகின்றன.

Halow Wifi தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்ன? 

அதிக தொலைவில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை இணைக்க முடியும்.

ஸ்மார்ட் ஹோமில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும்

ஸ்மார்ட் தொழிற்சாலை, ஸ்மார்ட் அலுவலகம் போன்றவற்றை நிர்மாணிக்கும் போது  பேருதவியாக இது இருக்கும்.





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular