தொலைக்காட்சி, செய்தித்தாள், பருவ இதழ்கள், இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் இவை அனைத்திற்கும் அடிப்படை வருமானம் “விளம்பரங்கள்” . தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு விளம்பரங்கள் சென்றடையும் விதமும் மாறிக்கொண்டே இருக்கும். முன்பிருந்த பிரிண்ட் அட்வர்டைசிங் இன்டர்நெட் வருகைக்கு பிறகு டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றானது. தற்போது தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக Connected TV Advertising என்ற புது அட்வர்டைசிங் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. இந்த பதிவில் அது பற்றிய விவரங்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க,
டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றால் என்ன?
டிஜிட்டல் அட்வர்டைசிங் பற்றி தமிழில் படிக்க
What is Connected TV?
நாம் முன்பிருந்து பயன்படுத்துகிற தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகளை காண வேண்டுமெனில் அது கேபிள் மூலமாகவோ அல்லது டிஷ் மூலமாகவோ இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். நாம் சேனல்களை மாற்றி நமக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள முடியும். தற்போது மார்க்கெட்டில் இணைய வசதியுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டிகள் விற்பனைக்கு வந்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். பலர் அதனை பயன்படுத்தவும் தொடங்கி இருக்கலாம். அப்படி இணைய வசதியுடன் கூடிய டிவியை தான் ஸ்மார்ட் டிவி அல்லது Connected TV என அழைக்கிறோம். இன்டர்நெட் இணைப்போடு கூடிய இந்தவகை ஸ்மார்ட் டிவி யின் மூலமாக Youtube , Netflixs , Hotstar , Amazon Prime Video உள்ளிட்ட பல வீடியோ தளங்களில் இருக்கின்ற வீடியோக்களை பார்க்க முடியும். சாதாரண டிவியாகவும் இவை செயல்படும்.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
Connected TV Advertising
தற்போதைய யுகம் இன்டர்நெட் யுகம். ஆகையினால் தான் கணினி , மொபைல் போன்றவற்றை கடந்து தொலைக்காட்சியிலும் இன்டர்நெட் புகுந்துவிட்டது. ஸ்மார்ட் டிவியில் youtube போன்ற ஏதேனும் ஒன்றில் வீடியோ பார்க்கும் போது தோன்றுகிற விளம்பரம் தான் Connected TV Advertising என அழைக்கப்படுகிறது. எப்படி மொபைல் போன்களில் இணையத்தளத்தையோ அல்லது youtube வீடியோவையோ பார்க்கும் போது விளம்பரங்கள் தோன்றுகிறதோ அதனை போன்றே டிவி யிலும் விளம்பரங்கள் காட்டப்படும்.
சாதாரண டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஒரே மாதிரியான விளம்பரங்கள் தான் அனைவருக்குமே காட்டப்படும். ஆனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி ஸ்மார்ட் டிவியில் வீடியோக்களை பார்க்கும் போது “Targeted” விளம்பரங்கள் காட்டப்படும்.
ஏன் Connected TV Advertising வளர்ச்சியை நோக்கி செல்கிறது?
ஒரே பதில் “பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் டிவி யை பயன்படுத்த துவங்கி இருப்பதுதான்” . விளம்பரங்களை பார்க்க கூடியவர்கள் மக்கள், அவர்கள் எந்த கருவிகளை பயன்படுத்துகிறார்களோ அதில் தானே விளம்பரங்களை காட்டிட முடியும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 164 மில்லியன் மக்கள் ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை 204 மில்லியனாக 2022 இல் மாறிவிடும் என கணித்து இருக்கிறார்கள். அமெரிக்கா தவிர இங்கிலாந்து , சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது தான் ஸ்மார்ட் டிவி பயன்பாடு துவங்கி இருக்கிறது எனலாம். தொழில்போட்டி காரணமாக விலை குறைகின்ற பட்சத்திலும் அதிவேக இன்டர்நெட் சேவை அனைவருக்கும் கிடைக்கின்றபட்சத்திலும் இந்த எண்ணிக்கை மிக விரைவாக உயர வாய்ப்பிருக்கிறது. எப்படி மொபைல் அட்வர்டைசிங் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததோ அதனை போலவே Connected TV Advertising ம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்.
Advantages of Connected TV Advertising
நேரலையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை கண்ட காலங்கள் போய் விருப்பப்பட்ட நேரத்தில் தாங்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பினை ஸ்மார்ட் டிவி க்கள் வழங்குகின்றன. அதிவேக இன்டர்நெட் வசதியும் மிக குறைந்த விலையில் தற்போது கிடைக்கிறது. இவற்றின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்களின் என்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலை தான் Connected TV Advertising வாய்ப்பினை திறந்து வைத்துள்ளது.
பட்ஜெட் [Budget]
கணினி அல்லது மொபைல் போன்களில் விளம்பரத்தை காணும் போது ஒரே ஒரு நபர் தான் விளம்பரத்தினை பார்ப்பார். ஆனால் ஸ்மார்ட் டிவியில் விளம்பரங்கள் தோன்றும் போது தொலைக்காட்சியை பார்க்கின்ற 2 முதல் 3 நபர்கள் வரை பார்ப்பார்கள். இந்த எண்ணிக்கை Advertisers க்கு மிகப்பெரிய அளவில் லாபகரமானதாக அமையும். இதனால் விளம்பரங்களுக்கு செலவு செய்யும் தொகைக்கு பலன் இருக்கும். ஆகையினால் தான் அதிக முதலீடுகளை Connected TV Advertising இல் செய்ய அதிகம் பேர் முன்வருகிறார்கள்.
Targeting [சரியான வாடிக்கையாளர்கள்]
டிஜிட்டல் அட்வர்டைசிங்கில் எப்படி இடம், விருப்பம் , வயது உள்ளிட்ட பலவற்றையும் அறிந்து சரியான நபர்களுக்கு விளம்பரங்களை காட்டிட முடியுமோ அவை அத்தனையையுமே ஸ்மார்ட் டிவியில் விளம்பரத்தை காட்டிடும் போதும் செய்ய முடியும். அனைத்து வயதுடைய நபர்களும் ஸ்மார்ட் டிவி பார்ப்பார்கள் என்பதும் கூடுதல் சிறப்பு.
Ad Quality [விளம்பரங்களின் தரம்]
நாம் மொபைல் போன்களிலோ அல்லது கணினியிலோ விளம்பரங்களை காணும் போது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. ஆனால் மிகப்பெரிய ஸ்மார்ட் டிவியில் அதிவேக இன்டர்நெட் வசதி இருக்கும் போது HD தரத்திலான வீடீயோ விளம்பரங்களை காணும் போது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
Viewability and Completion Rate
மிகப்பெரிய திரைகளை ஸ்மார்ட் டிவி க்கள் பெற்று இருக்கும் என்பதனால் அதிக Viewability [பார்வையாளர்களின் பார்வையில் படுதல்] கண்டிப்பாக இருக்கும். ஸ்மார்ட் டிவி யில் விளம்பரங்களை அதிக நேரம் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் Completion Rate ம் அதிகமாக இருக்கும்.
Measurable
சாதாரண தொலைக்காட்சியில் விளம்பரங்களை பார்க்கும் போது எத்தனை நபர்கள் விளம்பரங்களை பார்க்கிறார்கள் என்பதனை துல்லியமாக Advertisers ஆல் கண்டறிய முடியாது. பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் குறிப்பிட்ட தொகையினை சேனலுக்கு வழங்கியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் ஸ்மார்ட் டிவியில் விளம்பரங்கள் இன்டர்நெட் மூலமாக காட்டப்படுவதனால் எத்தனை பேருக்கு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதனை அறிந்துகொள்ள முடியும். அதற்கேற்றவாறு மட்டும் செலவழித்தால் மட்டுமே போதுமானது.
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்
TECH TAMILAN
இதையும் படிங்க,
[easy-notify id=1639]