What is Digital Advertising | Tamil | டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

Internet is everywhere. So Everyone must know website creation.

Digital Advertising

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் இணையத்தின் மூலமாக எலெக்ட்ரானிக் கருவிகளின் வாயிலாக செய்யப்படும் விளம்பரங்கள் டிஜிட்டல் விளம்பரங்கள். ஆண்டுக்கு ஆண்டு பல மில்லியன் தொகை புழங்குகின்ற துறையாக இது வளர்ந்திருக்கிறது.


முந்தைய காலங்களில் விளம்பரங்கள் எவ்வாறு செய்யப்பட்டன என்பதனை ஏற்கனவே பார்த்தோம், படிக்காதவர்கள் கிளிக் செய்து படியுங்கள். இந்த பதிவில் டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றால் என்ன? என்பதனை பார்ப்போம்.
 டிஜிட்டல் அட்வர்டைசிங் என்பது தற்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணைய வசதி கொண்ட, நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மொபைல், கம்ப்யூட்டர் , இணையவசதி கொண்ட ஸ்மார்ட் தொலைக்காட்சி ஆகியற்றில் விளம்பரங்களை செய்வது. [Read the importance of digital marketing here]

டிஜிட்டல் அட்வர்டைசிங் முற்றிலுமாக இணையத்தின் உதவியால் இயங்குவதால் இன்டர்நெட் அட்வர்டைசிங் எனவும் அழைக்கப்படுகின்றது

டிஜிட்டல் அட்வர்டைசிங் எளிமையானது தான், நாம் இன்டர்நெட் உதவியுடன் இணையத்தில் படிக்கும்போது அல்லது பிற வேலைகளை செய்யும்போதோ (Browsing, Watching videos, etc) விளம்பரங்கள் காட்டப்படும்.

Connected TV Advertising

இதற்காக விளம்பரம் செய்யக்கூடியவர்கள் டிஜிட்டல் அட்வர்டைசிங் செய்வதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வைத்திருக்கக்கூடிய நிறுவனங்களை அணுகி (எந்த நிறுவனங்கள் என்பதனை விரிவாக பிறகு பார்க்கலாம்) அவர்களிடம் விளம்பரங்களை கொடுக்க வேண்டும். அவர்கள் அதனை அப்லோட் செய்து தொழில்நுட்பத்தின் உதவியால் இணையத்தை பயன்படுத்துவோருக்கு விளம்பரங்களை காட்டிட செய்வார்கள்.

அடுத்த பதிவில் டிஜிட்டல் அட்வர்டைசிங் இவ்வளவு அதிகமாக வளர்ச்சி அடைய காரணமென்ன என்பதனை பார்ப்போம்.

Previous

கடந்த காலங்களில் விளம்பரங்கள்

Next

டிஜிட்டல் அட்வர்டைசிங் வளர்ச்சி ஏன்?