Venus : NASA Mission
அமெரிக்காவின் நாசா உட்பட உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். தற்போது நாசா தனது ஆர்வத்தை வெள்ளி அதாவது வீனஸ் கிரகத்தை நோக்கியும் திருப்பியுள்ளது. எதற்க்காக இந்த புதிய திட்டங்கள்?
அமெரிக்காவின் நாசா உட்பட உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். தற்போது நாசா தனது ஆர்வத்தை வெள்ளி அதாவது வீனஸ் கிரகத்தை நோக்கியும் திருப்பியுள்ளது. எதற்க்காக இந்த புதிய திட்டங்கள்?
1990 ஆம் ஆண்டு வாக்கில் தான் மகெல்லன் [Magellan orbiter] எனும் ஆர்பிட்டரை அனுப்பியிருந்தது நாசா. அதற்பிறகு எதையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆர்பிட்டர் வீனஸ் சுற்றுவட்டப்பாதையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
நாசா : இரண்டு புதிய விண்வெளி திட்டங்கள்
நாசா தனது இரண்டு புதிய விண்வெளி திட்டங்கள் குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தது என்னவெனில் அந்த இரண்டு திட்டங்களும் சூரியனுக்கு அருகே இரண்டாவதாக இருக்கும் 500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட கோளான வெள்ளியை ஆராய அனுப்புவதை பார்த்துதான். இந்த புதிய திட்டங்கள் மூலமாக வெள்ளி கோளின் வளிமண்டலம் மற்றும் புவியியல் அம்சங்கள் குறித்து ஆராயப்பட இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களுக்காக 500 மில்லியன் டாலர்களை ஒதுக்கியும் பிரமிக்க வைத்துள்ளது அமெரிக்கா.
டாவின்சி [Davinci+] மற்றும் வெரிடாஸ் [Veritas] என பெயரிடப்பட்டுள்ள திட்டங்கள் 2028 – 2030 க்கு இடையே செயல்படுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது. டாவின்சி [Davinci+] திட்டத்தில் வெள்ளியின் மேற்பரப்பை ஆராய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தீவிர மேற்பரப்பு ஆய்வில் நோபல் கேஸ் என அழைக்கப்படும் இயற்கையாக உருவாகும் வாயு மூலக்கூறுகள், வேதியியல் மூலக்கூறுகள் போன்றவை ஆராயப்படும். அதேபோல வீனஸ் கிரகத்தில் எப்போதேனும் கடல் இருந்திருக்கிறதா என்பதை பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். மேலும் அதிக திறனுள்ள வீனஸ் கிரகத்தின் புகைப்படத்தை அது வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது திட்டமான வெரிடாஸ் [Veritas] மூலமாக வீனஸ் மேற்பரப்பு தீவிரமாக ஆராயப்படும். இதன் மூலமாக வீனஸ் கிரகத்தின் புவியியல் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் பூமியை விட வித்தியாசமாக வீனஸ் எப்படி வளர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கும் உதவும்.
நாம் வீனஸ் கிரகத்தை பற்றி எவ்வளவு குறைவாக அறிந்து வைத்துள்ளோம் என்பது வியக்க வைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களின் மூலமாக நாம் வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பு முதல் எரிமலைகள் வாயிலாக உட்பகுதி வரை அறிந்துகொள்ளப்போகிறோம் என நாசாவின் கிரக அறிவியல் பிரிவை சேர்ந்த டாம் வாக்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில பத்து ஆண்டுகளாகவே நாசாவின் செலவு பட்டியலில் அதிக இடம் பிடித்திருப்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள் தான். வீனஸ் குறித்து ஆராய்ச்சி செய்திடும் ஆராய்ச்சியாளர்கள் இதனால் வருத்தமடைந்த இருந்தனர். ஆனால் வீனஸ் குறித்து தெரிய வரும் கருத்துக்களும் அருகே இருக்கக்கூடிய கிரகத்தை பற்றி ஆராய வேண்டிய அவசியத்தைப் பற்றி புதியவர்கள் பேசுவதும் நாசாவை வீனஸ் நோக்கி அழைத்து சென்றுள்ளது. சிலரால் இறந்த கிரகம், எரியும் கிரகம் என அழைக்கப்படும் வீனஸ் நல்ல நிலையில் இருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். கிரகத்தின் அடர்த்தியான மேற்பரப்பில் மிதக்கும் பகுதிகள் இருக்கலாம் அங்கே உயிர்கள் வாழ்வதற்கும் கூட சாத்தியம் உள்ளது என சிலர் ஆச்சர்யப்படுத்தவும் செய்கிறார்கள்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.