Monday, May 20, 2024
HomeAppsTruecaller app is safe or not? | Security risk | bug |...

Truecaller app is safe or not? | Security risk | bug | Tamil

True-Caller-App-use-is-secure-or-not-740x400

All about Truecaller

truecaller பயனாளர்களுக்கு ICICI வங்கியில் தானாகவே ஒரு கணக்கு (UPI ID) துவங்கப்பட்டு அதுகுறித்த மெசேஜ் வர துவங்கியிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. தற்போது இது சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் truecaller ஆப் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது

 யார் அழைக்கிறார்கள் என்பதனை தெரிந்துகொள்ளவும் spam அழைப்புகளை தவிர்க்கவும் பயன்படுகின்ற truecaller ஆப்பில் மிகபெரிய பிரச்சனை எழுந்திருக்கின்றது . truecaller பயனாளர்களுக்கு ICICI வங்கியில் தானாகவே ஒரு கணக்கு (UPI ID) துவங்கப்பட்டு அதுகுறித்த மெசேஜ் வர துவங்கியிருக்கின்றது .

Your registration for UPI app has started…..

நிர்வாகத்தின் சார்பாக , புதிய வெர்சனில் ஏற்பட்டுள்ள bug காரணமாகவே இந்த பிரச்சனை எழுந்திருக்கிறது , தற்போது அது சரிசெய்யப்பட்டு புதிய வெர்சனும் வெளியிடப்பட்டுள்ளது . எந்தவித முக்கியமான தகவல்களும் இந்த பிரச்சனையில் கசியவிடப்படவில்லை என தெரிவித்துள்ளது .

TrueCaller App பயன்படுத்த எப்படி இருக்கிறது என யாரிடமாவது கேட்டால், பெரும்பாலானவர்களின் பதிலாக இருப்பது என்னவோ “நம்மை அழைப்பவர்களின் எண்ணை நாம் சேமித்து வைக்கவிட்டாலும் அழைப்பவர்களின் பெயர், இடம் உள்ளிட்ட தகவல்களை சொல்லிவிடும், பயனுள்ளதாக இருக்கிறது” என்பார்கள். அதோடு பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது.

TrueCaller இணையதளத்தில் https://www.truecaller.com மொபைல் எண்ணை கொடுத்தும் பெயர், இடம் போன்ற தகவல்களை பெற முடியும். ஆனால் TrueCaller App எவ்வாறு நம்மிடம் இல்லாத நபரின் பெயர் இடம் உள்ளிட்ட தகவல்களை காட்டுகிறது? எவ்வாறு அந்த தகவல்களை பெறுகிறது? யாரிடமிருந்து பெறுகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலை தேடும் போது தான் எவ்வளவு பெரிய Security Risk அதில் இருக்கிறது என்பது நமக்கு புரியும்.

TrueCaller App எவ்வாறு வேலை செய்கிறது?

TrueCaller App ஐ இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுடைய மொபைல் எண் மற்றும் பெயர்களை மட்டுமல்லாது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் நபர்களின் மொபைல் எண்களையும் பெயர்களையும் பெற்றுக்கொள்கிறது. அனைத்து தகவல்களும் TrueCaller சர்வரில் அப்லோட் செய்யப்படுகிறது. பிறகு எவரேனும் மொபைல் எண் குறித்த தகவல்களை தேடிடும் போது நம்மிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை தேடுபவர்களுக்கு கொடுக்கிறது.

TrueCaller App என்னென்ன விவரங்களை சேகரிக்கிறது என்பது அதனுடைய PRIVACY POLICY இல் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்களது IP முகவரி, மொபைல் கருவி அடையாள எண் , வருகின்ற போகின்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் என பல தகவல்களை TrueCaller App சேகரிக்கிறது.

When You install and use the Services, Truecaller will collect personal information from You and any devices You may use in Your interaction with our Services. This information may include e.g.: geo-location; Your IP address; device ID or unique identifier; device manufacturer and type; device and hardware settings; SIM card usage; applications installed on your device; ID for advertising; ad data, operating system; web browser; operator; IMSI; connection information; screen resolution; usage statistics; default communication applications; access to device address book; device log and event information; logs, keywords and meta data of incoming and outgoing calls and messages; version of the Services You use and other information based on Your interaction with our Services such as how the Services are being accessed (via another service, web site or a search engine); the pages You visit and features you use on the Services; the services and websites You engage with from the Services; content viewed by You, content You have commented on or sent to us and information about the ads You see and/or engage with; the search terms You use; order information and other usage activity and data logged by Truecaller’s servers from time to time. Truecaller may collect some of this information automatically through use of cookies and You can learn more about our use of cookies in our Cookie Policy.

எங்கு பிரச்சனை வருகிறது?

How-to-block-annoying-spam-calls-and-ID-callers

TrueCaller App பதிவு செய்பவரின் தகவல்களை மட்டும் கொண்டிருந்தால் கூட ஆபத்து இல்லை எனலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் பதிவு செய்பவரின் மொபைலில் என்னுடைய எண் இருக்கிறது என்பதற்க்காக என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய குற்றம், இந்த இடத்தில் தான் TrueCaller உடன் பிரச்சனை வருகிறது. அடுத்தபடியாக நம்பிக்கையான மூன்றாம் நிலை நிறுவனங்களிடம் தகவல்களை பகிர்ந்துகொள்வதாக தனது PRIVACY POLICY இல் மிக தெளிவாக கூறுகிறது. அந்த மூன்றாம் நிலை நிறுவனங்கள் தான் நமக்கு தினமும் call செய்து தொந்தரவு செய்கின்ற SPAM Call makers . ஆனால் SPAM Call களை தடுக்க வசதி இருப்பதாக TrueCaller கூறுகிறது. [வந்ததே TrueCaller ஆல் தான் என்பது பலருக்கு தெரிவதில்லை]

நம்முடைய பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை பொது வெளியில் இடம்பெறுமாறு செய்துள்ளது. மொபைல் எண்ணை பதிவிட்டால் பெயர் மற்றும் இருப்பிடம் போன்றவற்றை TrueCaller காட்டுகிறது.

truecaller app பயன்படுத்தலாமா?

True-Caller-App-use-is-secure-or-not-740x400
TrueCaller App உங்களுடைய தகவல் மட்டுமின்றி உங்களது நண்பரது தகவலையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்துமே ‘Data’ தான். அதற்காகத்தான் ஒவ்வொருவருமே இலவசம் இலவசம் என அனைத்தையுமே நமக்கு வழங்குகிறார்கள். Google ,facebook என அனைத்துமே அப்படிப்பட்டதுதான். ஆனால் இவை நம்முடைய தகவல்களை பொதுவெளியில் வைப்பதில்லை. ஆனால் TrueCaller நமது தகவல்களை பொதுவெளியில் வைக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. 

நம்மை அழைப்பவர்கள் யார் என்பதனை அவர்களிடம் கேட்டே தெரிந்துகொள்ளலாம் , அதற்கு முன்பாக மூலமாக தெரிந்துகொண்டு என்ன செய்யபோகிறோம்

 

TrueCaller இல் இருந்து நமது தகவல்களை நீக்க முடியுமா?

நிச்சயமாக முடியும், இந்த லிங்கில் https://www.truecaller.com/unlisting சென்று நமது மொபைல் எண்ணை கொடுத்து நமது தகவல்களை TrueCaller இல் காட்டிடாமல் செய்து கொள்ள முடியும்.

கவனமாக இருக்க வேண்டியது அவசியம்

TrueCaller மட்டுமல்ல, நாம் இலவசமாக பயன்படுத்துகின்ற ஒவ்வொரு ஆப்பும் நம்மிடம் இருந்து தகவல்களை பெற முயற்சித்துக்கொண்டே இருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்திடும் போது மிகவும் கவனமாக permissions களை கொடுத்திட வேண்டும். சில ஆப்கள் தேவையே இல்லாமல் நமது Phone book , Call , Message போன்றவற்றை எல்லாம் access செய்வதற்கு permission கேட்கும். அவற்றையெல்லாம் கவனிக்காமல் OK கொடுத்தால் அவ்வளவுதான்.

ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தகவல்கள் பிறரால் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என கூறி நீதிமன்றம் வரை சென்று நமது தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் அறியக்கூடாது என போராடி வருகிறோம். ஆனால் அப்படி பேசிடும் நாமே எங்கோ இருக்கும் வெளிநாட்டு கம்பெனிக்காரனுக்கு ஒரு சிறிய App மூலமாக நமது தகவல்களையும் அன்றாடம் நாம் என்ன செய்கிறோம் என்பதனையும் நமக்கு என்ன பிடிக்கும் என்ன என்பதனையும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறோம்.

விழித்துக்கொள்வோமா?






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular