Thursday, November 21, 2024
HomeCryptocurrencyஇந்தியாவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது எப்படி? | Cryptocurrency in tamil

இந்தியாவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது எப்படி? | Cryptocurrency in tamil

Top Cryptocurrency Exchanges

இந்தியாவில் இருப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் பெரிய அளவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தியாவில் இருப்பவர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திட விரும்பினால் அவர்களுக்காக Top Cryptocurrency Exchanges குறித்த தகவல்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

இன்னமும் இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை கையாள்வதற்கான விதிமுறைகளை வகுக்கவில்லை என்றாலும் கூட இந்தியாவில் உள்ள ஒருவர் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யவோ அவற்றை வைத்துக்கொள்ளவோ அல்லது விற்கவோ எந்தவித தடையும் இல்லை. ஆகவே, இந்தியர்கள் தற்போது அதிகமாக முதலீடு செய்திட ஆரம்பித்துவருகிறார்கள். கிரிப்டோகரன்சிகளில் மக்கள் அதிகமாக முதலீடு செய்திட ஆரம்பித்திருப்பதால் அதற்கான வரையையை இந்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யும்  எதிர்பார்க்கப்படுகிறது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது என்பது கிட்டத்தட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்வது போன்றது தான்.

பின்வரும் மொபைல் ஆப்கள் மூலமாகவே இந்தியாவில் உள்ள ஒருவரால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திட முடியும். இந்திய ரூபாயை உங்களது வங்கிக்கணக்கில் இருந்து இந்த ஆப்களுக்கு மாற்றி நீங்கள் அதன்மூலமாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியை வாங்கலாம். பிறகு விற்கவேண்டிய சூழல் ஏற்படும்போது நீங்கள் அதனை விற்று மீண்டும் இந்திய ரூபாயாக உங்களது வாங்கிக்கணக்கிற்கு அனுப்பிக்கொள்ள முடியும்.

CoinDCX

மும்பையை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் 2018 இல் துவங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டுவரும் Cryptocurrency Exchange களில் இதுவும் ஒன்று. தற்போது இந்த ஆப் மூலமாக சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துவருகிறார்கள். குறிப்பாக இந்த ஆப்பில் மிகக்குறைவான trading fee வாங்கப்படுவதாகவும் பண பரிமாற்றத்தை இலவசமாகவே மேற்கோள்ள முடியும் என்கிறார்கள். 200 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் இதிலே இருக்கின்றன. இதில் நீங்கள் முழுமையாக ஒரு காயினை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் உள்ள சிறு தொகையை நீங்கள் முதலீடாக செய்யலாம்.

Zebpay

2014 இல் உருவாக்கப்பட்ட இந்த ஆப்பும் தற்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது. நீங்கள் இந்த ஆப் மூலமாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதற்கு முன்னதாக அவர்களின் கட்டண விதிமுறையை ஒருமுறை பார்த்துவிடுங்கள். Zebpay ஆப்பானது தகவல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

CoinSwitch Kuber

2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆப்பானது ஐபிஎல் போட்டியின் போது பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. தற்போது டாப் 5  Cryptocurrency Exchanges களில் ஒன்றாக இது இருக்கிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ 100 முதற்கொண்டு ஒருவரால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய முடியும்.

WazirX

நிசால் ஷெட்டி என்பவரால் 2017 இல் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இந்த ஆப்பை Binance வாங்கியது. Binance உலக அளவில் முன்னனி Cryptocurrency Exchange என்பது கவனிக்கத்தக்கது. இதிலே இணைந்தவர்கள் கிரிப்டோகரன்சியில் இந்திய ரூபாயிலேயோ அல்லது அமெரிக்க டாலரிலேயோ முதலீடு செய்யலாம். இவர்களே WRX என்ற கிரிப்டோகரன்சியை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Unocoin

இந்தியாவை பொறுத்தவரைக்கும் மிகவும் பழமையான Cryptocurrency Exchange இதுதான். இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து பேசப்படாத 2013 ஆம் ஆண்டிலேயே இது துவங்கப்பட்டது. இதிலே 15 லட்சம்  பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஆப்பின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் நீங்கள் எப்போது எவ்வளவு கிரிப்டோகரன்சியை விற்க வேண்டும் என்பதை முன்கூட்டியே செட் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் வேறு ஏதேனும் Cryptocurrency Exchange ஐ பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் அதுபற்றி கமெண்டில் குறிப்பிடுங்கள்.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular