Saturday, November 23, 2024
HomeUncategorizedமீண்டும் வருகிறது PUBG, இதுதான் புதிய மாற்றங்கள்

மீண்டும் வருகிறது PUBG, இதுதான் புதிய மாற்றங்கள்

PUBG கேம் விளையாட்டால் ஏற்படும் 5 எதிர்விளைவுகள் | 5 Negative Side Effects of PUBG

PUBG MOBILE INDIA

சீனாவுடனான உரசல், பாதுகாப்பு காரணங்கள், இளைஞர்களின் உடல்நலன் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தடை விதிக்கப்பட்ட PUBG மொபைல் கேம் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்திய பயலார்களுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.


PUBG மொபைல் கேம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இம்முறை வெளியாகும் PUBG கேமின் பெயரிலேயே இந்தியா என்ற வார்த்தை இருக்கும்படி PUBG MOBILE INDIA என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவொரு இந்திய விளையாட்டு என்ற அடையாளம் கிடைக்கும் என நம்புகிறது PUBG கேமை வெளியிடும் நிறுவனம். அதுபோலவே விளையாட்டிலும் சில மாறுதல்கள் இந்தியர்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளது. உதாரணத்திற்கு, முன்பு இருக்கும் PUBG விளையாட்டில் வரும் அவதார் உருவத்திற்கு பாதி அளவிலேயே ஆடை அணிவிக்கப்பட்டு இருக்கும். நாம் விளையாடி விளையாடி மீதமிருக்கும் ஆடைகளை வென்றோ அல்லது வாங்கியோ போட வேண்டி இருக்கும். ஆனால் தற்போதைய மாற்றத்தில் முழு ஆடையுமே அணிந்திருக்கும் விதத்திலான அவதார் இடம்பெற்றுள்ளது. 

 

இந்தியாவில் PUBG உள்ளிட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டதற்கு மிக முக்கியக்காரணம் அவை தகவல்களை சேமிக்கின்ற சர்வர்களை இந்தியாவிற்கு வெளியே வைத்திருப்பது தான். அண்மையில் இந்திய அரசு, இந்தியப் பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் இந்திய எல்லைக்குள் தான் சேமிக்கப்படவேண்டும் என கட்டுப்பாடு வித்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்திடும் விதமாக PUBG நிறுவனம் Microsoft இன் Azure Cloud இல் இந்திய பயனாளர்களின் தகவல்களை சேமித்திட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சர்வர்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

 
PUBG கேம் விளையாட்டால் ஏற்படும் 5 எதிர்விளைவுகள் | 5 Negative Side Effects of PUBG

அடுத்ததாக PUBG விளையாட்டின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டு என்பது அது இந்திய இளைஞர்களின் உடல் நலன் மற்றும் மன நலனில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பதுதான். அதற்கும் விளையாடும் நேரத்தில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை செய்துள்ளதாக தென்கொரியா PUBG நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல PUBG விளையாட்டு சார்ந்து வேலை பார்க்க 100 பேரை வேலைக்கும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதனால் முற்றிலும் வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிற விளையாட்டு PUBG என்ற எண்ணம் மாற்றப்படும் என நம்புகிறது PUBG நிறுவனம். 

PUBG விளையாட்டு ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கூட பலர் அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டு தான் இருந்தார்கள். PUBG மீண்டும் வருகிறது என்ற செய்தி PUBG விளையாட்டை விரும்புகிறவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தாலும் கூட பிள்ளைகள் விளையாட்டிலேயே மூழ்கிக்கிடக்கிறார்களே என்ற பெற்றோரின் கவலை கூடப்போகிறது என்பதையும் மறுக்க முடியாது. 

PUBG க்கு மாற்றாக களமிறங்கும் இந்திய கேம் FAU-G

Click Here

Garena Free Fire தடை செய்யப்படுமா?

Click Here

PUBG விளையாட்டால் ஏற்படும் 5 எதிர்விளைவுகள்

Click Here






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular