Saturday, May 11, 2024
HomeAppsPUBG க்கு மாற்றாக களமிறங்கும் இந்திய கேம் FAU-G

PUBG க்கு மாற்றாக களமிறங்கும் இந்திய கேம் FAU-G

Fearless And United-Guards FAU-G


இந்திய இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக்கூறி PUBG உள்ளிட்ட 118 சீன ஆப்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு. இந்த சூழ்நிலையில் PUBG க்கு மாற்றாக இந்தியாவில் தயாரான FAU-G கேம் கமிறங்கப்போவதாக இந்தி நடிகர் அக்சய் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக பல்வேறு நடவெடிக்கைகளை எடுத்துவருகிறது இந்தியா. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்கள் தயாரித்த ஆப்களை இந்திய அரசு தடை செய்துவருகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஆப்களின் பட்டியலில் இந்திய இளைஞர்களால் பெரிதும் விரும்பி விளையாடப்பட்ட PUBG மொபைல் கேமும் இடம்பெற்று இருந்தது. இதற்கான காரணமாக, இந்திய இறையாண்மை மற்றும் இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்த ஆப்கள் செயல்படுகின்றன என இந்திய அரசு சார்பாக சொல்லப்பட்டது.

இந்திய அரசு தடை செய்த பல ஆப்களுக்கு மாற்றான இந்திய ஆப்கள்  தற்போது கூகுள் பிளேஸ்டோரில் இடம்பிடித்து இருக்கின்றன. அந்த வகையில் PUBG க்கு மாற்றாக FAU-G விரைவில் வெளியாகும் என இந்தி நடிகர் அக்சய் குமார் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

Supporting PM @narendramodi’s AtmaNirbhar movement, proud to present an action game,Fearless And United-Guards FAU-G. Besides entertainment, players will also learn about the sacrifices of our soldiers. 20% of the net revenue generated will be donated to @BharatKeVeer Trust #FAUG pic.twitter.com/Q1HLFB5hPt

— Akshay Kumar (@akshaykumar) September 4, 2020

FAU-G கேம் எங்கு தயாரானது?

FAU-G என்பதற்கான விளக்கம் Fearless And United-Guards. இந்த கேம் குறித்து ட்விட்டரில் அக்சய் குமார் தெரிவிக்கும் போது “பிரதமர் அவர்களின் ஆத்ம நிர்பார் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரான இந்த சூட்டிங் கேம் வெளியாக இருக்கிறது. விளையாடுவதோடு மட்டுமில்லாமல் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆப் உதவும். இந்த ஆப் மூலமாக வருகின்ற நிகர லாபத்தில் 20% இந்திய உள்துறை அமைச்சரின் டிரஸ்ட்க்கு அனுப்பி வைக்கப்படும்” எனவும் தெரிவித்து இருந்தார்.

உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவெடிக்கைகளை மையப்படுத்தியே கேம் செயல்பாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் இந்த ஆப்பானது கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோர் ஆகியவற்றில் வெளியாகும்.

இந்த FAU-G கேம் பெங்களூருவை மையமாக வைத்து செயல்படும் nCore எனும் மொபைல் கேம்களை உருவாக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் குறித்து அதன் நிறுவனர் பேசும்போது “இந்திய பிரதமரின் அழைப்பிற்கு இணங்க இந்திய மற்றும் உலக அளவில் ஒரு சிறந்த கேமை வடிமைத்திருப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்து இருக்கிறார்.

சீன ஆப்களுக்கு மாற்றாக பல இந்திய ஆப்கள் வெளியாகிக்கொண்டு வந்தாலும் கூட பழைய ஆப்களுக்கு கொடுத்த வரவேற்பை பயனாளர்கள் கொடுப்பது கிடையாது. FAU-G கேம்க்கு இந்திய இளைஞர்கள் எப்படிப்பட்ட வரவேற்ப்பை கொடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. FAU-G இந்திய இளைஞர்களால் விரும்பப்பட வாய்ப்பு இருக்கிறதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular