- முன்னனி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் , டிவி யை அறிமுகப்படுத்துகிறது
- இந்தியாவில் 2020 இல் விற்பனைக்கு வரும்
செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் (One Plus) இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது . அண்மையில் எகனாமிக் டைம்ஸ் (Economic Times) நாளிதழுக்கு ஒன்பிளஸ் சிஇஓ அளித்துள்ள பதிலில் “ஒன்பிளஸ் நிறுவனம் தொலைக்காட்சி தயாரிப்பில் முனைப்பாக ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் விற்பனைக்கு வருமெனவும் தெரிவித்தார் “
தற்போது விற்பனையில் இருக்கக்கூடிய மற்ற தொலைக்காட்சிகளில் இருக்கக்கூடிய வசதிகளை காட்டிலும் அதிசிறப்பு வாய்ந்ததாக தங்களது தொலைக்காட்சிக்கான சாப்ட்வேர் ஐ உருவாக்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார் . இத்தகைய முயற்சியினாலேயே தான் ஏற்கனவே 2019 இல் வெளியிடுவதாக இருந்த தேதி தள்ளிப்போய் 2020 இல் வெளியிடப்பட இருக்கின்றது .
ஒன்பிளஸ் மொபைல் மற்ற மொபைல்களை காட்டிலும் சற்று அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் அதனுடைய சிறப்பங்சங்களினால் மக்களால் விரும்பப்படுகிறது . அதனைபோலவே தொலைகாட்சியின் விலையிலும் ஏற்றம் இருக்குமா என்பதற்கு, மற்ற நிறுவன தொலைக்காட்சிகளின் விலையோடு போட்டி போடுவதாக இருக்கும் .
சிறப்பான வசதிகளை கொடுக்கின்றபட்சதில் மக்கள் விலையினை ஏற்பார்கள் என்பது நாம் அறிந்ததுதான் என்பதனால் அதிகமான சிறப்பம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம் .
இந்திய சந்தையில்தான் முதலில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒன்பிளஸ் அபிமானிகள் தயாராக இருக்கலாம் .
Also read about …
ஒன்பிளஸ் 6T மெக்லாரன் | OnePlus 6T McLaren Edition Price Review | Tamil
TECH TAMILAN