Moon has Oxygen
800 கோடி மக்கள் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு வாழ தேவையான ஆக்சிஜன் இருக்கிறது என விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளார்கள். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
https://youtu.be/fbclXqkIj7Q
இயற்கையில் பூமிக்கு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்தவித ஆபத்தும் நேரப்போவது இல்லை என்றாலும் கூட அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதல் போன்ற மனிதர்களால் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக மனித இனம் பல்வேறு பேரழிவுகளை சந்தித்தே தீர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போதில் இருந்தே பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆராச்சிகளை நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டன. பூமியைத்தவிர வேறெந்த கிரகம்? பூமிக்கு அருகே இருக்கக்கூடிய நிலா தான் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பயணம் செய்யவும் எளிதானது என்றபடியால் அதனை நோக்கியே ஆய்வுகள் முதலில் நடந்தன. ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் என்பது அங்கே இல்லை என்பதனால் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். இது மீண்டும் நிலாவின் பக்கம் விஞ்ஞானிகளை திருப்பும் என எதிர்பார்க்கலாம். அதுவும் கொஞ்சமல்ல, சுமார் 800 கோடி மக்கள் 1 லட்சம் ஆண்டுகளுக்கு சுவாசிக்கக்கூடிய அளவிலான ஆக்சிஜன் நிலாவில் இருக்கிறதாம். ஆஹா, அப்போ விரைவில் அங்கே போகலாம் என நினைத்துவிடாதீர்கள். அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நிலாவில் மேற்பரப்பில் இருக்கக்கூடிய பாறைகளில் தான் இவ்வளவு ஆக்சிஜன் மற்ற வேதிப்பொருள்களுடன் இணைந்து இருக்கிறதாம். அந்தப்பாறைகள் 45% ஆக்சிஜனை கொண்டுள்ளன. ஆனால் அவை மற்ற வேதிப்பொருள்களுடன் மிகவும் நெருக்கமாக பிணைந்துள்ளன. இதனை பிரித்து எடுத்தால் தான் மனிதர்களால் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜன் கிடைக்குமாம். ஆனால் மற்ற வேதிப்பொருள்களில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுப்பதற்கு பெரிய பெரிய அறிவியல் ஆய்வு கருவிகள் மற்றும் அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படும் என தெரிவித்துளார்கள் விஞ்ஞானிகள்.
எது எப்படியோ…நிலாவில் ஆக்சிஜன் இருக்கும் செய்தி மகிழ்ச்சிகரமான செய்தி தான். வரப்போகும் காலகட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் நடக்கும் போது அனைத்தும் சாத்தியமே.