Sunday, May 12, 2024
HomeAppsஉங்களுக்கு தெரியமாலேயே பேஸ்புக் கண்காணிக்கிறது : ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்

உங்களுக்கு தெரியமாலேயே பேஸ்புக் கண்காணிக்கிறது : ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்போவதில்லை, கோகோ கோலா அதிரடி, ஏன்? | “Stop Hate For Profit”
செனட் நீதித்துறை குழு நடத்திய விசாரணையில் பங்கேற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பயனாளர்களின் ஆன்லைன் நடவெடிக்கையை கண்காணிப்பதற்கு ரகசியமாக சில புரோகிராம்களை பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டார். இதனைக்கொண்டு பேஸ்புக்குக்கு வெளியேயும் பயனாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பேஸ்புக் அறிந்துகொள்கிறது.

இன்டர்நெட் பயன்படுத்துகிற ஒவ்வொருவரின் நடவெடிக்கையையும் பேஸ்புக் கண்காணிக்கவே செய்கிறது. ஆனால் இதுவரைக்கும் வெளிப்படையாக பேஸ்புக் இதனை ஒப்புக்கொண்டது கிடையாது. நவம்பர் 17,2020 அன்று செனட் நீதித்துறை குழு நடத்திய விசாரணையில் மிசோரி குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி எழுப்பிய கேள்விக்கு ‘ஆமாம் பேஸ்புக்கை தாண்டியும் இணையத்தில் பயனாளர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களது ஆன்லைன் நடவெடிக்கையை கண்காணிக்க பேஸ்புக்கிடம் புரோகிராம்கள் இருக்கின்றன’ என்பதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் பணியாற்றிய ஒருவர் தன்னிடம் பேஸ்புக் இரண்டு புரோகிராம்களை ரகசியமாக பயன்படுத்துகிறது என்றும் Tasks மற்றும் Centra என அழைக்கப்படும் இந்த இரண்டு புரோகிராம்கள் ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தணிக்கை விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படவும் பயனாளர்கள் பேஸ்புக்கிற்கு வெளியே எப்படி செயல்படுகிறார்கள் என்பதனை அவர்கள் அறியாமலேயே கண்காணிக்கும் பொருட்டும் பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்திருந்தார் என்பதைக்கூறி மார்க்கிடம் கேள்வி எழுப்பினார்.

Zuckerberg refused to answer whether @Facebook ever uses Centra to track and monitor American citizens

— Josh Hawley (@HawleyMO) November 17, 2020

மிசோரி குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அமெரிக்கர்களை கண்காணிக்க Centra எனப்படும் டூலை பேஸ்புக் பயன்படுத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மார்க் ஜுக்கர்பெர்க் மறுத்துவிட்டார்’ என தெரிவித்திருந்தார்.

If we don’t take action now to rein in the #BigTech corporations, they will run this country. That means repealing #Section230 and it means updated antitrust laws for 21st century pic.twitter.com/qT4bgn4KJ2

— Josh Hawley (@HawleyMO) November 18, 2020

மேலும் பல கேள்விகளுக்கு மார்க் ஜுக்கர்பெர்க் ‘எனக்குத் தெரியாது, என்னால் நினைவுபடுத்த முடியவில்லை, எனக்கு நினைவில் இல்லை, நான் பின்னர் பதில் கூறுகிறேன்’ என்பதையே பதிலாக கூறினார் எனவும் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்களை கட்டுப்படுத்தாவிடில் அவர்கள் இந்த நாட்டை ஆள்வார்கள் என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். வெளிநாடுகளில் குறைந்தபட்சம் பேஸ்புக்கிடம் கேள்விகளாவது கேட்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சில சமயங்களில் மட்டுமே இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு நிறைவான சட்டங்கள் கொண்டுவரப்படாவிடில் என்றும் இப்படிப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular