Women Success Story
சொந்தமாக தொழில் செய்வது என்பது பலரது கனவாக இருக்கும். ஆனால் சொந்தமாக தொழில் துவங்கி வெற்றி பெறுவது ஆண்களுக்கே சவாலான காரியம். ஆனால் சொந்தமாக ஆட்டோமொபைல் கடை நடத்தி வெற்றி நடையும் போடுகிறார் கர்நாடகாவை சேர்ந்த மோனிகா. அவர் எப்படி வெற்றி பெற்றார்.
இந்தியாவில் செயல்பட்டுவரும் சர்வதேச எண்ணெய் நிறுவனமான ஷெல் ஒரு முன்னெடுப்பை செய்துவருகிறது. தடைகளை உடைத்து வெற்றி பெறுகிறவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ‘Great Things Happen When We Move’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியமான நோக்கம் தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நபர்களை அடையாளப்படுத்துதல், அவர்களோடு பயணித்தல், குறிப்பாக வெற்றி பெற முயற்சிக்கும் பெண்களுக்கு துணை நிற்றல் மற்றும் அவர்களை பெருமை படுத்துதல் உள்ளிட்டவை ஆகும். அதிலே பயன்பெற்றவர் தான் மோனிகா.
கர்நாடகாவின் ஹாசன் எனும் இடத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் மோனிகா. குடும்பத்தின் நிலையால் வறுமையையும் சவால்களையும் தொடர்ச்சியாகவே சந்தித்து வந்தார். இவை அனைத்தும் அவருக்கு போராடும் குணத்தை கொடுத்தன. கல்வி மற்றும் தனித்துவம் இவை தான் வாழ்க்கையில் மேலே செல்வதற்கு உகந்த வழி என உணர்ந்திருந்தார். பிகாம் படித்தார் மோனிகா.
பின்னர் பெங்களூருவில் மெக்கானிக் வேலை செய்திடும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அங்கே சென்ற பின்னரும் கல்வியை தொடரவே செய்தார். எம்காம் முடித்த பின்னர் அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலைக்குள் அடைந்துகொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. சுதந்திரமாக ஒரு தொழில் செய்திட வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தனது கணவரின் மெக்கானிக் கடைக்கு அருகிலேயே ஒரு ஆட்டோமொபைல் கடை திறக்க முடிவு செய்தார்.
தனது கணவர் ஒரு மெக்கானிக்காகவே இருந்துவிடக்கூடாது என்பதும் தனது கணவருக்கு ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் இருப்பதும் அவர் ஆட்டோமொபைல் கடையை தெரிவு செய்திட காரணமாக அமைந்தது. கடையை ஆரம்பித்த புதிதில் மோனிகாவிற்கு அங்கிருக்கும் உபகரணங்கள் பற்றிய அறிமுகம் பெரிதாக இருக்கவில்லை. ஆனால் அவர் தனது கணவரிடம் இருந்து வெகு விரைவாகவே அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தற்போது குறிப்பிட்ட அந்த நகரில் சிறப்பாக செயல்படும் ஆட்டோமொபைல் கடைகளில் மோனிகாவின் கடையும் ஒன்று.
கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் காரணமாக தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது, அந்த காலகட்டங்களிலும் மாதம் 25,000 EMI மற்றும் 16,000 வாடகை ஆகியவற்றை செலுத்த வேண்டிய தேவை இவர்களுக்கு இருந்தது. அப்போது கடந்த கால சேமிப்பு பணம் தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாக கூறும் மோனிகா தற்போது தொழில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். ஏற்கனவே அவர் வருமானம் ஈட்டியதை விடவும் 70% அதிக வருமானத்தை தற்போது அவர் ஈட்டிக்கொண்டு இருக்கிறார்.
வழக்கமாக ஷெல் நிறுவன விற்பனை பிரதிநிதி வாரம் தோறும் சென்று பணம் வசூல் செய்வார். ஆனால் பொது முடக்க காலங்களில் விற்பனை மந்தமானதைத் தொடர்ந்து மோனிகாவிற்கு உதவும் விதமாக வாரம் தோறும் சென்று பணம் வசூல் செய்வதை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது ஷெல். தற்போது இரண்டாவது கடை திறக்கும் மனநிலையில் இருக்கிறார் மோனிகா. தனது கணவர் மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு வர முடிவு செய்தால் அதை செய்திட இருப்பதாக சொல்லும் மோனிகா தற்போது சுயகாலில் நின்றுகொண்டு வெற்றிநடை போடுகிறார்.
மோனிகாவின் கதை பல பெண்களை ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம்.
இந்தியாவின் முதல் பெண் சரக்கு வண்டி ஓட்டுனர்
Read Here
சுயதொழில் வெற்றிக்கதைகள்
Read Here