நீங்கள் திறம்பட எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திடும் போது அதன் குவாலிட்டியில் ஏற்படும் குறைபாட்டை கண்டு மனம் வருந்தி இருப்பீர்கள். ஆனால் அந்த பிரச்சனையை 30 வினாடிகளில் சரி செய்துவிட முடியும்.
நீங்கள் HD வடிவில் மிகச்சிறந்த போட்டோவை பேஸ்புக்கில் அப்லோடு செய்தாலும் இறுதியில் அதன் குவாலிட்டி போய்விடுகிறதா? இது பெரும்பாலானவர்கள் பேஸ்புக்கில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான். ஆனால் இந்த பிரச்சனையை மிக எளிமையாக சரி செய்துவிட முடியும். அதற்கு முன்னதாக ஏன் பேஸ்புக் இப்படி போட்டோவின் தரத்தை குறைத்துவிடுகிறது என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வது அவசியம்.
Facebook Compress Photos
மேலிருக்கும் படத்தில் வலது புறமாக இருக்கும் நல்ல போட்டோவை அப்லோடு செய்தால் பலருக்கு இடது புறத்தில் இருப்பது போன்ற மங்கலான போட்டோவே பேஸ்புக்கில் வரும்.
பேஸ்புக் சில நிபந்தனைகளை வைத்திருக்கிறது. நீங்கள் தரவேற்றம் செய்திடும் போட்டோ ஒருவேளை அதற்கு உடன்படாமல் போனால் பேஸ்புக் அந்த புகைப்படத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும், அதனை ஆங்கிலத்தில் “compression” என்று சொல்லுவார்கள்.
அதன்படி,
நீங்கள் தரவேற்றம் செய்திடும் போட்டோவானது 720px, 960px or 2048px அகலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதேசமயம் முகப்பு போட்டோவாக [Cover Photo] இருக்கின்றபட்சத்தில் அதன் அளவு 851px X 315px என இருக்க வேண்டும்.
அதேபோல நீங்கள் தரவேற்றம் செய்திடும் புகைப்படமானது 100KB அளவிற்கு குறைவானதாகவும் அதனை JPEG with an sRGB color profile வடிவில் சேமித்து தரவேற்றம் செய்திட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாறுபட்டால் பேஸ்புக் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விடும். பிறகென்ன உங்களது போட்டோ தரம் குறைந்து மங்கலாக இருக்கும்
Change facebook settings
அதேபோல நீங்கள் ஆல்பம் பதிவேற்றம் செய்திடும் போது More Options பகுதியில் இருக்கும் “High Quality” என்ற ஆப்சனை டிக் செய்திடுங்கள். உங்களது மொபைல் போனில் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் பயன்படுத்தினால் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் ஆப்சனை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆண்ட்ராய்டு பயனாளர்கள் :
1. வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று பட்டை கோடுகளை அழுத்துங்கள்
2. கீழே நகர்த்துங்கள் [Scroll down]
3. Settings & Privacy ஆப்சனை அழுத்துங்கள்
4. மீண்டும் Settings ஆப்சனை அழுத்துங்கள்
5. கீழே நகர்த்துங்கள் [Scroll down]
6. Media and Contacts ஆப்சனை அழுத்துங்கள்
7. Upload Photos in HD என்ற ஆப்சனை ஆன் செய்திடுங்கள்
8. வீடியோவை HD வடிவில் பதிவேற்றம் செய்ய Upload Videos in HD ஆப்சனை ஆன் செய்திடுங்கள்
ஆப்பிள் பயனாளர்கள் :
1. வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று பட்டை கோடுகளை அழுத்துங்கள்
2. கீழே நகர்த்துங்கள் [Scroll down]
3. Settings & Privacy ஆப்சனை அழுத்துங்கள்
4. மீண்டும் Settings ஆப்சனை அழுத்துங்கள்
5. கீழே நகர்த்துங்கள் [Scroll down]
5. கீழே நகர்த்துங்கள் [Scroll down]
6. Media and Contacts ஆப்சனை அழுத்துங்கள்
7. Videos and Photos என்ற ஆப்சனை அழுத்துங்கள்
8. Upload HD என்ற ஆப்சனை ஆன் செய்திடுங்கள்
பேஸ்புக்கில் போஸ்ட் schedule செய்வது எப்படி?
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.