Sunday, May 12, 2024
HomeInsuranceCar Insurance வாங்கும் போது இந்த Add-On Covers வாங்காம இருக்காதீங்க

Car Insurance வாங்கும் போது இந்த Add-On Covers வாங்காம இருக்காதீங்க

Car வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் நிச்சயமாக Car Insurance வாங்கித்தான் ஆக வேண்டும். அப்படி, Best Car Insurance Policy என ஆன்லைனில் தேடினால் பல இன்சூரன்ஸ் பாலிசிகள் வரும். பெரும்பாலானவர்கள் அதிலே குறைவான தொகையை எந்த insurance company வழங்குகிறதோ அந்த பாலிசியை வாங்கி விடுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு என்பதை Car Insurance ஐ பயன்படுத்தும் போது தான் தெரிய வரும்.

அதேபோல, Car Insurance வாங்கும் போது Add-On Covers என சில extra coverage களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் நமக்கு தேவையான Add-On Covers ஐ வாங்கிக்கொள்வது மிகவும் நல்லது. இந்தப்பதிவில், கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரக்கூடிய Add-On Covers என்னென்ன? எவை கண்டிப்பாக வாங்க வேண்டியவை? Insurance Cost ஐ குறைப்பது எப்படி? என்பவை குறித்து இந்தப்பதிவில் பார்க்கலாம்.

Types Of Add-On Covers Available Under Car Insurance

இந்தியாவில் இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் நிறுவனங்களால் பல்வேறு Add-On Covers கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது வழங்கப்படுகிறது. இவை கூடுதலான பலன்களை உங்களுக்கு வழங்கும்.

Zero Depreciation Cover

நீங்கள் இந்த Add-On Cover ஐ வாங்கி இருந்தால் கிளைம் செய்திடும் போது அதிகப்படியான தொகையை கிளைம் செய்திட இந்த Add-On Cover பயன்படும். சரியாக சொல்ல வேண்டுமானால் தேய்மானத்திற்கு என எடுக்கப்படும் தொகை இந்த Add-On Cover எடுத்திருந்தால் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

இந்த Add-On Cover ஐ Nil Depreciation அல்லது Bumper To Bumper Add-On Cover எனவும் அழைக்கப்படுகிறது. இந்த Add-On Cover ஐ பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 5 ஆண்டுக்கும் குறைவான கார்களுக்கே தருகின்றன. அதேபோல சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இரண்டு முறை மட்டுமே வழங்குகின்றன. சில நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்குகின்றன.

Engine Protection Cover

என்ஜின் ஏதேனும் ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது எஞ்சினின் ஏதேனும் ஒரு பாகம் பாதிக்கப்பட்டாலோ அதற்கு ஆகக்கூடிய செலவு முழுவதையும் இந்த Add-On Cover ஐ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும். இதுவும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் உள்ள கார்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

No Claim Bonus Protection Cover

நாம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கி கிளைம் எதுவும் செய்யாமல் இருந்தால் NCB என்கிற போனஸ் வழங்குவார்கள். இதனால் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை சற்று குறையும். ஒருவேளை, நீங்கள் கிளைம் செய்தாலும் NCB போனஸ் போய்விடக்கூடாது என நீங்கள் நினைத்தால் No Claim Bonus Protection Cover என்கிற Addon ஐ வாங்கிக்கொள்ளலாம்.

Roadside Assistance Cover

நீங்கள் பயணம் மேற்கொண்டு இருக்கும் போது உங்களது கார் பழுதானால் உங்களுக்கு தேவையான உதவியை இன்சூரன்ஸ் நிறுவனம் இலவசமாக செய்திட இந்த Addon ஐ நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பஞ்சர் ஆனால் அதனை மாற்றுவது, கார் இயங்காமல் போனால் அதனை தூக்கிகொண்டு போவது என பல உதவிகளை இதன் மூலமாக பெறலாம்.

Tyre Protect Cover

பொதுவாக கார் இன்சூரன்ஸ் வாங்கும் போது கார் பழுது ஆனால் டயர் பழுது பார்க்க பணம் வழங்க மாட்டார்கள். விபத்தில் சிக்கினால் மட்டுமே டயருக்கு பணம் வழங்குவார்கள். டயர் பழுது ஆனால் டயருக்கு ஆகும் செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்றால் இந்த Tyre Protect Cover ஐ எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Key Replacement Cover

காரின் சாவி தொலைந்தாலோ அல்லது உடைந்துவிட்டாலோ அதனை மாற்றிட தேவையான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தராது. அந்த சூழலில், இந்த செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்க வேண்டும் என நினைத்தால் Key Replacement Cover Addon ஐ எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Loss Of Personal Belongings Cover

காருக்குள் நீங்கள் வைத்திருந்த உடைமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டானால் அல்லது அவை தொலைந்து போனால் அதற்கான நஸ்ட ஈட்டை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற இந்த Loss Of Personal Belongings Cover ஐ எடுத்திருக்க வேண்டும். இதில் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் கூட அடங்கும்.

Consumables Cover

கார் பழுது பார்க்கப்படும் போது நட்டு, போல்டு, கிரீஸ், என்ஜின் ஆயில், பிரேக் ஆயில் போன்ற Consumables க்கு ஆகும் செலவை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்க வேண்டும் எனில் நீங்கள் இந்த Consumables Cover add on ஐ வாங்கி இருக்க வேண்டும்.

Passenger Cover

ஒருவேளை கார் விபத்தின் போது Personal Insurance இல்லாமல் இருந்தால் அந்த நேரத்தில் விபத்தினால் உண்டான பாதிப்பிற்கு ஆகும் சிகிச்சைக்கு ஆகும் செலவு அனைத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும்.

உடல் ஏதேனும் நிரந்தரமாக பாதிக்கப்பட்டால் அல்லது இறப்பு போன்றவை நடந்தால் அதற்கான இழப்பீட்டை கூட இதில் பெற முடியும்.

Daily Allowance Cover

பழுதான உங்களது கார் பழுது பார்க்க மெக்கானிக் கடையில் இருக்கும் நாட்களில் நீங்கள் வாடகை காரில் சென்று வருவதற்கான செலவு அனைத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும்.

Which Add-On Covers Are More Important When Buy A Car Insurance? 

Car Insurance புதிதாக வாங்கும் போதோ அல்லது Car Insurance Renewal செய்யும் போதோ சரியான Add-On Covers ஐ தேர்வு செய்வது அவசியம். நீங்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம் பேசினால் அவர்கள் இருக்கும் அனைத்தையும் உங்களுக்கு போட்டு தந்து விடுவார்கள். ஆகவே, நமக்கு என்ன வேண்டும் என நினைக்கிறோமோ அதனை மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது.

உதாரணத்திற்கு, Zero Depreciation Cover , Engine Cover இவை இரண்டும் நிச்சயமாக தேவைப்படும். சாவியை தொலைக்க மாட்டோம் என்று எண்ணுவோர் Key Replacement Cover வேண்டாம் என சொல்லிவிடலாம். அதேபோல, Road Assistance கூட பெரும்பாலும் தேவைப்படாது.

இந்தப்பதிவில், Car Insurance இல் இருக்கும் Add-On Covers குறித்து விரிவாக பார்த்தோம். அடுத்த பதிவில் இதே போன்றதொரு பயனுள்ள விசயத்தை பார்க்கலாம்.

Read More : Health Insurance எடுப்பது அவசியமா? சிறந்த Health Insurance ஐ தேர்வு செய்வது எப்படி?

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular