Highlights :
> உலகின் முதல் 48 மெகா பிக்சல் மொபைல் போன் Honor View 20
> Honor View 20 மொபைல் வாங்குவதற்கான புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது
> ஹானர் இணையதளத்திலும் அமேசான் இணையதளத்திலும் புக் செய்யலாம்
> விலை 40,000 ஆயிரம் இருக்கலாம்
> முன்பே புக் செய்பவர்களுக்கு 2999 மதிப்புள்ள ஹெட்செட் இலவசம்
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
Honor View 20 launched in India
உலகின் முதல் 48 மெகா பிக்சல் மொபைல் போன் Honor View 20, ஜனவரி 29 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு ஹானர் இணையதளத்திலும் அமேசான் இணையதளத்திலும் துவங்கியிருக்கின்றன. ரூபாய் 1000 செலுத்தி Honor View 20 ஐ முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அமேசான் இணையதளத்தில் ஜனவரி 15 முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஹானர் இணையதளத்தில் இப்போதே முன்பதிவு துவங்கிவிட்டது. இரண்டில் எங்கு வாங்கினாலும் 2999 ரூபாய் மதிப்புள்ள ஹானர் புளுடூத் ஹெட்செட் இலவசமாக வழங்கப்படும்.
Honor View 20 Price Expected
Honor View 20 இன் சரியான விலை இன்னும் வெளியிடப்படாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விலை கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய மொபைலின் விலை 40 ஆயிரத்திற்கும் உள்ளாக இருக்கலாம்.
அதன்படி,
6GB RAM + 128GB storage >> Rs. 30,400
8GB RAM + 128GB storage >> Rs. 35,500
Honor View 20 Key specifications
Camera
உலகின் முதல் 48MP போன் இதுதான். ஆகவே நிச்சயமாக இதனை சிறப்பம்சமாக கருத்திடலாம். மேலும் முன்பக்க கேமரா 25 MP ஆக இருப்பதனால் செல்பி யை சிறப்பாக எடுக்கலாம். TOF 3D Camera தொழில்நுட்பம் தற்போது வரக்கூடிய முன்னனி மொபைகளில் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பம். மிக துல்லியமாக புகைப்படம் எடுக்க இது உதவும்
AI photo, night scene, portrait, fun AR, time-lapse photography, slow-motion போன்ற மற்ற சிறப்பம்சங்களும் இதில் உண்டு.
Battery
Honor View 20 மொபைலில் இன்னுமொரு சிறப்பம்சம் 4000mAh பேட்டரி இருப்பது கூடுதல் சிறப்பு. இதனால் அதிக நேரத்திற்கு மொபைலை பயன்படுத்திட முடியும்.
Display
6.4-inch full-HD+ (1080×2310 pixels) அளவுள்ள ஸ்கீரின் இருக்கிறது. ஆன்ட்ரோய்டு 9 இயங்குதளத்தில் வருகிறது.
தவறாம இதையும் படிங்க
இரண்டு Display யுடன் கலக்கும் Vivo NEX Dual Display Edition
TECH TAMILAN
[…] சில தினங்களுக்கு முன்புதான் Honor View 20 மொபைல் வந்தது. ஆனால் அதற்கடுத்ததாக […]