உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னனியில் இருப்பவர், மிகவும் சாதாரண மனிதரைப்போல நடந்துகொள்ளும் பழக்கமுடையவர், தனது சொத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்கப்போவதாக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தவர், தொழில்முனைவோர்களின் ஆதர்ச நாயகனாக திகழும் மாமனிதர் வாரன் பபெட் [Warren Buffett] நீங்கள் ரோல்மாடலாக எடுத்துக்கொள்ள தகுதியானவர்.
தற்போதைய சூழலில் உலக பணக்காரர்களின் வரிசையில் 4 ஆம் இடத்தில் இருக்கும் வாரன் பபெட் தான் உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் இருக்கின்ற தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய நபர். தற்போதைய சூழ்நிலையில் 73 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாரன் பபெட் ஒமாகாவின் அசரீரி [Oracle of Omaha] ஒமாகாவின் முனிவர் (Sage of Omaha) என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது Berkshire Hathaway எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வரும் வாரன் பபெட் மிகவும் எளிமையான நபர் அறியப்படுகிறார்.
முதலீட்டார்களுக்கும் இளம் தொழில்முனைவோர்களுக்கும் பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார் வாரன் பபெட் [Warren Buffett Quotes In Tamil]. அது குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
வாரன் பபெட்டின் பொன்மொழிகள் [Warren Buffett Quotes In Tamil]

1. உங்களை விடவும் சிறந்தவர்களிடம் நேரத்தை செலவு செய்திட துவங்குங்கள். அவர்களின் வழியில் நீங்கள் செல்லலாம்.
2. நீங்கள் வேலைபார்க்கும் அதே துறையில் வேலை பார்க்கிறவர்கள் மட்டுமே உங்களுக்கு அருகில் இருப்பது போதுமானது அல்ல. மாறாக, உங்களை ஊக்குவித்து உங்களை மேன்மைபடுத்தி உங்களை சிறந்தவராகவும் சிறந்த தொழில்முனைவோராகவும் மாற்றுகிறவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
3. ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் – உங்களை எத்தனை பேர் ஆத்மார்த்தமாக நேசிப்பார்கள் என்பதையும் நீங்கள் எவ்வளவு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்பதனையும் பணம் ஒருபோதும் தீர்மானிக்காது. ஆகவே உங்களின் மீது அன்பு செலுத்துகிறவர்களையும் உடல் ஆரோக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
4. தினந்தோறும் 500 பக்கங்கள் படிப்பதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களது அறிவை வளர்க்க உதவும். இதனை அனைவராலும் செய்துமுடிக்க முடியும் ஆனால் அனைவரும் இதனை செய்யமாட்டார்கள். தொடர்ந்து படிக்க பழகிக்கொள்ளும்போது உங்களோடு உங்களது அறிவும் வளரும்.
5. மிகச்சிறந்த ஆலோசனைகளை வழங்கக்கூடியவர் என அறியப்படும் வாரன் பபெட் – ஒரு சிறந்த நிறுவனத்தை அதிக பணம் கொடுத்து வாங்க மாட்டேன். மாறாக, ஒரு சிறந்த நிறுவனத்தை சரியான பணத்தை கொடுத்து வாங்குவேன் என கூறுகிறார்.
6. வாரன் பபெட் பரிந்துரைக்கும் பிரபலமான இரண்டு விதிமுறைகள் உண்டு, ஒன்று – எக்காரணத்தை முன்னிட்டும் பணத்தை இழக்கக்கூடாது. இரண்டாவது விதிமுறை – முதல் விதிமுறையை மறக்க கூடாது.
7. உங்களது நிறுவனத்தை ஒரு நல்ல விலைக்கு விற்க முயலுங்கள். நீங்கள் ஒரு சிறந்த பொருளை விற்பனைக்கு மக்களிடம் கொண்டு சென்றால் அவர்கள் நீண்ட காலத்திற்கு உங்களுடைய பொருள்களை வாங்கி உங்களது நிறுவனத்திற்கு உண்மையாக நடந்துகொள்வார்கள்.
8. உங்களது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் முற்காலத்தில் எடுத்த முடிவு உங்களது வியாபாரத்தை எந்த விதத்தில் பாதித்து இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். உங்களது கடந்த காலத்தை பின்னோக்கி பார்ப்பதற்கு ஏதுவாக காலக்கண்ணாடியை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
9. நான் பணக்காரன் ஆவேன் என எனக்குத்தெரியும். அதில் ஒரு நிமிடம் கூட எனக்கு சந்தேகம் வந்தது கிடையாது.
10. நான் எனது வாழ்வில் செய்த சிறந்த விசயம் என்னவென்றால் சிறந்த ஹீரோக்களை [முன்னோடிகளை] தெரிவு செய்தது தான். ஒவ்வொருவருக்கும் ரோல்மாடல் இருப்பார்கள். அவர்களை வெறுமனே தெரிவு செய்துவிடாமல் சரியான காரணத்திற்காக தெரிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.
11. உங்களுக்கு தேவையில்லாத பொருள்களை நீங்கள் வாங்க துவங்கினால் ஒருநாள் உங்களுக்கு தேவையான பொருள்களை நீங்கள் விற்க நேரிடும். உங்களது செலவினங்களை தொடர்ச்சியாக கண்காணியுங்கள், அதோடு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சேமிக்க பழகிக்கொள்ளுங்கள்.
12. ஒரு பொருள் உங்களுக்கு தேவையென நீங்கள் கருதினால் அதனை அவசரகதியில் வாங்காதீர்கள்.
13. இளம் வயதில் வாசித்த பென் கிரகாம் எழுதிய “The Intelligent Investor” என்ற புத்தகம் தான் தனக்கு உத்வேகத்தை அளித்தது என்று கூறும் வாரன் பஃபெட், இந்தப்புத்தகம் ஒரு பிரச்சனை எழும்போது அதில் உணர்ச்சிகமான முடிவுகளை எடுக்காமல் ஏற்கனவே அந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தயார் நிலையில் வைத்திருப்பது பற்றி தனக்கு கற்றுக்கொடுத்ததாக கூறுகிறார் பபெட்.
உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னனியில் இருப்பவர், மிகவும் சாதாரண மனிதரைப்போல நடந்துகொள்ளும் பழக்கமுடையவர், தனது சொத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்கப்போவதாக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தவர், தொழில்முனைவோர்களின் ஆதர்ச நாயகனாக திகழும் மாமனிதர் வாரன் பபெட் நீங்கள் ரோல்மாடலாக எடுத்துக்கொள்ள தகுதியானவர்.
Read More : ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை படியுங்கள்