Thursday, November 21, 2024
HomeTech ArticlesFake Likes, Fake Followers விற்கப்படுகிறது, தெரியுமா உங்களுக்கு?

Fake Likes, Fake Followers விற்கப்படுகிறது, தெரியுமா உங்களுக்கு?

fake likes fake followers in tamil

Social Media

ஆஹா 1 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்களே! ஆஹா இவருடைய வீடியோவை 2 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்களே என வியப்பதற்கு முன்பாக பணம் கொடுத்து Fake Likes, Fake Followers, Fake Views ஆகியவற்றை வாங்கிட முடியும் என்பதனை தெரிந்துகொள்ளுங்கள்

இன்று எது முக்கிய செய்தியாக மாறுகிறது? யார் மிகப்பெரிய திறமைசாலியாக நம்பப்படுகிறார்கள்? எது சிறந்தது என கட்டமைக்கப்படுகிறது? எது புகழ் என நம்பப்படுகிறது? இவை அனைத்திற்குமான பதிலில் “சமூக வலைத்தளங்களில் வாங்குகிற லைக்ஸ் எண்ணிக்கை மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை” க்கு சம்பந்தம் இருக்கிறது. ஆம் நண்பர்களே, அதிகம் பேரால் Share அல்லது like செய்யப்பட்டுவிட்டால் அதுதான் சிறந்தது என்ற முடிவிற்கு நாம் வந்து விடுகிறோம். அதிகம் பேர் Follow செய்தால் அவர் முக்கியஸ்தராக மாறிவிடுகிறார். இதுதானே இப்போது இருக்கிற நிதர்சனமான உண்மை. ஆனால் Likes மற்றும் Followers களை விலைக்கு வாங்க முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? Likes மற்றும் Followers களை விற்கக்கூடிய நிறுவனங்களே இருக்கின்றன என்பதனை உங்களால் நம்ப முடிகிறதா?

Facebook , Instagram , Twitter, Youtube எப்படி செயல்படுகிறது?

பொதுவாக Facebook , Instagram , Twitter, Youtube உள்ளிட்டவை அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் போஸ்டர்களை காட்டுகின்றன. முதலில் உங்களது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் பகிர்ந்துகொண்டுள்ள பதிவுகளை காட்டுகின்றன. பின்னர் நீங்கள் ஏற்கனவே பார்த்த விசயங்களுக்கு ஏற்றது மாதிரியான போஸ்டர்களை காட்டுகின்றன. அடுத்ததாக அதிகம்பேரால் பகிரப்பட்ட அல்லது லைக்ஸ் வாங்கிய போஸ்டர்கள் காட்டப்படுகின்றன. Facebook இல் உங்களது முகப்பில் எப்படி போஸ்ட்கள் தோன்றவேண்டும் என்பதனை மாற்றிடும் வசதி கூட உண்டு.

மூன்றாவதாக ஒரு விசயத்தை கூறினேன் அல்லவா? அதிக லைக்ஸ் , share செய்யப்பட்ட பகிர்வுகள் முக்கியத்துவம் கொண்டதாக கருதப்பட்டு பெரும்பாலான நபர்களுக்கு காட்டப்படும் என்று, அங்குதான் பணத்திற்கு வாங்கப்பட்ட லைக்ஸ் மற்றும் Shares வேலை செய்யும். குறிப்பிட்ட ஒரு போஸ்ட் போடப்பட்டவுடன் அதனை அதிகம் பேர் லைக்ஸ் செய்யும்படியாக அறிவுறுத்தப்படும். பின்னர் அது முக்கியத்துவம் வாய்ந்த அல்லது அதிகம் பேர் விரும்புகிற போஸ்ட் என சமூகவலைத்தளங்கள் நம்பி பிறருக்கும் காட்டிடும். இதனால் அதிகம் பேர் அதனை பார்ப்பதோடு followers அதிகம் கிடைப்பார்கள்.

எப்படி செயல்படுகின்றன இந்த நிறுவனங்கள்?

fake likes fake followers in tamil

கூகுளில் Fake Likes என தேடிப்பாருங்கள், பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வந்து நிற்பார்கள். ஆம் நண்பர்களே இதுதான் உண்மை. சில வீடியோக்கள் அல்லது போஸ்ட்கள் அதிகம்பேரால் விரும்பப்படலாம் அல்லது பகிரப்படலாம். ஆனால் பெரும்பான்மையான வீடியோக்கள் அல்லது போஸ்ட்கள் லைக்ஸ் மற்றும் share  செய்யப்படுவது என்பது இதுபோன்ற நிறுவனங்களால் தான். முன்பு bot அல்லது program உள்ளிட்டவைகளை கொண்டு fake likes , fake subscription போன்றவற்றினை செய்துவந்தார்கள். ஆனால் facebook உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்க பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்துவிட்டதனால் முன்பு போன்று எளிமையாக செய்துவிட முடிவது இல்லை.

ஆகையினால் இப்போது இந்த நிறுவனங்கள் உண்மையான ஆட்களையே வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள். வீட்டிலிருந்தபடியே மாதம் 15000 சம்பாதிக்கலாம் என்பது போன்ற விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒன்று தான் இந்த வேலையும். உங்களது வீடியோ அல்லது போஸ்ட்களுக்கு லைக்ஸ் வேண்டுமென நீங்கள் இந்த நிறுவனங்களை அணுகினால், அந்த நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கின்ற நபர்களுக்கு குறிப்பிட்ட அந்த வீடியோ அல்லது போஸ்டை லைக் செய்யுமாறு அல்லது அந்த சேனலை subscribe செய்திடுமாறு கட்டளை இடுவார்கள். அவர்கள் செய்துமுடித்த பின்னர் அவர்களுக்கு குறிப்பிட்ட சம்பளம் வழங்கப்படும். உண்மையான நபர்களே இப்பணியினை செய்வதனால் சமூக வலைதள நிறுவனங்களால் இவர்களை கண்டறிந்து தடுக்க முடிவது இல்லை.

இன்ஸ்டாகிராம் வழக்கு

Instagram

Fake Likes மற்றும் Followers விற்றே கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துவிட்டதாக கூறி நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் மூன்று நபர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல நபர்கள் தங்களது அக்கவுண்டில் likes போன்றவற்றை போலியாக வாங்குவதற்காக 10 டாலர் முதல் 99 டாலர் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். இதுபோன்ற பல நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்பது உண்மையே. சமூக வலைத்தளங்கள் மக்களின் தளம் அல்ல அது பணம் விளையாடுகிற தளம் என்பதே இதன் மூலமாக நாம் புரிந்துகொள்ளக்கூடிய உண்மை.

இனி 2 Million Views என ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தால் உங்களுக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். அப்படி வந்தால் கமெண்டில் பதிவிடுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular