Sunday, November 24, 2024
HomeAppsfacebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு | Facebook Transparency report

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் – அதிகரிப்பு | Facebook Transparency report

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு

Facebook Transparency report

இந்தியாவில் இருந்து 22,684 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.




Click Here! Get Updates On WhatsApp

2013 ஆம் ஆண்டு முதல் facebook நிறுவனம் “transparency report” ஐ ஆண்டுக்கு இருமுறை என்ற விகிதத்தில் வெளியிட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, பயனாளர்களிடம் தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பது போன்ற காரணங்களுக்காகவே இப்படி “transparency report” ஐ வெளியிடுவதாக தெரிவித்து இருக்கிறது. இதில் தான் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகபட்சமாக அரசாங்கங்கள் facebook பயனாளர்களின் தகவல்களை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து எவ்வளவு?

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு

பயனாளர்களின் தகவல்களை கேட்ட பட்டியலில் 50,741 விண்ணப்பத்துடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் இருந்து 22,684 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. இப்படி அரசாங்கமே பயனாளர்களின் தகவல்களை கேட்டாலும் குற்றப்பின்னனி, வழக்கு,நீதிமன்ற உத்தரவு போன்ற வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே பயனாளர்களின் தகவல்களை கொடுப்பதாக facebook தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச வீடியோக்கள் நீக்கம்

facebook mark zukerberg

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகப்படியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 6.9 மில்லியன் படங்கள் நீக்கப்பட்டுள்ள சூழலில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 11.6 மில்லியன் அளவிலான படங்களை நீக்கியிருக்கிறது. தனது தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக மாற்றி இருப்பதனால் இது முடிந்திருக்கிறது என facebook தெரிவித்துள்ளது.

போலி கணக்குகள்

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு

அரசியல் மற்றும் ஏமாற்றுவேலை போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்கியுள்ளது facebook. முதல் முறையாக தனது இன்னொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தையும் “transparency report” இல் இணைத்து இருக்கிறது facebook.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular