Tuesday, December 3, 2024
HomeAppsFacebook அதிரடி, ஜாக்கிரதையா இருங்க | Facebook share user data with government

Facebook அதிரடி, ஜாக்கிரதையா இருங்க | Facebook share user data with government

facebook going to share user data with government against hate speech

Facebook against Hate Speech

உலக வரலாற்றில் முதல் முறையாக வெறுப்புணர்வினை உண்டாக்கும் ரீதியிலான கருத்துக்களை பகிர்வோரின் தகவல்களை அரசுடன் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளது Facebook

வெறுப்புணர்வினை உண்டாக்கக்கூடிய கருத்துக்களை பகிர்வது

(Sharing Hate Speech), பொய்யான தகவல்களை பகிர்வது (Sharing Fake News) என்பது சமூகவலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகவே இருக்கிறது. முன்னனி சமூக வலைதளமான facebook உலக வரலாற்றிலேயே முதல் முறையாக வெறுப்புணர்வினை உண்டாக்கும் விதத்தில் கருத்து பதிவிடும் நபர்கள் குறித்தான தகவல்களை பிரான்சு நீதிமன்றத்தோடு பகிர்ந்துகொள்ள உடன்பட்டு இருக்கிறது. இதுவரை இப்படி தன்னிடம் இருக்கின்ற தகவல்களை facebook பிறருடன் பகிர்ந்துகொண்டது இல்லை.

பிரான்சு அதிபர் மெக்ரான் மற்றும் facebook நிறுவனர் மார்க் இவர்களுக்கு இடையிலான நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் facebook இதற்க்கு ஒப்புக்கொண்டு இருக்கிறது. இதன்மூலமாக facebook பிரான்சு நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டு வெறுப்புணர்வினை உண்டாக்கும் விதத்திலான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவோர் ஆகியோரது IP Address மற்றும் பல தகவல்களை நீதிமன்ற நிர்வாகத்துடன் பகிர்ந்துகொள்ளும். Facebook இதனை தற்போது பிரான்ஸ் நாட்டுடன் மட்டுமே செய்திட ஒப்புக்கொண்டுள்ளது. உலகிற்கு இது முன்னோடி நடவெடிக்கையாக பார்க்கப்படுகிறது.

facebook

Hate Speech இனி பேச்சு சுதந்திரம் ஆகாது, அது தீவிரவாதத்திற்கு இணையானதாகவே இனி பார்க்கப்படும் என  கூறுகிறார் சோனியா ஸிஸி.

 

ஏற்கனவே facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் Hate Speech , False Information இவைகளுக்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொண்டு வந்திருந்தாலும் அந்த நடவடிக்கைள் அனைத்துமே பிளாக் செய்வது, போஸ்டர்களை நீக்குவது உள்ளிட்ட அளவுகளில் தான் இருந்து வந்திருக்கிறது. யாரேனும் காவல்துறையில் புகார் அளிக்காதவரை அது தண்டனைக்கு உரிய குற்றமாக மாறாது. ஆனால் இப்போது பிரான்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நடவெடிக்கையின் மூலமாக facebook கண்காணிக்கும் தகவல்களை அரசிடம் பகிர்ந்துகொள்ள இருப்பது என்பது மிகப்பெரிய நடவெடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்க்கு facebook இன்னும் ஒத்துப்போகவில்லை எனினும்  இனிமே போஸ்ட்களை பதிவிடும் போதும், பகிரும் போதும் கவனமாக இருங்க மக்களே!

Read this also :

Facebook பிறந்த கதை

Click Here 

என்ன மார்க் சக்கர்பெர்க் சம்பளம் இவ்வளவுதானா?

Click Here 

IP Address என்றால் என்ன?

Click Here

RAM என்றால் என்ன?

Click Here





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. […] facebookபல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முடிந்த அளவிற்கேனும் உண்மையான நபர்கள் தான் facebook கணக்கை பயன்படுத்துகிறீர்களா என சோதனை செய்யும். அதில் முதல் படியாக Fake name இல் செயல்படும் கணக்குகள் தான் முதலில் முடக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் நீங்கள் தான் உண்மையான நபர் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து உங்களது கணக்கை மீட்கலாம்.  […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular