Thursday, November 21, 2024
HomeBiography@ நிறுவனத்தை உருவாக்கிய அர்மண்ட் பூனவாலா வின் வெற்றிக்கதை | Enterprenur @ company CEO...

@ நிறுவனத்தை உருவாக்கிய அர்மண்ட் பூனவாலா வின் வெற்றிக்கதை | Enterprenur @ company CEO Armand Poonawala Story

@ CEO Armand Poonawala

Social Marketing

சோசியல் மார்க்கெட்டிங் துறையில் சிறந்த தொழில்முனைவோராக உருவாகியிருக்கிறார் மும்பையை சேர்ந்த அர்மண்ட் பூனவாலா


Social Marketing (சோசியல் மார்க்கெட்டிங்) ஐ அடைப்படையாக வைத்து உருவான at (@) எனும் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது Shaadi.com உள்ளிட்டவற்றை நடத்திக்கொண்டு இருக்கக்கூடிய ஏஞ்சல் இன்வெஸ்டர்களிடமிருந்து $330,000 ஐ முதலீடாக பெற்று இருக்கிறது. இதனால் தற்போது 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக @ நிறுவனம் மாறி இருக்கிறது. 10 மில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றப்படும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை உருவாக்கி இருப்பவர் வேறு யாரோ அல்ல நமது மும்பையை சேர்ந்த அர்மண்ட் பூனவாலா [Armand Poonawala] தான். அவர் எப்படி இந்த நிறுவனத்தை உருவாக்கினார்? இந்த நிறுவனத்தின் செயல்பாடு எதனை அடிப்படையாக கொண்டது என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.

நிறுவனத்திற்கான துவக்கப்புள்ளி
டிஜிட்டல் அட்வர்டைசிங்

@ நிறுவனத்தை உருவாக்கிய அர்மண்ட் பூனவாலா தனக்கு எவ்வாறு இந்த நிறுவனத்தை துவக்க வேண்டும் என்கிற எண்ணம் என்பதனை இவ்வாறு விளக்குகிறார். நான் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டபடிப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்குள்ள சிறிய சிறிய நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள குறைந்தது $3000 முதல் $5000 வரை செலவு செய்யவேண்டி இருக்கிறது என்பதனையும் இது அவர்களுக்கு மிகப்பெரிய கடினமாகவும் இருப்பதனை உணர்தேன். நான் மும்பைக்கு வரும்போது இங்கு அதே குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் இளைஞர்கள் வெறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்வதனை பார்க்க முடிந்தது. ஒருபக்கம் மிகப்பெரிய தொகையை செலவு செய்வதில் தயக்கம் காட்டிடும் சிறிய நிறுவனங்கள் – மறுபக்கம் மிககுறைந்த சம்பளத்திற்கு வேலைபார்க்கும் திறமையாளர்கள்.

இவர்கள் இருவரையும் ஏன் இணைக்கக்கூடாது? இந்த இடத்தில் உருவானது தான் @ நிறுவனத்திற்கான துவக்கப்புள்ளி.

ஓயோ நிறுவன பாணியில் @ நிறுவனம்

@ CEO Armand Poonawala

எப்படி ஓயோ நிறுவனம் ஹோட்டல்களையும் ரூம் தேவைப்படுபவர்களையும் இணைக்கிறதோ அதே பாணியை தான் @ நிறுவனமும் செய்கிறது. ஓயோ விற்கென சில தரங்களை வைத்துக்கொள்வது , அதற்கேற்றவாறு ஹோட்டல் அறைகளின் தரத்தினை மேம்படுத்த உதவுவது பின்னர் தனது ஆப் வழியாக அந்த ஹோட்டல் அறைகளை பயனாளர்களுக்கு புக் செய்ய கொடுப்பது இதுதான் ஓயோ நிறுவன பாணி.

இதனையே தான் @ நிறுவனமும் செய்கிறது. கிரியேட்டிவ் நபர்கள் அல்லது அது சார்ந்த நிறுவனங்களை தேவைப்படும் கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களோடு இணைக்கின்ற பணியினை @ நிறுவனம் செய்கிறது. அதோடு அந்த துறைக்கான தரம் குறித்த சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அது வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு கிடைக்கிறதாஎன்பதனை @ நிறுவனம் கண்காணிக்கும்.

தற்போது 50 வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்ற @ நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வளர்ச்சியினை அடைந்துவருகிறது. 30 பணியாளர்களையும் 30 க்கும் மேற்பட்ட பகுதி நேர பணியாளர்களையும் கொண்டிருக்கிறது @ நிறுவனம்.

உங்களுக்கும் இதுபோன்ற ஐடியா இருக்கிறதா? கமெண்டில் பதிவிடுங்கள்.

Read this also :

OYO Rooms ரிதேஷ் அகர்வால் சாதித்தது எப்படி?

Click Here 

பில்கேட்ஸ் பில்லியனர் ஆனது எப்படி?

Click Here 

எலன் மஸ்க் சாதித்தது எப்படி?

Click Here

பிரனவ் மிஸ்ட்ரி சாதித்தது எப்படி?

Click Here


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular