Monday, May 13, 2024
HomeUncategorized27.11.2021 : இன்றைய தொழில்நுட்ப செய்திகள் | Daily Tech News In Tamil

27.11.2021 : இன்றைய தொழில்நுட்ப செய்திகள் | Daily Tech News In Tamil

1. 6G தொழில்நுட்பம் 2024 இல் பயன்பாட்டுக்கு வரும்

தற்போது இந்தியா 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் 2023 இன் இறுதியிலோ அல்லது 2024 இன் துவக்கத்திலோ இந்த தொழில்நுட்பம் வெளியாகும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 6G தொழில்நுட்பத்தின் மூலமாக மிக அதிவேக இன்டர்நெட் சேவையை நம்மால் பெற முடியும். இதன் மூலமாக, அதிவேக இன்டர்நெட் தேவைப்படும் தானியங்கி வாகனங்கள், தானியங்கி மருத்துவ ரோபோட்டுக்கள், ஸ்மார்ட் வீடுகள், பாதுகாப்பு மேம்பாடுகள் உள்ளிட்டவற்றில் பெரிய புரட்சி ஏற்பட்டு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்யும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

2. இந்தியர்களின் படிக்கும் பழக்கத்தை மாற்றிய கோவிட் முடக்கம்

2020 – 2021 காலகட்டங்களில் கொரோனா பொதுமுடக்கம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை அறிய நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. ஒரு வாரத்திற்கு 9 மணி நேரம் வாசிப்பில் செலவு செய்தவர்கள் இந்த பொது முடக்க காலங்களில் 16 மணி நேரத்தை ஒரு வாரத்தில் வாசிப்பிற்காக செலவு செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சுய மேம்பாடு, அரசியல், உடல் நலன் ஆகியவை சார்ந்த புத்தகங்கள் மற்றும் செய்திகளை அதிகம் வாசிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். அமேசான் போன்ற புத்தக விற்பனை தரவுகளை ஆராய்ந்ததிலும் இது உண்மை என தெரியவந்துள்ளது.

3. அதிரடியாக விலையை ஏற்றிய ஏர்டெல் மற்றும் வோடபோன்- ஐடியா

ஏர்டெல் மற்றும் வோடபோன்- ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தியுள்ளன. தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கும் புதிய கட்டணங்களின்படி ஏற்கனவே ரூ79 இல் பயன்படுத்தி வந்த 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக் ரூ99 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ரூ149 பேக் தற்போது ரூ179 என உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி ஏற்கனவே விற்கப்பட்ட விலையில் இருந்து ரூ20 முதல் ரூ40 வரைக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோ விலையை மாற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

4. வாட்ஸ்ஆப்க்கு கிடைத்த நற்செய்தி

தற்போது வரைக்கும் 20 மில்லியன் பயனாளர்களுக்கு மட்டுமே payment service ஐ வழங்க NCPI அனுமதி வழங்கி இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 40 மில்லியனாக உயர்த்தி NCPI அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் அடுத்தகட்டமாக மேலும் பல பயனாளர்களுக்கு payment service ஐ வாட்ஸ்ஆப் வழங்கும். வாட்ஸ்ஆப்க்கு இந்தியாவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5. டெக் நிறுவனங்களுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

 

முன்னனி டெக் நிறுவனங்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட டெக் நிறுவனங்கள் தங்களது நாட்டில் அலுவலகங்களை கண்டிப்பாக திறக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் தடை உள்ளிட்ட பிரச்சனைகளை அவை சந்திக்க நேரும் எனவும் கூறியுள்ளது. Apple, Google, Facebook, Twitter, TikTok, Telegram,  Zoom, Viber, Spotify, Likee, Discord, Pinterest, and Twitch போன்ற முன்னனி நிறுவனங்களுக்குத்தான் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular