கம்ப்யூட்டர் என்றால் என்ன? | Computer Meaning in Tamil

கணினி என்பது ஒரு எலெட்ரானிக் கருவி. ஒரு கணினியால் உள்ளீடுகளை பெற முடியும்,உள்ளீடுகளை சேமிக்க முடியும், உள்ளீடுகளை புராஸஸ் செய்திட முடியும், உள்ளீடுகளை புராஸஸ் செய்து கிடைக்கும் முடிவை வெளியீடு செய்திடவும் முடியும். ஒரு கணினியால் மிகவும் சுலபமான கணக்குகள் துவங்கி மிகப்பெரிய விசயங்களையும் செய்திட முடியும்.

desktop computer

சிறிய பெட்டிக்கடையில் கூட இன்று கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கு கணினி பயன்படுத்தப்படுகிறது. கணினி குறித்த அறிமுகத்தை அனைவரும் பெற்று இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. [Computer In Tamil] இன்றைய யுகம் கணினி யுகமாக மாறிவிட்டது. What is computer? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். அதற்கான விடையினை பார்க்கலாமா?

What Is Computer In Tamil?

கணினி என்பது ஒரு மென்பொருள் சாதனம். அதனால் தகவல்களை பெறவும் [Receive Data], தகவல்களை சேமிக்கவும் [Stores Data], தகவலின்படி செயல்படவும் [Process], தகவல்களை பயன்படுத்தி சில வேலைகளை செய்து அதிலிருந்து தகவல்களை கொடுக்கவும் [Output] முடியும்.

உதாரணத்திற்கு,

நீங்கள் இரண்டு எண்களை கூட்ட வேண்டும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் எந்த எண்களை கூட்ட வேண்டுமோ அதனை உள்ளீடாக கொடுக்க முடியும். அப்படி நீங்கள் கொடுக்கும் எண்களை கணினியால் பெற முடியும். அந்த எண்களை சேமிக்க முடியும். அந்த எண்களை அதனுள் இருக்கும் புரோகிராம் மூலமாக கூட்ட முடியும். கூட்டிய எண்களை உங்களுக்கு திரையில் காண்பிக்க முடியும்.

கணினியின் முக்கிய பாகங்கள் | Components of Computer

ஒரு கணினி என்பது பல நுட்பமான மின்னணு பாகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்படும் இயந்திரம். பொதுவாக கணினியின் முக்கிய பாகங்களை இரண்டாக பிரிக்கலாம்.

Hardware : எளிமையாக சொல்லவேண்டுமானால் கண்களால் பார்க்க கூடிய தொட்டு உணரக்கூடிய கணினியின் பாகங்கள் அனைத்துமே Hardware தான்.

Software : இயங்குதளம் உட்பட அனைத்து அப்ளிகேசன்கள்

ஒரு கணினி மிகச்சரியாக வேலை செய்திட வேண்டும் என்றால் பல பாகங்கள் சரியாக இணைக்கப்பட வேண்டும். central processing unit (CPU) என்பது தான் கணினிக்கு மூளை போன்றதொரு அமைப்பு. அதில் தான் நாம் கொடுக்கும் கட்டளைகள் மற்றும் கணக்குகள் அனைத்தும் செய்யப்படும். CPU வின் வேகத்தை GHz என்ற அளவீட்டால் அளவிடுவார்கள். இது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ கணினி அந்த அளவிற்கு வேகமாக செயல்படும்.

RAM என்பது கணினியின் தற்காலிக மெமரி. CPU விற்கு வேகமாக தேவைப்படும் தகவல் அனைத்தும் இங்கே தான் சேமிக்கப்படும். RAM அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கணினியால் அதிகப்படியான வேலைகளை பார்க்க முடியும். ஒரே நேரத்தில் நீங்கள் பல அப்ளிகேஷன்களை கையாள வேண்டுமெனில் நீங்கள் அதிகமான அளவு RAM தேவைப்படும்.

இது தவிர, கணினியில் hard disk drives (HDDs) மற்றும் solid-state drives (SSDs) போன்றவை தகவல்களை சேமிப்பதற்காக இருக்கும். இதில் தான் அப்ளிகேஷன்களின் தகவல்கள், OS போன்றவை இருக்கும். இந்த தகவல்கள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

How does a computer work In Tamil?

கம்ப்யூட்டர் ஆனது தொடர்ச்சியாக பல வேலைகளை செய்கிறது. இதனை fetch-decode-execute cycle என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

Fetch : அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தனது மெமரியில் இருந்து கம்ப்யூட்டர் எடுத்துக்கொள்கிறது. தற்போதைய நிலையை program counter தொடர்ச்சியாக கண்காணித்துக்கொண்டே வரும்.

Decode : அடுத்து என்ன செய்திட வேண்டும் என்ற கட்டளையை புரிந்துகொண்டு அதனை செயல்படுத்த தயாராகும்.

Execute : கட்டளைப்படி செய்திட வேண்டிய செயல்கள் மற்றும் கணக்குகளை கணினி செய்யும். arithmetic calculations, logical operations, data manipulation, or input/output operations என பலவகையான வேலைகள் அதற்குள் அடங்கும்.

Store : குறிப்பிட்ட வேலையை செய்த பிறகு கிடைக்கும் ரிசல்ட் ஐ சேமித்து வைத்துக்கொள்ளும். தேவைப்பட்டால் Output கருவிகளுக்கு அனுப்பி வைக்கும்.

ஒரு கம்ப்யூட்டர் இந்த மாதிரியான வேலைகளைத்தான் தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கிறது.

CPU வின் முக்கிய பணி என்ன?

central processing unit (CPU) தான் ஒரு கம்ப்யூட்டரின் இதயம் என்றே சொல்லலாம். அதுதான் கட்டளைகளை செயல்படுத்துவது தகவல்களை புராஸஸ் செய்வது என்ற முக்கியமான வேலைகளை செய்கிறது. CPU ஆனது பல்வேறு மற்ற கருவிகளுடன் இணைந்து குறிப்பிட்ட வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

control unit தான் சிபியு வின் செயல்பாட்டை கண்காணித்து முறைப்படுத்துகிறது. நாம் மேலே fetch-decode-execute cycle என்ற வேலையை செய்து முடிக்கிறது.

ALU – arithmetic logic unit இதுதான் கணித வேலைகளை செய்கிறது. குறிப்பாக, arithmetic calculations, logical operations, மற்றும் comparisons ஐ செய்கிறது.

CPU வின் வேகம் gigahertz (GHz) என்ற அளவால் அளவிடப்படுகிறது.

Memory and storage in a computer

மெமரி மற்றும் ஸ்டோரேஜ் என்பது ஒரு கம்ப்யூட்டரின் இன்றியமையாத பாகங்கள். டேட்டா மற்றும் கட்டளைகளை சேமிப்பது, வழங்குவது இதன் முக்கிய பணியாகும். மெமரி மற்றும் ஸ்டோரேஜ் இந்த இரண்டையும் பல சமயங்களில் மக்கள் மாற்றி பயன்படுத்த அதிக வாய்ப்பு உண்டு. ஆனால், இரண்டும் வெவ்வேறான பணிகளை செய்கின்றன.

இங்கே மெமரி என்பது RAM [random access memory], இது தற்காலிகமாக தகவல்களை சேமிக்கின்ற இடம். சிபியுவிற்கு எந்த தகவல்கள் துரிதமாக தேவைப்படுமோ அந்தத்தகவல்கள் இங்கே இருக்கும். இதன் அளவைப்பொறுத்துதான் கணினியின் வேகம் அதிகரிக்கும்.

ஸ்டோரேஜ் என்பது ஹார்டு டிஸ்க். நீண்ட கால தகவல்கள் அனைத்தும் இங்கே தான் சேமிக்கப்பட்டு இருக்கும். இதில் HDD மற்றும் SSD என இரண்டு வகைகள் உண்டு. அவற்றைப்பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்.

Input and output devices

Input மற்றும் output devices என்பவை பயனாளருக்கும் கணினிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த முக்கியமானது. Input devices மூலமாக கணினிக்கு தகவல்களை பயனாளர் கொடுக்க முடியும். output devices ஐ பயன்படுத்தி கணினி ரிசல்ட் ஐ பயனாளருக்கு தெரிவிக்க முடியும்.

Input devices – கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், தொடுதிரை, ஸ்கேனர் போன்றவற்றை கூறலாம். இந்தக்கருவிகளை பயன்படுத்தி ஒருவரால் கணினிக்கு கட்டளைகளை அல்லது தகவல்களை வழங்க முடியும்.

output devices – கணினி உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவல்களை உங்களுக்கு கடத்திட சில கருவிகள் இருக்கும். உதாரணத்திற்கு, டிஸ்பிளே ஐ சொல்லலாம். ஒரு விசயத்தை செய்து முடித்த பிறகு அதில் தான் உங்களுக்கு தகவல் காண்பிக்கப்படும். இன்னும் பிரிண்டர், ஸ்பீக்கர் இவையெல்லாம் கூட output devices தான்.

நான் ஏற்கனவே சொன்னது போல, இரண்டு விசயங்களும் மிக முக்கியமானவை தான்.

Operating systems and software

ஒரு கணினியில் மென்பொருள் [Software] மற்றும் வன்பொருள் [Hardware] இரண்டும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டும் இணைந்து செயல்பட சில புரோகிராம்கள் அவசியம். அது தான் Operating systems அல்லது OS. இப்போது சந்தையில் மிக பிரபலமாக சில OS தான் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, Microsoft Windows, macOS, மற்றும் Linux போன்றவை.

Software என்பது நாம் குறிப்பிட்ட வேலைகளை செய்துடுவதற்கு பயன்படுத்தும் புரோகிராம்கள். உதாரணத்திற்கு, கணக்குகள் செய்திட Excel, போட்டோ எடிட் செய்திட Photoshop, வீடியோ கேம்கள் என பலவற்றை சொல்லலாம்.

Networks and the internet

கணினிக்கு தகவல்களை பெறவும் பிற சர்வர்களுக்கு தகவல்களை அனுப்பவும் Networks மற்றும் internet அவசியம். Networks மூலமாகதான் உங்களுடைய கணினியை பிற கருவிகள் மற்றும் சர்வர்களோடு இணைக்க முடியும். இன்டர்நெட் இருந்தால் தான், இணையத்தின் மூலமாக தகவல்களை பெற முடியும்.

Conclusion

கணினிகள் உண்மையிலேயே நவீன கால அற்புத கண்டுபிடிப்பு என்றே கூற வேண்டும். நாம் வாழும் விதம், வேலை செய்யும் முறை மற்றும் தொடர்பு கொள்ளும் விதம் போன்றவற்றை தீர்மானிப்பதில் கணினி பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த உலகில் நாமும் வாழ, நிச்சயமாக கணினி பற்றி தெரிந்துகொண்டிருப்பது அவசியமான ஒன்று. இந்தப்பதிவில், CPU துவங்கி பல்வேறு முக்கிய கணினி பாகங்கள் குறித்து அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு கணினி பாகங்கள் குறித்தும் விரிவாக வரக்கூடிய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். அவற்றையும் படித்து பயன்பெறுங்கள்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN