Saturday, May 11, 2024
HomeTech ArticleschatGPT vs Bard AI Difference In Tamil

chatGPT vs Bard AI Difference In Tamil

கூகுள் நிறுவனத்தின் BARD AI மக்களின் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 180 நாடுகளில் உள்ள கூகுள் பயனாளர்கள் BARD AI ஐ இலவசமாக பயன்படுத்தலாம். ChatGPT ஏற்கனவே வெளிவந்து வரவேற்பை பெற்ற சூழலில் BARD AI இன்னும் பல சிறப்பம்சங்களோடு வந்துள்ளது. 

இந்தப்பதிவில் BARD AI என்றால் என்ன? BARD AI இல் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? ChatGPT vs BARD இரண்டிற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் என்ன? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

BARD AI என்றால் என்ன?

BARD என்பது கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் புரோகிராம் (AI Program). BARD AI ஆனது LaMDA (Language Model for Dialogue Applications) என்கிற லாங்குவேஜ் மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது. ChatGPT எப்படி வேலை செய்யுமோ அதே விதத்தில் தான் இதுவும் வேலை செய்யும். 

அண்மையில் நடந்த Google I/O 2023 இல் BARD AI ஆனது சுமார் 180 நாடுகளில் உள்ள பயனாளர்களுக்கு இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிவிக்கபட்டது. தற்போது ஆங்கிலம், ஜாப்பனிஷ், கொரியன் உள்ளிட்ட மூன்று மொழிகளை BARD AI யில் பயன்படுத்தலாம். கூடிய விரைவில் சுமார் 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் இதனை பயன்படுத்தும் விதத்தில் மேம்படுத்த போவதாக அறிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. 

BARD AI ஐ பயன்படுத்துவது எப்படி?

கூகுள் நிறுவனத்தின் BARD AI ஐ நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இதற்கு உங்களிடம் ஒரு ஜிமெயில் முகவரி மட்டும் இருந்தால் போதுமானது. bard.google.com இந்த முகவரிக்கு சென்று ஜிமெயிலை பயன்படுத்தி லாகின் செய்திடுங்கள். 

நீங்கள் லாகின் செய்தவுடன் Try Bard என வரும். பின்னர் நீங்கள் Bard ஐ பயன்படுத்த ஆரம்பிக்கலாம். கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, BARD முற்றிலும் சரியான தகவலை மட்டுமே தராது. அது சோதனை வடிவில் இருக்கிறது. நாம் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால் அதுபற்றி feedback கொடுக்கலாம். நாம் கொடுக்கும் feedback ஐ பயன்படுத்தி BARD மேம்பாடு அடையும்.

ChatGPT vs BARD AI Difference In Tamil

கூகுள் நிறுவனம் அதன் BARD AI ஐ வெளியீடு செய்வதற்கு முன்பாக ChatGPT தான் இணையம் முழுக்க பெரிதாக பேசப்பட்டது. எலன் மஸ்க், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியின் மூலமாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராகவே ChatGPT உருவாக்கப்பட்டதாகவும், ChatGPT வந்த பிறகு அதன் பயன்பாடு அதிகரித்ததை பார்த்த இணைய வல்லுனர்கள் இனி கூகுளின் நிலை அவ்வளவு தான் என கணித்தார்கள். ஆனால், இதையெல்லாம் மவுனமாக கவனித்து வந்ததோடு மட்டுமல்லாமல் தனது BARD AI ஐ உருவாக்கும் பணியில் வேகத்தை கூட்டியது கூகுள் நிறுவனம். ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்றாலும் கூட, தற்போது சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது BARD. 

வெறுமனே கேள்விக்கு பதில் தருவது என்பதோடு மட்டும் அல்லாமல் தனது இதர அப்ளிகேஷன்களிலும் BARD ஐ இணைத்து பயன்படுத்தும் வசதியையும் தந்துள்ளது கூகுள். இதனால், BARD தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது. இப்போது ChatGPT மற்றும் BARD AI இரண்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை விரிவாக பார்க்கலாம். 

1. Data Capability 

ChatGPT ஆனது 2021 வரைக்குமான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, அதற்கு பிறகான தகவல்களை அதனிடம் உங்களால் கேட்க முடியாது. நீங்கள் பணம் கொடுத்து web-browsing feature ஐ வாங்கினால் மட்டும் உங்களால் இணையத்தில் இருந்தும் தகவல்களை பெற்று பயன்படுத்த முடியும். 

ஆனால், BARD AI இன்டர்நெட்டை பயன்படுத்தி அதனுள் இருக்கும் தகவல்களை பயன்படுத்தி பதில் தரும் என்பதனால் அண்மைய தகவல் அனைத்தையும் பெற முடியும். ஆனால், அண்மைய முக்கிய செய்திகளை BARD AI யிடம் கேட்டபோது அது மிக முக்கியமான செய்திகளை எதிர்பார்த்தது மாதிரி தரவில்லை என சோதனை செய்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், BARD AI இன்னும் சோதனை வடிவத்தில் தான் இருக்கிறது என ஏற்கனவே கூகுள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

2. BARD AI ஐ எதிர்காலத்தில் மொபைலில் பயன்படுத்தலாம்

தற்போது ChatGPT ஐ மொபைல் பிரவுசரில் பயன்படுத்தலாம். ஆனால், அப்ளிகேஷன் வடிவில் பயன்படுத்த இன்னும் ஆப் எதுவும் வழங்கப்படவில்லை. அது பற்றிய அறிவிப்பும் இல்லை. ஆனால், BARD AI எதிர்காலத்தில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும்  விதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Export Options

ChatGPT யிடம் நீங்கள் கேள்வி கேட்டால் எழுத்து வடிவில் தான் உங்களுக்கு பதில் வழங்கப்படும். அதனை உங்களால் எக்ஸ்போர்ட் செய்திட முடியாது. வேறு எந்த அப்ளிகேஷனிலும் பயன்படுத்த முடியாது. ஆனால், BARD AI இடம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு அது தரும் பதில்களை உங்களால் எக்ஸ்போர்ட் செய்திட முடியும். அதேபோல, Google Drive, Gmail போன்ற ஆப்களில் எக்ஸ்போர்ட் செய்து பயன்படுத்தலாம்.

4. Plugins 

அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, Walmart, Spotify, Uber Eats, Adobe Firefly போன்ற சர்வீஸ்களுக்கு BARD AI Plugins ஐ வெளியிட்டுள்ளது. இதே மாதிரியான Plugins ஐ ChatGPT யும் வழங்குகிறது. ஆனால், இதற்கு நீங்கள் $20 செலுத்தி ChatGPT Plus ஐ பெற்றால் தான் பயன்படுத்த முடியும். 

5. Image Prompts

ChatGPT யில் நீங்கள் Text வடிவில் மட்டுமே உரையாட முடியும். ஆனால், BARD AI யில் நீங்கள் Voice வடிவிலும், Images வடிவிலும் கூட உரையாடலை நிகழ்த்திட முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு பொம்மையை செய்துகொண்டு இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனை பாதி செய்துவிட்டு மீதத்தை எப்படி செய்வது என்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் பாதி முடித்த பொம்மையை புகைப்படம் எடுத்து கூகுள் லென்ஸ் இல் அதனை சர்ச் செய்து உதவி கேட்கலாம். மீதத்தை எப்படி முடிப்பது என்கிற யோசனையை அது வழங்கும். 

BARD AI எந்த மொழிகளில் பயன்படுத்தலாம்?

தற்போதைக்கு மூன்று முக்கிய மொழிகளில் BARD AI பயன்படுத்தலாம். 

  1. ஆங்கிலம்
  2. ஜாப்பனிஷ்
  3. கொரியன்

BARD AI எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தலாம்?

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களின் தகவல்படி பின்வரும் 180 நாடுகளில் BARD AI ஐ பயன்படுத்த முடியும். 

ஆலண்ட் தீவுகள்

 அல்ஜீரியா

 அமெரிக்க சமோவா

 அங்கோலா

 அங்குவிலா

 ஆன்டிகுவா மற்றும் பார்புடா

 அர்ஜென்டினா

 ஆர்மீனியா

 அருபா

 ஆஸ்திரேலியா

 அஜர்பைஜான்

 பஹ்ரைன்

 பங்களாதேஷ்

 பார்படாஸ்

 பெலிஸ்

 பெனின்

 பெர்முடா

 பூட்டான்

 பொலிவியா

 போட்ஸ்வானா

 பூவெட் தீவு

 பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி

 பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்

 புருனே

 புர்கினா பாசோ

 புருண்டி

 கபோ வெர்டே

 கம்போடியா

 கேமரூன்

 கரீபியன் நெதர்லாந்து

 கெய்மன் தீவுகள்

 மத்திய ஆப்பிரிக்க குடியரசு

 சாட்

 சிலி

 கிறிஸ்துமஸ் தீவு

 கோகோஸ் (கீலிங்) தீவுகள்

 கொலம்பியா

 கொமொரோஸ்

 குக் தீவுகள்

 கோஸ்ட்டா ரிக்கா

 கோட் டி ‘ஐவோரி

 குராசோ

 காங்கோ ஜனநாயக குடியரசு

 ஜிபூட்டி

 டொமினிகா

 டொமினிக்கன் குடியரசு

 ஈக்வடார்

 எகிப்து

 எல் சல்வடோர்

 எக்குவடோரியல் கினியா

 எரித்திரியா

 எஸ்வதினி

 எத்தியோப்பியா

 பால்க்லாந்து தீவுகள் (இஸ்லாஸ் மால்வினாஸ்)

 ஃபாரோ தீவுகள்

 பிஜி

 காபோன்

 ஜார்ஜியா

 கானா

 ஜிப்ரால்டர்

 கிரெனடா

 குவாம்

 குவாத்தமாலா

 குர்ன்சி

 கினியா

 கினியா-பிசாவ்

 கயானா

 ஹைட்டி

 ஹார்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்

 ஹோண்டுராஸ்

 இந்தியா

 இந்தோனேசியா

 ஈராக்

 ஐல் ஆஃப் மேன்

 இஸ்ரேல்

 ஜமைக்கா

 ஜப்பான்

 ஜெர்சி

 ஜோர்டான்

 கஜகஸ்தான்

 கென்யா

 கிரிபதி

 குவைத்

 கிர்கிஸ்தான்

 லாவோஸ்

 லெபனான்

 லெசோதோ

 லைபீரியா

 லிபியா

 மடகாஸ்கர்

 மலாவி

 மலேசியா

 மாலத்தீவுகள்

 மாலி

 மார்ஷல் தீவுகள்

 மொரிட்டானியா

 மொரீஷியஸ்

 மெக்சிகோ

 மைக்ரோனேசியா

 மங்கோலியா

 மாண்ட்செராட்

 மொராக்கோ

 மொசாம்பிக்

 நமீபியா

 நவ்ரு

 நேபாளம்

 புதிய கலிடோனியா

 நியூசிலாந்து

 நிகரகுவா

 நைஜர்

 நைஜீரியா

 நியு

 நார்போக் தீவு

 வடக்கு மரியானா தீவுகள்

 ஓமன்

 பாகிஸ்தான்

 பலாவ்

 பாலஸ்தீனம்

 பனாமா

 பப்புவா நியூ கினி

 பராகுவே

 பெரு

 பிலிப்பைன்ஸ்

 பிட்காயின் தீவுகள்

 போர்ட்டோ ரிக்கோ

 கத்தார்

 காங்கோ குடியரசு

 ருவாண்டா

 செயின்ட் பார்தெலெமி

 செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா

 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

 செயின்ட் லூசியா

 செயிண்ட் பியர் மற்றும் மிக்குலோன்

 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

 சமோவா

 சாவோ டோம் மற்றும் பிரின்சிப்

 சவூதி அரேபியா

 செனகல்

 சீஷெல்ஸ்

 சியரா லியோன்

 சிங்கப்பூர்

 சாலமன் தீவுகள்

 சோமாலியா

 தென்னாப்பிரிக்கா

 தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்

 தென் கொரியா

 தெற்கு சூடான்

 இலங்கை

 சூடான்

 சுரினாம்

 ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன்

 தைவான்

 தஜிகிஸ்தான்

 தான்சானியா

 தாய்லாந்து

 பஹாமாஸ்

 காம்பியா

 திமோர்-லெஸ்டே

 போவதற்கு

 டோகெலாவ்

 டோங்கா

 டிரினிடாட் மற்றும் டொபாகோ

 துனிசியா

 துருக்கியே

 துர்க்மெனிஸ்தான்

 டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்

 துவாலு

 யு.எஸ். விர்ஜின் தீவுகள்

 உகாண்டா

 ஐக்கிய அரபு நாடுகள்

 ஐக்கிய இராச்சியம்

 அமெரிக்கா

 யுனைடெட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லையிங் தீவுகள்

 உருகுவே

 உஸ்பெகிஸ்தான்

 வனுவாடு

 வெனிசுலா

 வியட்நாம்

 வாலிஸ் மற்றும் ஃபுடுனா

 மேற்கு சாஹாரா

 ஏமன்

 ஜாம்பியா

 ஜிம்பாப்வே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular