இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க இருக்கும் பல்வேறு வழிகளில் Affiliate Marketing என்பதும் ஒன்று. இதற்கு தமிழில் இணைப்பு சந்தைப்படுத்துதல் என பொருள். மிகவும் எளிமையாக Affiliate Marketing மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதனால் தமிழ் நண்பர்கள் பலரும் Affiliate Marketing குறித்து தேடுகிறார்கள். அப்படி தேடுகிறவர்களுக்கு, எளிமையாக Affiliate Marketing குறித்து இங்கே விளக்கி இருக்கிறேன்.
Affiliate Marketing என்றால் என்ன? Affiliate Marketing Meaning In Tamil
ஒரு நிறுவனம் விற்பனைக்கு வைத்திருக்கும் பொருள்களையோ அல்லது திட்டங்களையோ பரிந்துரை செய்து விற்பனை செய்துகொடுத்தால் அந்த நிறுவனம் நமக்கு கமிஷன் தொகை ஒன்றினை தருவார்கள். இந்த முறையில் சம்பாதிப்பதற்கு பெயர் தான் Affiliate Marketing அல்லது இணைப்பு சந்தைப்படுத்துதல்.
இணைப்பு சந்தைப்படுத்துதல் சில உதாரணங்கள்
நாம் அன்றாடம் பார்க்க நேரிடும் பல்வேறு விசயங்களில் இணைப்பு சந்தைப்படுத்துதல் வியாபாரம் இருக்கிறது. அவற்றில் சில உதாரணங்களை நாம் இங்கே பார்க்கலாம்.
இணையதளம் வாயிலாக :
நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னதாக நிச்சயமாக அந்த பொருள் பற்றிய Review ஐ சில இணையதளங்களில் படித்து பார்ப்போம். அந்த இணையதளங்களில் குறிப்பிட்ட பொருளுக்கான அமேசான் லிங்க் அல்லது இதர லிங்க்குகள் இருக்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்து அமேசான் தளத்தில் குறிப்பிட்ட பொருளை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்கிய பொருளுக்கான கமிஷன் தொகையினை அந்த இணையதளத்தின் ஓனர் பெறுவார்.
யூடியூப் மூலமாக :
நீங்கள் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்க்கும் போது குறிப்பிட்ட பொருள் பற்றிய வீடியோக்களில் “லிங்க் கீழே இருக்கிறது” கிளிக் செய்து வாங்குங்கள் என்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு ஆப் பற்றிய வீடியோவில் கீழே லிங்க் இருக்கிறது அதனை கிளிக் செய்து வாங்குங்கள் என்பார்கள்.
நாம் அவர்களின் லிங்கை கிளிக் செய்து வாங்கினால் அவர்களுக்கு அதற்கான கமிஷன் தொகை சென்று சேரும்.
இப்படி, Affiliate Marketing ஐ பல்வேறு தளங்களில் பலரும் செய்துகொண்டு வருகிறார்கள்.
Important Elements In Affiliate Marketing | இணைப்பு சந்தைப்படுத்துதல் முக்கிய அம்சங்கள்
மிகவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த இணைப்பு சந்தைப்படுத்துதல் முறையில் நான்கு முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
உற்பத்தியாளர் : இவர்கள் தான் பொருளை உற்பத்தி செய்கிறவர்கள். இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள் என அனைத்தும் உற்பத்தியாளர் பிரிவில் வருவார்கள். இவர்கள் நேரடியாகவே சில சமயங்களில் தங்களது பொருளை விற்றுத்தருகிற நபருக்கு கமிஷன் வழங்குவார்கள்.
விற்பனையாளர் : அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் எந்தவொரு பொருளையும் பெரிதாக உற்பத்தி செய்திடாது. அவர்கள் உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் வேலையை மட்டுமே செய்வார்கள்.
இணைப்பு சந்தைப்படுத்துதல் நபர் : இவர் நல்ல பொருள்களை அல்லது நல்ல மென்பொருளை சோதித்து அது பற்றிய தகவல்களை இணையத்தில் பகிர்வார். இவர் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் கமிஷன் தரும் திட்டம் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கான லிங்க்கை பகிர்வார். நிறுவனங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லிங்குகளை தரும். அதனை கிளிக் செய்து வாங்கும் பட்சத்தில் அவர்களுக்கு கமிஷன் போகும்.
இது முழுமையாக எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
வாடிக்கையாளர் : இணைப்பு சந்தைப்படுத்துதல் நபரின் இணையதளம் அல்லது சமூக வலைத்தளம் போன்ற இடங்களில் இருந்து குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்து பொருளை வாங்கினால் அவருக்கு கமிஷன் சென்று சேரும்.
முடிவுரை
இப்படித்தான் Affiliate Marketing அல்லது இணைப்பு சந்தைப்படுத்துதல் செயல்படுகிறது. நீங்கள் இன்னும் விரிவாக Affiliate Marketing குறித்து படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து படியுங்கள். அமேசான் தளத்தில் Affiliate Marketing ஆரம்பிப்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
Read More Here : “Affiliate Marketing” அதிகமாக சம்பாதிப்பது எப்படி?