Saturday, November 23, 2024
HomeAffiliate MarketingAmazon Affiliate Marketing துவங்குவது எப்படி? சம்பாதிக்கலாம் வாங்க.....

Amazon Affiliate Marketing துவங்குவது எப்படி? சம்பாதிக்கலாம் வாங்க…..

how to make money from amazon affiliate marketing explained here.

Amazon Affiliate Marketing In Tamil – ஆன்லைன் மூலமாக கணிசமான வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால் உங்களுக்கு Amazon affiliate marketing சிறந்த முறையாக இருக்கும். அமேசானில் உள்ள Affiliate Program இல் இணைந்து கொண்டு அங்கே நீங்கள் விளம்பரப்படுத்த நினைக்கும் பொருளுக்கான தனித்துவமான லிங்கை நீங்கள் உருவாக்கி அதனை பகிர வேண்டும். அதனை யாரேனும் கிளிக் செய்து அமேசானில் குறிப்பிட்ட அந்த பொருளையோ அல்லது வேறு பொருளையோ வாங்கினால் அதற்கான கமிஷன் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 

புதிதாக Amazon Affiliate Marketing இல் இணைய விரும்புவோர் மிகச்சரியான வழிமுறைகளை பின்பற்றினால் தான் எளிதாக பணம் ஈட்ட முடியும். இல்லையேல், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்காது. இங்கே, புதிதாக Amazon Affiliate Marketing இல் இணைத்து வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. இவற்றை படித்து வருமானம் ஈட்டுங்கள்.

Amazon Affiliate Marketing எப்படி வேலை செய்கிறது?

நிச்சயமாக உங்களுக்கு அமேசான் தளம் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்கும். அங்கே பொருள்களை விற்க விரும்பும் உற்பத்தியாளர்கள், பொருள்களை வாங்கி அதனை விற்க நினைக்கும் கடைக்காரர்கள் மற்றும் ஏஜென்ட்கள் அமேசான் தளத்தில் கணக்கு துவங்கி வைத்திருப்பார்கள். தங்களிடம் உள்ள பொருள்களை எல்லாம் அவர்கள் புகைப்படம் மற்றும் விலைகளோடு பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். 

ஏதேனும் பொருள்களை வாங்க விரும்புகிறவர்கள் அமேசான் தளத்திற்கு சென்று அங்கே சர்ச் செய்து அந்த பொருள்களை பணம் கொடுத்து வாங்கலாம். ஆர்டர் செய்தால் நீங்கள் கொடுக்கும் முகவரிக்கே அந்தப்பொருளை குறிப்பிட்ட கடைக்காரர் அனுப்பி வைத்துவிடுவார். பொருளை அமேசான் விற்றுக்கொடுத்தபடியால் குறிப்பிட்ட கமிஷன் தொகையை கடைக்காரர் அமேசானுக்கு கொடுக்க வேண்டும். 

இங்கே தான் Amazon Affiliate Marketing வருகிறது. எந்தவொரு பொருள் விற்கப்பட்டாலும் அதற்கான கமிஷன் கட்டணம் என்பது அமேசானுக்கு போகும். ஆகவே, அதிகமாக பொருள்கள் விற்கப்பட்டால் அதிகமாக பணம் அமேசானுக்கு வரும். விற்பனையை அதிகரிக்க அமேசான் தளமானது Amazon Affiliate Program என்ற ஒன்றினை உருவாக்கி உள்ளது. அதிலே ஒருவர் இணைந்து பொருள்களை விற்பனை செய்துகொடுக்க உதவினால் தனக்கு வரும் கமிஷனில் ஒரு பகுதியை குறிப்பிட்ட நபருக்கு அமேசான் வழங்கும்.

Amazon Affiliate Marketing இல் சேருவது எப்படி?

Amazon Associates Program இல் நீங்கள் sign up செய்திட வேண்டும். யார் வேண்டுமானாலும் இலவசமாகவே இதில் சேரலாம். அமேசான் உங்களது கணக்கிற்கு Approve கொடுத்தவுடன் நீங்கள் unique affiliate links ஐ நீங்கள் உருவாக்கி பகிர ஆரம்பிக்கலாம். உங்களது லிங்கை கிளிக் செய்து யாரேனும் பொருள்களை வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். 

அமேசானில் கமிஷன் என்பது product category ஐ பொறுத்து மாறுபடும். கமிஷன் தொகையானது 1% முதல் 10% வரைக்கும் இருக்கும். நீங்கள் Amazon Affiliate Marketing இல் ஈடுபடுவதற்கு உங்களிடம் இணையதளம், சுமூக வலைதள கணக்கு போன்றவை அவசியம். அங்கே நீங்கள் உருவாக்கிய லிங்கை பகிரலாம். 

உதாரணத்திற்கு, நீங்கள் காரில் உள்ள கோடுகளை நீக்கும் Scratch Remover ஐ விற்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களிடம் இணையதளம் இருந்தால் அதிலே நீங்கள் Scratch Remover எப்படி வேலை செய்கிறது, எது விலை குறைவானது என்பவை குறித்து எழுதலாம். அங்கே, சில Scratch Remover களுக்கு  நீங்கள் உருவாக்கிய லிங்க்குகளை நீங்கள் பகிரலாம். உங்களது பக்கத்திற்கு வருகிறவர்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்து வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

சரியான பொருளை தேர்வு செய்வது எப்படி?

Amazon Affiliate Marketing இல் சேர்ந்து அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் சரியான பொருளை தேர்வு செய்து அதனை விளம்பரம் செய்திடுவது அவசியம். குறிப்பிட்ட அந்தப்பொருள் குறித்து உங்களுடைய அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அந்தப்பொருள் குறித்து சிறந்த Content ஐ   உருவாக்க வேண்டும். 

நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பொருளுக்கு அதிகமாக கமிஷன் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் உங்களுக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும். 

உங்களைப்போலவே, அதிகமான நபர்கள் Amazon Affiliate Marketing இல் இருப்பார்கள். அவர்களும் உங்களைப்போலவே அதிகமாக கமிஷன் கிடைக்கும் பொருள்களையே தேர்வு செய்வார்கள். ஆகவே, போட்டி என்பது அதிகமாக இருக்கும். ஆகவே, போட்டி குறைவாக இருக்கும் பொருள்களையே தேர்வு செய்ய வேண்டும்.

Creating Your Amazon Affiliate Account

நீங்கள் இதற்காக Amazon Associates கணக்கை துவங்க வேண்டும். இந்த இணையதளத்தில் https://affiliate-program.amazon.in/ கிளிக் செய்து புதிதாக கணக்கை துவங்கலாம். உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இல்லை எனில் ‘Sign Up’ பட்டனை கிளிக் செய்து புதிதாக கணக்கை துவங்கலாம். 

உங்களது அப்ளிகேஷன் அமேசான் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் நீங்கள் பொருள்களுக்கான லிங்க்குகளை உருவாக்கி பகிர முடியும்.

Generating Affiliate Links

Amazon Associates account ஐ நீங்கள் உருவாக்கிய பிறகு affiliate links ஐ நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் லிங்க்கை பெற குறிப்பிட்ட பொருள் உள்ள தளத்திற்கு சென்று விடுங்கள். பின்னர் மேலே இருக்கும் ‘Get Link’ பட்டனை அழுத்தினால் உங்களுக்கு தேவையான லிங்க்கை உருவாக்கி விடலாம். பின்னர் அந்த லிங்க்கை குறிப்பிட்ட பொருள் பற்றிய பதிவுகள் அடங்கிய இணைய பக்கத்தில் பகிரலாம். 

அதேபோல அமேசான் Plugin களும் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Amazon Affiliate Marketing இல் வருமானத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

Amazon Affiliate Marketing இல் அதிகமாக சம்பாதிக்க முதல்படி, உங்களது இணையதளத்திற்கு அதிகம் பேர் வர வேண்டும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பொருள் பற்றிய தரமான பதிவுகளை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் கூகுளில் யாரேனும் சர்ச் செய்தால் உங்களது இணையதளம் காண்பிக்கப்படும். நீங்கள் எழுதியவற்றை படிப்பார்கள், நீங்கள் பகிர்ந்த அமேசான் லிங்க்கை கிளிக் செய்வார்கள். குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து அவர்கள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படும்.

இரண்டாவதாக, சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம். உங்களது affiliate links ஐ அதிகம் பேருக்கு தெரியப்படுத்த இந்த முறை நன்றாக வேலை செய்யும்.

“Affiliate Marketing” அதிகமாக சம்பாதிப்பது எப்படி?

Affiliate Marketing Tools

Affiliate Marketing இல் அதிகமாக சம்பாதிக்க நீங்கள் மிகச்சரியான டூல்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். அப்படி நீங்கள் பயன்படுத்த வேண்டிய முக்கியமான டூல்களை இங்கே பார்க்கலாம். 

Amazon Product Advertising API : இந்த டூல் மூலமாக product pricing, sales rank, and customer reviews போன்றவற்றை அறிய முடியும். இதன் மூலமாக எந்தப்பொருளை நீங்கள் promote செய்ய வேண்டும் என தீர்மானம் செய்ய முடியும். 

Amazon Associates SiteStripe: நீங்கள் அமேசான் புராடக்ட் பக்கத்தில் இருந்து affiliate links ஐ உருவாக்க இந்த டூல் உதவலாம். 

Google Analytics: உங்களது இணையதளத்தின் செயல்பாடு, பக்கங்களின் நிலை, பயனாளர்களின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அறிய இந்த டூல் உதவும். 

Affiliate marketing forums : இங்கு நீங்கள் ஆலோசனைகள், கருத்துக்களை பெறலாம்.

Amazon Affiliate Marketing இல் நீங்கள் செய்யக்கூடிய தவறுகள்

புதிதாக Amazon Affiliate Marketing இல் சேர்பவர்கள் சில தவறுகளை செய்திட அதிக வாய்ப்பு உள்ளது. அவை, 

உங்களுடைய இணையதள பக்கத்தில் இருக்கும் தகவலுக்கு மாறான பொருள்களை விற்பனை செய்திட முயல வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுடைய இணையதளம் முற்றிலும் கேமரா சம்பந்தப்பட்ட விசயங்களை உள்ளடக்கியது என்று வைத்துக்கொள்வோம். அதிலே, நீங்கள் காருக்கு தேவையான பொருள்கள் பற்றிய விளம்பரங்களை இடுவது பயனற்றது. 

சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் மோசமான வழிகளை பின்பற்றுவார்கள். அதனை ஒருபோதும் நீங்கள் செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் உங்களது கணக்கு தடை படும். 

நீங்கள் நிரந்தரமாக இந்த முறையில் பணம் சம்பாதிக்க நினைத்தால் அமேசான் விதிமுறைகளை முழுமையாக படித்து அதை பின்பற்றுங்கள்.

இந்தப்பதிவில் Amazon Affiliate Marketing துவங்குவது எப்படி என விரிவாக தெரிந்துகொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னும் நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் அதிகமாக  இந்த முறையை பயன்படுத்தி சம்பாதிக்க முடியும். நல்ல பொருளை தேர்வு செய்திடுங்கள், அது பற்றிய தரமான பதிவுகளை உங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுங்கள், அதிலே லிங்க்கை பகிருங்கள். இதை நீங்கள் செய்தாலே உங்களுக்கு பணம் தானாக வந்துகொண்டே இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular