Saturday, November 23, 2024
HomeTech Articlesகணவரும் மனைவியும் 2 மில்லியன் மரங்களை நட்டு 20 ஆண்டுகளில் ஒரு காட்டையே உருவாக்கினார்கள்

கணவரும் மனைவியும் 2 மில்லியன் மரங்களை நட்டு 20 ஆண்டுகளில் ஒரு காட்டையே உருவாக்கினார்கள்

Re forestation

அவர்கள் அடுத்த 20 வருடங்களில் சிறந்த காட்டை உருவாக்கியிருந்தார்கள். அந்த காடுகள் உருவாக்கத்திற்கு பிறகு 172 பறவை இனங்கள், 33 வகையான பாலூட்டிகள், 293 வகையான தாவரங்கள் மற்றும் 15 வகையான ஊர்வன ஆகியவை அங்கு திரும்பியுள்ளன.

சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சிக்கல்களை சந்தித்து வருகிறது. சிறிய அளவிலான மாற்றங்களை தனி ஒருவரால் செய்துவிட முடியும் என்றபோதிலும் கூட சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்திட அரசின் உதவியோ அல்லது மிகப்பெரிய சமூக மாற்றமோ தேவைப்படும் என்ற எண்ணம் நம்மில் இருக்கிறது. ஆகவே தான் நாம் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படாமல் அமைதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், அது உண்மையல்ல. தனி மனிதர்கள் நினைத்தால் கூட இந்தப்பூமியில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்திட முடியுமென நிரூபித்து இருக்கிறார்கள் பிரேசில் நாட்டை சேர்ந்த செபாஸ்டினோ சல்கடோ மற்றும் அவரது மனைவி லூலியா டெலூயிஸ் வானிக் சல்கடோ.

பிரேசில் நாடு எதார்த்தத்தில் நல்ல காடுகள் வளமுள்ள ஒரு நாடு தான். அப்படியொரு பகுதியை சார்ந்தவர் தான் செபாஸ்டினோ சல்கடோ [photographer Sebastião Salgado]. இவர் தொழில் ரீதியாக புகைப்படக்கலைஞர். இவர் சிறந்த புகைப்படக்கலைஞர் . இவர் எடுத்த சிறந்த புகைப்படங்கள் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர உதவியது. கடைசியாக இவர் ருவாண்டா இனப்படுகொலை குறித்த புகைப்படங்களை எடுப்பதற்காக இவர் சென்றுவிட்டு 1990 களில் சொந்த ஊர் திரும்பினார். அவர் தன்னுடைய பகுதிக்கு திரும்பி வந்தபோது தான் அணு அணுவாய் ரசித்த காடுகள், மரங்கள், செடிகள், அதனுள் இருந்த விலங்குகள், பூச்சியினங்கள், பறவைகள் என எவையும் இல்லாததை கண்டு மனம் நொந்தார். காடுகள் அழிவைப் பற்றி அவர் இப்படித்தான் சொல்கிறார் ‘காடுகள் மட்டும் அழியவில்லை, நானும் அழிந்துபோனேன்’ என்கிறார்.

காடுகள் அழிந்துவிட்டது இதற்கு நம்மால் என்ன செய்திட முடியும் என எண்ணிக்கொண்டு இருக்காமல் காடுகளை தானும் தனது மனைவியும் மீட்போம் என உறுதிபூண்டார். அன்று துவங்கியது தான் இந்த தம்பதியரின் பயணம். அவர்கள் தங்களது பயணத்தை துவங்கியபோது வெறும் 0.5% தான் மரங்கள் இருந்தன. அவர்கள் மரங்களையும் செடிகளையும் நட ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல பறவைகளும் பூச்சியினங்களும் அங்கே தானாக வரத்துவங்கின. இந்த இணையாளர்கள் இணைந்து Instituto Terra எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலமாக மில்லியன் கணக்கான மரங்கள் நடுவது சாத்தியமற்று.

‘ஒருவர் முயன்றால் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜன் ஆக மாற்றலாம். பாலைவனத்தை பசுமை நிறைந்த காடுகளாக மாற்றலாம்’ 

அவர்கள் அடுத்த 20 வருடங்களில் சிறந்த காட்டை உருவாக்கியிருந்தார்கள். அந்த காடுகள் உருவாக்கத்திற்கு பிறகு 172 பறவை இனங்கள், 33 வகையான பாலூட்டிகள், 293 வகையான தாவரங்கள் மற்றும் 15 வகையான ஊர்வன ஆகியவை அங்கு திரும்பியுள்ளன.

இதுவரைக்கும் இப்படியொரு சாதனையை எவருமே செய்ததில்லை என்பதே உண்மை. இதற்காகவே இந்த கணவனும் மனைவியும் இங்கே கொண்டாடப்படுகிறார்கள். நீங்க உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், நீங்கள் எந்தவித பிரச்சனைகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் நீங்கள் நீங்கள் நினைத்தால் உங்களால் அந்த பிரச்சனையை சரிசெய்திட முடியும்.





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular