உலகின் நம்பர் 1 பணக்காரர் தினமும் என்ன செய்வார் என்று அறிந்துகொள்ள அனைவருக்கும் விருப்பம் இருக்கும். தற்போது நம்பர் 1 பணக்காரர் ஜெப் பெஸோஸ் தினமும் என்ன செய்வார், எப்படி ஒரு நாளை செலவிடுவார் [Jeff bezos Daily Routine] என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
ஜெப் பெஸோஸ் எப்போது எழுவார்?
8 மணி நேர தூக்கம் என்பதை ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. 7 – 8 மணிநேரம் தூங்கியே தீருவார்.
உலகின் நம்பர் 1 பணக்காரர் பெஸோஸ் வெறுமனே அமேசான் நிறுவனத்திற்கு மட்டும் தலைவர் இல்லை, கூடவே Blue Origin The Washington Post ஆகிய நிறுவனங்களுக்கும் இவரே தலைவர். அமேசான் நிறுவனம் மட்டுமே பல்வேறு பணிகளை செய்து வருகிறது – திரைப்படங்கள் தயாரிக்கிறது, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [A.I. voice technology] இல் வேலைகளை செய்கிறது, பொருள்கள் விற்பனையில் ஈடுபடுகிறது. இப்படி பல்வேறு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை கையாள வேண்டுமெனில் ஒருவருக்கு 24 மணிநேரம் போதாது என எண்ணுவோம். அப்படி எண்ணுகையில் நமக்கு எழும் முக்கியமான கேள்வி, அவர் எப்போது எழுவார்? என்பது தான். அதிகாலை 3 மணி அளவில் ஜெப் பெஸோஸ் எழுந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வில் ‘நான் சீக்கிரம் தூங்கச்சென்று சீக்கிரம் எழுவேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.
காலை பழக்க வழக்கங்கள்
ஜெப் பெஸோஸ் அதிகாலை எழுந்தவுடன் அதிகம் சிந்திக்கத்தேவையில்லாத வேலையை முதலில் துவங்குவார். அதேபோல காலையில் செய்தித்தாள் படிப்பதும் காபி அருந்துவதும் பிடித்தமானவை என அவரே கூறியிருக்கிறார். அதேபோல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு மூலமாக அவர்களுடன் காலை உணவை சேர்ந்து சாப்பிடுவது பிடித்தமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கியமான வேலைகள் முதலில்….
உலகின் முதல் பணக்காரர் தனது அலுவலக வேலையை அதிகாலை 10 மணிக்குத் துவங்குவார். பல நிறுவனங்களை கவனிக்க வேண்டிய தேவை இருந்தாலும் கூட ஜெப் பெஸோசுக்கு அமேசான் நிறுவனத்தின் மீது தான் முதல் கவனம் எப்போதுமே இருக்கும். சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய விசயங்களை நாளின் துவக்கத்தில் வைத்துக்கொள்வார் பெஸோஸ்.
மாலை நேரங்களில் முடிவுகளை எடுப்பதை தவிர்த்துவிடுவதாக கூறிடும் பெஸோஸ் மாலை 5 மணிக்கு பிறகு ஏதேனும் முடிவுகளை எடுக்க வேண்டும் என அணுகினால் ‘என்னால் இப்போது சிந்திக்க முடியவில்லை, நாளை காலை பார்த்துக்கொள்ளலாம்’ என கூறிவிடுவேன் என்று கூறினார் பெஸோஸ்.
8 மணிநேர தூக்கம்
ஒவ்வொருவருக்கும் 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்று என்பது தெரிந்ததே. ஆனால் பல நிறுவனங்களை நிர்வகிக்கும் நம்பர் 1 பணக்காரரால் எப்படி 8 மணி நேரம் தூங்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. இதுபற்றிய கேள்விக்கு ‘வெளிநாடுகளுக்கு செல்லும் நேரம் தவிர்த்து நான் 8 மணிநேரம் தூங்குவேன். சில சமயங்கள் அது முடியாமல் போனாலும் கூட 8 மணிநேரம் தூங்குவதற்கு நான் முயற்சி செய்வேன். அப்படி தூங்கும் போது அதிக ஆற்றல் கிடைக்கிறது. நிம்மதியைத் தருகிறது. இதனால் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிகிறது’ என்றார்.
வெற்றிக்கான காரணம்
மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக ஒருவர் செய்யக்கூடிய வேலை என்ன என்பதற்கு ஜெப் பெஸோஸ் அளிக்கக்கூடிய பதில் ‘மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் குறைந்த எண்ணிக்கையிலான அதேசமயம் மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அந்த முடிவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில் சோர்வாகவோ வேறு சிந்தனையுடனோ இருந்தால் சரியாக இருக்காது. அதையே நான் செய்கிறேன்’ என்கிறார் பெஸோஸ்.
Read Here : ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை