Friday, September 20, 2024
HomeTech ArticlesWhat is VPN? How VPN works? Is VPN really secure for browsing?...

What is VPN? How VPN works? Is VPN really secure for browsing? | Tamil

 


 

VPN என்பதற்கு ஆங்கில விரிவாக்கம் Virtual Private Network . VPN இன் முக்கிய பயன்பாடு, இணையத்தை பயன்படுத்துபவரின் விவரங்களை (Location, Browsing History) மறைத்து எவரும் கண்காணிக்க முடியாமல் செய்வது மற்றும் தனித்துவமான பாதுகாப்பான இண்டெர்நெட் இணைப்பினை வழங்குவது .

 


VPN usuages 

 

Issue 1 

 

உதாரணத்திற்கு , நீங்கள் Airtel மொபைல் நெட்ஒர்க் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் .ஒரு இணையதளத்தை பார்க்க பிரவுசரில் அந்த இணையதளத்தை குறிப்பிடும்போது சில தகவல்கள் நீங்கள் வைத்திருக்கும் Airtel Network க்கு செல்லும். நீங்கள் யார் ? எந்த இணையதளத்தை பார்க்கிறீர்கள் , அதில் என்ன விவரங்களை தேடுகிறீர்கள் , எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் போன்ற பல தகவல்களை Airtel சேமித்து வைக்கும் .

 


 

Issue 2 



அதேபோல techtamilan.in என்ற இணையதளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம் . உங்களால் இந்தியாவில் இருந்துகொண்டு அந்த இணையதளத்தை பார்க்க இயலாது .

 


 

Issue 3 

 

உங்களது நிறுவனம் வெளிநாட்டிலோ அல்லது வெளி நகரத்திலோ இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் . உங்களது நிறுவனத்தின் சர்வரை நீங்கள் பயன்படுத்திட இண்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . அதே இண்டெர்நெட்டை பிறரும் பயன்படுத்தி உங்களது சர்வரில் இருந்து தகவலை திருட முடியும் .

 


 

How VPN fixes Issue 1 by hiding your identity?

 

VPN
VPN

 

நீங்கள் உங்களது கணிணி அல்லது மொபைலில் VPN ஐ இண்ஸ்டால் செய்திருக்கிறீர்கள் . இப்போது நீங்கள் பிரவுஸ் செய்திடும்போது உங்களது request அனைத்தும் VPN சர்வருக்கு செல்லும் . VPN சர்வர் உங்களது தகவல்களை என்க்ரிப்ட் செய்து புதிதாக ஒரு request ஐ Airtel க்கு அனுப்பிடும் . அவ்வாறு அனுப்பப்படும் புதிய request இல் உங்களுடைய உண்மையான அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் . இதனால் உங்களை Airtel போன்றவர்களால் கண்காணிக்க முடியாது .

 


 

How VPN fixes Issue 2 by hiding your geographic info?

 

ஒரு இணையதளத்தை இந்திய அரசாங்கம் முடக்க போகிறது என்றால் குறிப்பிட்ட இணையதளம் குறித்த தகவலை ஏர்டெல் , வோடபோன் போன்ற நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பிடும்.   இந்தியாவிற்குள் இருக்கின்ற பயனாளர்கள் குறிப்பிட்ட அந்த இணையதளத்தை பயன்படுத்த request அனுப்பினால் இணையதளத்தை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் . இந்திய அரசின் ஆணைப்படி இணையதளம் தடைசெய்யப்பட்டுள்ளது என செய்தி வரும் .

 

What is VPN?
What is VPN?



ஆனால் VPN ஐ பயன்படுத்திடும்போது உங்களது இருப்பிடம் இந்தியா என இருக்காது. மாறாக VPN server இருக்கும் இருப்பிடமே ஏர்டெல் , வோடோபோன் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் . ஆகையால் உங்களால் இணையதளத்தை பார்க்க முடியும் .

 


 

How VPN fixes Issue 3 by creating a secure network?

 

பல நிறுவனங்கள் தங்களது சர்வரை remote login செய்வதற்கு VPN ஐ பயன்படுத்துகின்றன . தகவல் பாதுகாப்பனதாக பரிமாறப்படுகிறதா என்பதனை உறுதி செய்திட authentication செய்யவேண்டி இருக்கும் . அதாவது password, tokens போன்றவற்றை உள்ளீடு செய்யவேண்டி இருக்கும் .

 


Is VPN really secure?

 

இரண்டு விதமான VPN இருக்கின்றன . Free VPN மற்றும் Paid VPN . அதே போல பல VPN ப்ரொவைடர்கள் இருக்கிறார்கள் . சிலர் நம்முடைய தகவல்களை சேமித்துவைக்கிறார்கள் , சிலர் அதனை செய்வது இல்லை . ஆனால் VPN சேவையினை பயன்படுத்தும்போது நெட்ஒர்க் ப்ரொவைடர்களுக்கு நமது தகவல்கள் போவது இல்லை .

 

உதாரணத்திற்கு நாம் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற Hotspot Shield VPN ஆனது Users எந்த இணையதளங்களுக்கு போகிறார்கள் என்பதனை கண்காணிக்கிறது . ஆனால் அதனை தனித்துவமாக செய்யாமல் ஒட்டுமொத்தமாக செய்கின்றது (It collects anonymous only, aggregate data) .


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular