Features of 5G
இனி தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்திட அமெரிக்காவில் இருந்து மருத்துவர் வரத்தேவை இல்லை. செலவினம் குறைவதோடு நேர விரயமும் குறையும்
உதாரணத்திற்கு, இதய அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்குகிற மருத்துவர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம் . இந்தியாவில் இருக்கும் ஒரு நோயாளிக்கு ஆப்ரேசன் செய்திட வேண்டுமெனில் அமெரிக்காவில் இருந்து மருத்துவர் இந்தியாவிற்கு வந்துதான் ஆப்ரேசன் செய்யவேண்டி இருக்கும் . வந்துபோவதற்கு ஆகும் செலவு என ஒருபக்கம் இருக்க , பயணத்திலேயே மருத்துவரின் பெரும்பாலான நேரமும் வீணாகிறது .
இதனால் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் கிடைப்பதிலும் பெரும்பாலானவர்களுக்கு நல்ல மருத்துவரின் சிகிக்சை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகின்றது . அதிவேக 5G (5ஜி) தொழில்நுட்பத்தின் வருகையினால் இனி இந்த சிக்கல்கள் இருக்காது என்கிறார்கள் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ வல்லுநர்கள் .
சீனாவின் மருத்துவத்துறையில் 5ஜி
அதிவேக இண்டெர்நெட் சேவை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் . அந்த கண்டுபிடிப்புகளில் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பணியினை துவங்கிவிட்டன . குறிப்பாக ஹவாய் நிறுவனமும் முழுமுயற்சியாக இதில் இறங்கியிருக்கிறது .
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் நிலவுகின்றது . இதற்கு முக்கியக்காரணம் தரமான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம் . இதற்கு பெரிய தீர்வினை கொடுத்திருக்கின்றது 5ஜி.
சீனாவின் Gaozhou எனும் பகுதியானது வாழைப்பழம் , லிச்சி போன்ற பழங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களால் நிறைந்தபகுதி . அங்கு இருக்கும் மக்களுக்கு சரியான மருத்துவத்தை கொடுப்பதில் சிக்கல்கள் நிலவின . ஆனால் புதிய 5ஜி தொழில்நுட்பத்தின் வருகையினால் அந்த பிரச்சனை நீங்கியிருக்கிறது .
கடந்த ஏப்ரல் மாதம் , இந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அதிவேக 5ஜி இணைப்பின் மூலமாக 41 வயது பெண்ணுக்கு இதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டது . அறுவை சிகிச்சையினை 400 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த மருத்துவர்கள் ஆப்ரேசனை மேற்கொண்டார்கள் . ஒரு மருத்துவக்குழு நோயாளியுடன் இருக்க , அதிவேக இண்டெர்நெட் உடன் இணைக்கப்பட்டுள்ள திரை மற்றும் கருவிகளைக்கொண்டு ஆப்ரேசன் நடத்தபட்டிருக்கிறது .மருத்துவத்துறையின் மிகப்பெரிய வளர்ச்சியாக இது இருக்குமென கருதப்படுகிறது
இனி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மருத்துவம் விரைவாகவும் மலிவான செலவிலும் கிடைக்குமென்பது மட்டும் நிதர்சனமான உண்மை .
Read this also :
5G தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடு
5G சோதனையால் பறவைகள் இறந்தனவா?
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.