Story Of Facebook
Facebook இத்தனை பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடையும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. இன்று facebook இல்லாத ஸ்மார்ட்போன்கள் இல்லை என்கிற அளவிற்கு அன்றாட வாழ்வில் அங்கமாகிவிட்டது facebook
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் என வெகு சில நிறுவனங்களை மட்டுமே நம்மால் கூற இயலும். அந்த வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் Google , Amazon போன்ற நிறுவனங்களுடன் Facebook க்கிற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு. இன்று 2 பில்லியன்களுக்கும் மேற்பட்ட மாதாந்திர பயனாளர்களை கொண்டிருக்கிற Facebook எப்படி துவங்கப்பட்டது? எதிர்காலத்தில் வருமானம் கொழிக்கப்போகிற நிறுவனமாக இது உருவெடுக்கும் என மார்க் ஜுக்கர்பெர்க் எதிர்பார்த்திருந்தாரா? என்பது போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதிலை தெரிந்துகொள்வோம்.
FaceMash
2004 ஆம் ஆண்டு Facebook துவங்கப்பட்டது என்றாலும் அதற்கான ஐடியா FaceMash இல் இருந்துதான் பிறந்திருக்கிறது . 2003 ஆம் ஆண்டு FaceMash எனும் புரோகிராமை மார்க் ஹார்வேர்டு பல்கலைக்கழக நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டார். FaceMash என்பது இருவரில் யார் “Hotter” அதாவது கவர்ச்சியானவர் என்பதனை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வசதி கொண்ட புரோகிராம். இந்த புரோகிராமை வெளியிட்டமைக்காக கல்லூரி நிர்வாகத்தால் தண்டனை பெற்றார் மார்க் ஜுக்கர்பெர்க். இருந்தாலும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து சிறிதளவில் தப்பித்துக்கொண்டார்.
FashMash இல் இருந்துதான் Facebook க்கிற்கான சிந்தனை மார்க்கிற்கு தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது Face Book என்ற ஒன்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தது. அதில் மாணவர்களது புகைப்படம் மற்றும் அவர்கள் பற்றிய சிறு தகவல்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் அனைத்து ஹார்வேர்டு மாணவர்களுக்குமான Face Book என்ற ஒன்று இல்லை. அப்படி ஒன்றினை உருவாக்கலாம் என்ற சிந்தனையில் உதித்ததுதான் Facebook .
Facebook யாருடைய ஐடியா?
2004 ஆம் ஆண்டு thefacebook.com ஆனது ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு “The Facebook” வெளியிடப்பட்டது. Facebook உண்மையாலுமே யாருடையது என்பதில் குழப்பங்கள் நிலவின. அதற்க்கு காரணம், Facebook ஐடியா எங்களிடம் இருந்து திருடப்பட்டது என கேமரன், டைலர் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகிய மூவரும் குற்றம் சாட்டினர். “HarvardConnection” என்ற ஒரு புரோகிராமை உருவாக்க மார்க்கின் உதவியை நாட்டியதாகவும் அப்படித்தான் தங்களது ஐடியாவை திருடியதாகவும் குற்றம் சாட்டினர்.
பின்னாளில் இது வழக்காகவும் மாறிப்போக அதற்கு சமாதானமாக 2008 ஆம் ஆண்டு மூவருக்கும் 1.2 மில்லியன் பங்குகள் வழங்கப்பட்டன.
Facebook அபரிவிதமான வளர்ச்சி
ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றதனால் ஸ்டான்போர்டு, கொலம்பியா போன்ற பல கல்லூரி மாணவர்களுக்கும் பறந்து விரிந்தது. செப்டம்பர் 26, 2006 ஆம் ஆண்டு உலகில் எவரும் Facebook இல் கணக்கினை துவங்கலாம் என்ற வசதி வந்தது, இதற்கு நீங்கள் 13 வயது நிரம்பியவராகவும் உண்மையான மின்னஞ்சல் முகவரியை கொண்டவராகவும் இருந்தால் போதுமானது.
இப்படி துவங்கிய Facebook இன்று அனைவரது வாழ்விலும் அங்கம் வகிக்கின்ற ஒரு விசயமாக மாறி இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது மக்கள் Facebook இல் செலவழிக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இதன் மூலமாக வருமானம் வருமா என எதிர்பார்த்து இதனை மார்க் உருவாக்கினாரா என்பது என்பது தெரியவில்லை ஆனால் இன்று மிகப்பெரிய பணக்காரராக மார்க் உருவாகி இருப்பதற்கு Facebook மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
Facebook இன் 2018 ஆம் ஆண்டு லாபம் எவ்வளவு தெரியுமா? 2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் $16.91 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. அதேபோல 2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் $55.8 பில்லியன். Facebook நிறுவனம் கடந்த ஆண்டு வருமானம் $40.6 பில்லியன் வருமானத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read this also :
Facebook இன் 2018 ஆம் ஆண்டு லாபம் எவ்வளவு தெரியுமா?
Facebook இன் 25 மில்லியன் டாலரை முதலீடாக பெறும் முதல் இந்திய நிறுவனம் மீஸோ
என்ன மார்க் சக்கர்பெர்க் சம்பளம் இவ்வளவுதானா?
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
[…] சமூக வலைதளமான facebook உலக […]
[…] Facebook , Instagram , Twitter, Youtube […]
[…] வலைதளங்கள், facebook , twitter , youtube , instagram போன்றவவை […]
[…] ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்ப&…, எலன் […]
[…] facebook இல் கணக்கினை […]
[…] இருக்கக்கூடிய facebook பயனாளர்கள் இந்த […]
[…] Read Here […]