Foldable PC
உலகின் முதல் ‘foldable PC’ யை லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு இந்த கணினி விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்மார்ட் போன்களில் foldable screen என்பது அனைவரும் அறிந்த விசயமே. டெக் உலகில் அடுத்த அதிரடியாக foldable screen கொண்ட லேப்டாப்பை லெனோவா நிறுவனம் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விற்பனைக்கு வரவிருந்த உலகின் முதல் foldable screen ஸ்மார்ட்போன் என அறியப்பட்ட சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக “Samsung Galaxy Fold Smartphone” ஐ நிறுத்தி வைத்தது. இதற்க்கு காரணம் Screen இல் ஏற்பட்ட குறைபாடுகள் தான் என கூறப்பட்டது. தற்போது லெனோவா இந்த முயற்சியில் இறங்கியிருப்பதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் புதிய லெப்டோப் ஆனது Thinkpad X1 சீரியசில் வெளியாகிறது. LG நிறுவனத்துடன் இணைந்து 13.3-inch 2K OLED display தயாரிக்கப்படுகிறது, மேலும் இன்டெல் புராசஸர் (intel Processor) உடன் இப்புதிய லேப்டாப் வெளியாக இருக்கிறது. புதிய லேப்டாப் குறித்து மேலதிக தகவல்கள் [Specification] இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.https://youtu.be/_XBU_xxpsQk
லெனோவாவின் இப்புதிய கருவியினை இரண்டு விதங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். “laptop mode” “tablet mode” என பயன்படுத்தலாம். ‘foldable PC’ கேட்பதற்கு ஆர்வமுடைய விசயமாக இருந்தாலும் கணினியில் ‘foldable screen’ என்பது பயன்படுத்தும் போது எளிமையானதாக இருக்குமா? சேதாரம் ஏற்பட்டு விட வாய்ப்புகள் அதிகமிருக்குமா என்பது போன்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.