Sunday, May 19, 2024
HomeUncategorizedகொரோனா காலத்தில் அசத்தும் 5 ரோபோக்கள்

கொரோனா காலத்தில் அசத்தும் 5 ரோபோக்கள்

மாணவர்களுக்கு பட்டமளிக்க உதவும் ரோபோ

5 Robots

சிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் போஸ்டன் ரோபோ , டெலிவரி செய்திடும் ஸ்டார்ஷிப் ரோபோ, சீன மருத்துவமனையில் பயன்படும் UVD ரோபோ
, பொதுமக்களை கண்காணிக்கும் Zora ரோபோக்கள், மாணவர்களுக்கு பட்டமளிக்க உதவும் ரோபோ 
போன்ற 5 ரோபோக்கள் கலக்கி வருகின்றன


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கெடுதல்கள் நடந்தாலும் கூட சில நன்மைகளும் ஏற்படவே செய்கின்றன. தொழில்நுட்பத்தை சில விசயங்களில் பயன்படுத்திப்பார்ப்பதற்கான வாய்ப்பினை இந்த கொரோனா காலம் கொடுத்திருக்கிறது எனலாம். இந்தியாவில் சமூக இடைவெளியை கண்காணிக்க போலீசார் வானில் பறந்து கண்காணிக்கும் ட்ரோன் கேமராக்களை பெருவாரியாக தற்போது தான் பயன்படுத்துப்பார்க்கிறார்கள். இதற்கான வாய்ப்பு அவர்களுக்கு முன்பு கிடைக்கவில்லை. இனி வரும் காலங்களில் இதே ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி குற்றவாளிகளை ஆதாரத்தோடு பிடிக்க இயலும். 

 

இப்படி பல்வேறு நாடுகளிலும் ரோபோக்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆபத்தான காலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் 5 ரோபோக்கள் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். 

சிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் போஸ்டன் ரோபோ

சிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் பணியில் ரோபோ

சிங்கப்பூரில் இருக்கக்கூடிய உள்ளூர் நிர்வாகம் ஒன்று பார்க்கிற்கு வருகிறவர்களை கண்காணிப்பதற்காக போஸ்டன் டைனமிக்ஸ் இன் நான்கு கால்கள் கொண்ட ரோபோவை பயன்படுத்த துவங்கி இருக்கிறது. தற்சமயம் Bishan-Ang Mo Kio Park இல் மட்டும் கண்காணிப்பை துவங்கி இருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற்றால் கூடுதலான இடங்களிலும் ரோபோ பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 

இந்த ரோபோவானது நான்கு கால்களை கொண்டிருப்பதனால் எத்தகைய ஏற்றத்தாழ்வான இடங்களிலும் செல்ல வல்லது. அதேபோல இதில் இருக்கக்கூடிய கேமராக்களின் மூலமாக எத்தனை பேர் வருகிறார்கள்? சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதனை பார்க்க முடியும். அதேசமயம், இந்த கேமராக்களில் இருந்து தனிமனிதர்களின் தகவல்கள் பெறப்பட மாட்டாது மற்றும் வேறெங்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.

 

 

ரிமோட் வாயிலாக தற்சமயம் இயக்கப்படும் இந்த ரோபோவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் ஒலிக்கப்படும். இதன்மூலமாக, நேரடியாக களத்தில் பணியாட்களை வேலைக்கு அமர்த்திட வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது நிர்வாகம். 

 

 

சமூக இடைவெளியை பின்பற்றிடுவதை கண்காணிக்க ரோபோக்களையும் ட்ரோன் கேமராக்களையும் பயன்படுத்துவது முதல் முறை அல்ல. ஏற்கனவே அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கூட ட்ரோன் மூலமாக கண்காணிப்பது, மருந்து தெளிப்பது, அறிவுரைகளை வழங்குவது என பயன்படுத்தப்படுகின்றன. 


டெலிவரி செய்திடும் ஸ்டார்ஷிப் ரோபோ

டெலிவரி செய்திடும் ஸ்டார்ஷிப் ரோபோ

லண்டனில் இருக்கக்கூடிய Milton Keynes எனும் பகுதியில் உணவு மற்றும் மாளிகைப்பொருள்களை வீடுகளுக்கே சென்று சேர்க்கக்கூடிய ரோபோ பயன்பாட்டில் இருக்கிறது. 6 கால்களை கொண்டிருக்கும் இந்த ரோபோ மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 

சீன மருத்துவமனையில் பயன்படும் UVD ரோபோ

சீன மருத்துவமனையில் பயன்படும் UVD ரோபோ

மிகவும் சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர்களை வீசி குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் நுண்ணிய கிருமிகளைக்கூட அளிக்கும் வல்லமை கொண்ட வசதியுடன் கூடிய ரோபோக்கள் சீன மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் உடலுக்கு இந்த கதிர்வீச்சு தீமை விளைவிக்கும் என்பதனால் பணியாளர்கள் இல்லாத நேரங்களில் தானாகவே சென்று மருத்துவமனையை சுத்தம் செய்திடும் வசதி கொண்டவை இந்த ரோபோக்கள். 

பொதுமக்களை கண்காணிக்கும் Zora ரோபோக்கள்

பொதுமக்களை கண்காணிக்கும் Zora ரோபோக்கள்

பெல்ஜியத்தை சேர்ந்த Zora Bots எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோக்கள் மக்களின் வெப்பநிலையை ஸ்கேன் செய்திடும் வசதி கொண்டவை. மேலும் யார் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள், வெப்பநிலை எப்படி இருக்கிறது, அவர்களின் சத்தம் உள்ளிட்டவற்றில் என்ன மாற்றம் இருக்கிறது என்பது போன்றவற்றை கண்காணிக்க உதவுகிறது இந்த ரோபோ. கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை கொண்டு சேர்க்கும் பணியையும் இந்த ரோபோ செய்கிறது. 

மாணவர்களுக்கு பட்டமளிக்க உதவும் ரோபோ

மாணவர்களுக்கு பட்டமளிக்க உதவும் ரோபோ

ஜப்பானில் கொரோனா காலகட்டத்தின் போது மாணவர்கள் பட்டம் வாங்குவதற்கு உதவிடும் விதமாக ரோபோவை OhmniLabs தயாரித்து இருக்கிறது. ரோபோவின் முகத்திரையில் இருக்கும் டேப் ஆனது மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து Zoom மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். தங்களுக்கான வாய்ப்பு வருகையில் இந்த ரோபோ நடந்து சென்று பட்டத்தை வாங்கிக்கொள்ளும். இதனை அந்த மாணவர் நேரடியாக பார்த்துக்கொள்ள முடியும், மேலும் யார் தனக்கு பட்டம் அளிக்கிறார் என்பதையும் அவருடைய வாழ்த்தையும் பெற்றுக்கொள்ள முடியும். 

 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular