Tuesday, December 3, 2024
HomeTech Articles44.2 Tbps அதிவேக இன்டர்நெட், விஞ்ஞானிகள் சாதனை | High Speed Internet

44.2 Tbps அதிவேக இன்டர்நெட், விஞ்ஞானிகள் சாதனை | High Speed Internet

44.2 Tbps இன்டர்நெட் வேகம், விஞ்ஞானிகள் சாதனை
4ஜி வந்துவிட்ட இந்த சூழ்நிலையிலும் கூட இணைய வேகம் என்பது சில மெகா பைட்டுகள் [MB] அளவில் தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வில் விஞ்ஞானிகள் 44.2 Tbps என்ற அதிவேகத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராச்சியாளர்கள் சோதனை மூலமாக அதிகபட்ச இன்டர்நெட் வேகமான 44.2 Tbps ஐ அடைந்து இருக்கிறார்கள். இந்த இணையவேகமானது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிகபட்சமாக எட்டப்பட்ட இணையவேகமாக கருதப்படுகிறது. ஒரு சிறிய சிப் மூலமாக இதனை நிகழ்த்தி சாதித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த இணையவேகத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆமாம், சிறந்த தரத்திலான 1000 திரைப்படங்களை ஒரு நொடியில் டவுன்லோட் செய்யும் அளவுக்கு சமமானது 44.2 Tbps.

ஆய்வாளர்கள் : Dr Bill Corcoran (Monash), Distinguished Professor Arnan Mitchell (RMIT) and Professor David Moss (Swinburne)

44.2 Tbps இன்டர்நெட் வேகம், விஞ்ஞானிகள் சாதனை

இவர்கள் கண்டறிந்த ஒரு சிப்பானது [micro-combs] தற்போது பயன்பாட்டில் இருக்கும் லேசர் கருவிகளைப்போல 80 மடங்கு அளவிலான சிக்கனல்களை கடத்தும் திறன் வாய்ந்தது. இந்த புதிய சிப்பை சோதித்து பார்ப்பதற்காக “dark” பைபர் கேபிள்களை 76.6 கிலோமீட்டர் தொலைவுக்கு பதித்துள்ளனர். புதிதாக கண்டறியப்பட்ட சிப்பானது பைபர் நெட்ஒர்க்கை மாற்றி அமைத்து அதிகபட்ச தகவல்களை அனுப்பும்படி செய்கிறது. 

 

இன்டர்நெட் உலகத்தில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய வாய்ப்புகளையும் மாறுதல்களையும் உண்டாக்கும் என கருதப்படுகிறது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular