ZAO App
ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்பட வீடியோ அல்லது எந்தவொரு வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்திற்கு பதிலாக உங்களது முகத்தை வைக்க முடியும் – ZAO ஆப்
Click Here! Get Updates On WhatsApp
ஏற்கனவே FaceApp வந்து ஒரு பெரும் அலையை ஏற்படுத்திவிட்டு போனபிறகு தற்போது சீனாவில் அறிமுகமாகி இருக்கக்கூடிய ZAO ஆப் பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறது.
இதற்க்கு முன்னர் அறிமுகமாகி இருந்த FaceApp இல் நீங்கள் ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை பல்வேறு காலகட்டங்களுக்கு மாற்றி பார்க்க முடியும். இது பெரும் வரவேற்பை பெற்ற போது பயனாளர்கள் சமர்ப்பிக்கும் போட்டோக்கள் மீதான அனைத்து உரிமையும் தங்களுக்கு இருப்பதாக அந்நிறுவனத்தின் பிரைவசி பாலிசி இருக்க பெரும் விமர்சனத்தை சம்பாதித்தது. பின்னர் தங்களுடைய AI திறனை மெருகேற்றிட தான் அவை பயன்படுத்தப்படும் என்றும் பயனாளர்களின் அனுமதி இன்றி பகிரப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டது.
அதையும் தாண்டி தற்போது சீனாவில் வெளியாகி இருக்கும் ZAO ஆப் இல் பயனாளர் தங்களது புகைப்படத்தை அப்லோட் செய்திட வேண்டும், பின்னர் அவர்களுக்கு எந்த வீடியோவில் இருக்கும் ஒரு நபரின் முகத்திற்கு பதிலாக தங்களது முகத்தை மாற்றிட வேண்டுமோ அதனை செலக்ட் செய்திட வேண்டும். அவ்வளவுதான் பயனாளரின் முகம் மாற்றப்பட்டுவிடும்.
In case you haven't heard, #ZAO is a Chinese app which completely blew up since Friday. Best application of 'Deepfake'-style AI facial replacement I've ever seen.
Here's an example of me as DiCaprio (generated in under 8 secs from that one photo in the thumbnail) 🤯 pic.twitter.com/1RpnJJ3wgT
— Allan Xia (@AllanXia) September 1, 2019
மேலேயுள்ள வீடியோவில் டிகாப்ரியோ முகத்திற்கு பதிலாக பயனாளரின் முகம் மாற்றப்பட்டிருப்பதனை பார்க்கலாம். உதாரணத்திற்கு பிகில் திரைப்பட பாடலுக்கு நீங்கள் நடனம் ஆட விரும்பினால் விஜய் அவர்களின் முகத்துக்கு பதிலாக மிகவும் எளிமையாக 10 வினாடிகளுக்குள் உங்களது முகத்தை வைத்து விட முடியும்.
இதில் என்ன பிரச்சனை?
நிச்சயமாக இருக்கிறது, “free, irrevocable, permanent, transferable, and relicense-able” license to all user-generated content – இந்த வாக்கியங்கள் இந்த ஆப்பின் பிரைவசி பாலிசியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒருவரின் முக அடையாளம் மிகவும் முக்கியமானது அப்படிப்பட்ட முக அடையாளத்தின் உரிமத்தை வேறு ஒரு நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. இந்த ஆப் எவ்வளவு வேகம் வரவேற்பை பெற்றதோ அதே வேகத்தில் இந்த குற்றச்சாட்டும் பரவியது. இதனை தொடர்ந்து இந்த ஆப்பிற்கான ரேட்டிங் குறைய துவங்கியது.
இதனை தொடர்ந்து அந்நிறுவனம் விளக்கமளிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, மேலும் பயனாளர்கள் விரும்பினால் தங்களது தகவல்களை நிரந்தரமாக சர்வரில் இருந்து நீக்கிக்கொள்ளும் ஆப்சனும் வழங்கப்பட்டுள்ளது.
இதனைவிடவும் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில் ஒரு திரைப்பட காட்சியிலோ அல்லது சண்டை காட்சியிலோ புகைப்படத்தை மாற்றினால் பிரச்சனை இல்லை. அதுவே ஒரு தவறான வீடியோவில் வேறு ஒருவருடைய முகத்தை மாற்றி வைத்துவிட்டு பரப்பினால் என்னாவது? இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் கவனிக்கத்தக்க பிரச்சனை இது. குறிப்பாக பெண்கள் விசயத்தில் இதுபோன்ற ஆப்களை தவறாக பயன்படுத்திட அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது வரைக்கும் சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் இந்தியா பக்கமும் வரலாம். உடனடியாக இந்திய அரசு இது போன்ற ஆப்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதும் இனி வரக்கூடிய காலங்களில் ஆப்களை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு முன்னதாக தர சான்று கொடுப்பது போன்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.