Friday, November 22, 2024
HomeTech Articles10 நொடியில் பல் துலக்கும் மெஷின் | விலை எவ்வளவு தெரியுமா? | Y Brush

10 நொடியில் பல் துலக்கும் மெஷின் | விலை எவ்வளவு தெரியுமா? | Y Brush

Y brush பல் துலக்கும் கருவி

Tooth Brush Machine

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த FasTeesH எனும் நிறுவனம் 10 நொடியில் பல் துலக்கும் கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது. சாதாரணமாக பல் துலக்கினால் 2 நிமிடமாவது பல் துலக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி CES 2020 அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான மேடை தான்  CES – The Global Stage for Innovation. இந்த ஆண்டிற்க்கான CES 2020 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் [The World Trade Center Las Vegas] இல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு தங்களது திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  அமெரிக்க டென்டல் அசோசியேசன் கூற்றுப்படி நாம் தற்போது பயன்படுத்துகிற பிரெஷ்ஷில் ஒரு மனிதர் பகல், இரவு என இருமுறை 2 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது. ஆனால் வெறும் 10 நொடிகளில் மிகவும் சுத்தமாக பல் துலக்கும் மெஷின் ஒன்றினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த FasTeesH எனும் நிறுவனம்  CES 2020 இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனை அந்த நிறுவனம் Y Brush [Y பிரெஷ்] என அழைக்கிறது.

இந்த Y Brush ஆனது பார்ப்பதற்கு விளையாட்டுகளில் வீரர்கள் பயன்படுத்தும் வாய் பாதுகாப்பு உபகரணம் போன்றும் அதில் பிளாஸ்டிக் முட்கள் இருக்கும் விதமாகவும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த பேஸ்டை நீங்கள் இந்த முட்களில் தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கருவியை உங்களது வாயின் கீழ்புறமாக வைக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற வேகத்தை நீங்கள் செட் செய்துகொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. நீங்கள் கருவியை ஆன் செய்தவுடன் அதற்குள் இருக்கும் மோட்டார் செயல்பட்டு உங்களது பற்களை சுத்தப்படுத்த துவங்கும். ஒரு நேரத்தில் மேற்பற்கள் அல்லது கீழ் பற்கள் என ஏதாவது ஒன்றினை தான் சுத்தம் செய்திட முடியும். கீழ்புறம் சுத்தம் செய்ய வெறும் 5 நொடிகள் போதும், பின்னர் வெளியில் எடுத்துவிட்டு மேற்புறமாக வைத்திடுங்கள். வெறும் 10 நொடிகளுக்குள் உங்களது பற்கள் சுத்தம் செய்யப்பட்டுவிடும்.

இதன் விலையை நினைத்தால் தான் தலை சுற்றுகிறது. Y Brush இன் விலை $125 இந்திய மதிப்பில் ரூ 8000 க்கும் மேல். சாதாரண மக்களை இந்த தொழில்நுட்பம் சென்று சேருவது சந்தேகம் தான் என்றாலும் அனைத்திற்கும் தொழில்நுட்பம் வந்துவிட்ட பிறகு பல் துலக்குவதற்க்கு ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என சிந்திப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். ஏற்கனவே கோல்கேட் நிறுவனம் ஸ்மார்ட் பிரெஸ் ஒன்றினை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது, அதன் விலையும் $100 தான்.

Read This : 8K TV வந்தாச்சு! சாம்சங் மற்றும் எல்ஜி யின் 8K TV யை பாருங்க


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular