இணைய உலகின் ஜாம்பவான் Google , மாதம் 30 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ள Files Go என்னும் ஆப்பினை “Files ” என்னும் பெயரில் மறு வெளியீடு செய்துள்ளது . தற்போது உங்களில் பலர் இந்த App ஐ பயன்படுத்தவில்லையெனில் அதனை பயன்படுத்திட காரணங்கள் இருக்கின்றன .
Download here : Files App by Google
Files App – இன் சிறப்பு அம்சங்களை பார்ப்போம். கூகுளின் Files App ஆனது நான்கு முக்கிய பணிகளை செய்கின்றது.
Four specific features of Files by Google App
Free up space
Find files faster
Share files offline
Backup files to the cloud
Free up space
நாம் என்ன மொபைல் போன்களை பயன்படுத்தினாலும் மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது Storage தான் . Duplicate Files , Junk Files போன்றவற்றினை அகற்றுவதற்கு பல ஆப்கள் இருக்கின்றன . அதனை தாண்டியும் கூகுளின் Files App ஐ பயன்படுத்த காரணம் இருக்கின்றது . இந்த Files App : Duplicate Files , Junk Files போன்றவற்றினை அகற்றுவதோடு மட்டுமில்லாமல் நமது மொபைலில் இருந்து google photo இல் backup எடுக்கபட்ட file களை அகற்றிட ஆப்சனை வழங்குகின்றது . இதனை மற்ற Apps செய்வதில்லை .
Find files faster
உங்களது மொபைலில் இருக்கக்கூடிய file களை Search செய்வதற்கு மிக வேகமானதாகவும் எளிமையானதாகவும் கூகுளின் Files App விளங்குகின்றது.
Share files offline
தற்போது Shareit போன்ற ஆப்களின் மூலமாக அருகில் இருப்பவர்களுக்கு files , images , videos போன்றவற்றை Share செய்வதைப்போல google இன் Files app மூலமாகவும் பகிர்ந்துகொள்ள முடியும் .
Backup files to the cloud
இந்த Files App ஐ பயன்படுத்தி Google Drive உள்ளிட்ட அனைத்து Cloud Storage களிலும் உங்களது மொபைலில் இருக்கும் file களை சேமித்து வைக்க முடியும் . இதனால் மொபைலின் Storage ஐ குறைக்க முடியும்.
இன்னும் பல சிறப்பான ஆப்சன்களும் Files App இல் இருக்கின்றன.
TECH TAMILAN