Huawei banned from US
சீன நிறுவனமான ஹவாய் (Huawei), தனது நிறுவனத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகளைக்கொண்டு பிற நிறுவனங்களை வேவு பார்ப்பதாகவும், தகவல் திருட்டில் ஈடுபடுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்தது. இதனை அடுத்து பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறது ஹவாய்
உலகின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனம் மற்றும் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நிறுவனம் என வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 15 அன்று அமெரிக்கா நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹவாய் (Huawei) மற்றும் ZTE என்ற இரு நிறுவனங்களையும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டார். இந்த தடையின் காரணமாக இனி அரசின் அனுமதி இன்றி அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்த பொருளையும் ஹவாய் (Huawei) பெற முடியாது, அதேபோல அமெரிக்காவில் ஹவாய் (Huawei) நிறுவன பொருள்களை விற்பனை செய்திடவும் முடியாது.
ஹவாய் (Huawei) போனுக்கு அமெரிக்கா தடை, ஏன்?
சீன நிறுவனமான ஹவாய் (Huawei), தனது நிறுவனத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகளைக்கொண்டு பிற நிறுவனங்களை வேவு பார்ப்பதாகவும், தகவல் திருட்டில் ஈடுபடுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்தது. 5ஜி தொழில்நுட்பத்தில் ஹவாய் (Huawei) ஈடுபடுகிற சூழலில் அதனை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போர் சூடுபிடிக்க ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.
ஹவாய் (Huawei) தடையால் என்ன ஆகும்?
தனது மொபைல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்க தேவையான சிப் போன்ற எந்த உபரி பாகங்களையும் அமெரிக்க அரசின் அனுமதி இன்றி ஹவாய் (Huawei) நிறுவனத்தால் வாங்க இயலாது.
கூகுள் நிறுவனமும் தனது ஆன்ட்ராய்டு சப்போர்ட்டை ஹவாய் (Huawei) போன்களுக்கு நிறுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது. ஜிமெயில், மேப்ஸ், யூடியூப் போன்ற கூகுள் நிறுவன சாப்ட்வேர்களுக்கான சப்போர்ட் இனி ஹவாய் (Huawei) தயாரிப்புகளுக்கு கிடைக்காது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஹவாய் (Huawei) போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் சேவைகள் அப்படியே இருக்கும், புதிய அப்டேட்களை பயன்படுத்திக்கொள்ள இயலாது.
ஹவாய் (Huawei) தடையால் ஏற்படப்போகும் இழப்புகள் என்ன?
ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு காத்திருக்கிறது. ஏற்கனவே சிப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான Intel, Qualcomm, Xilinx and Broadcom ஆகியவை ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு இனி சிப் வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. ஹவாய் (Huawei) நிறுவனம் தயாரிக்கின்ற மின்னனு பொருள்களுக்கு உதிரி பாகங்கள் அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போதைய தடையால் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி வரும் அல்லது தானே தனக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யவேண்டி இருக்கும்.
5ஜி தொழில்நுட்ப சேவையினை மிககுறைந்த விலையில் வழங்கக்கூடிய தொழில்நுட்பம் ஹவாய் (Huawei) நிறுவனத்திடம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். தற்போதைய தடையால் ஹவாய் (Huawei) நிறுவனத்தின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்திக்கொள்ள இயலாது. பல மில்லியன் தொகையுள்ள பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தினை தடை செய்வதனால் இழப்பு அமெரிக்க நிறுவனத்திற்கும் தான். இந்த தடை ஒரு இருமுனை கத்தி போன்று இருவருக்குமே இழப்பினை ஏற்படுத்தப்போகிற விசயம் தான்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே ஹவாய் (Huawei) நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு தடை விதித்துவிட்டது. ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரை ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு தடை இல்லை. ஆனால் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று பிற நாடுகளும் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.