Friday, November 22, 2024
HomeTech Articlesவிமானத்தில் Flight Mode இல் மொபைலை போடச்சொல்வது ஏன் தெரியுமா?

விமானத்தில் Flight Mode இல் மொபைலை போடச்சொல்வது ஏன் தெரியுமா?

நமது அன்றாட வழக்கத்தில் பல விதிகளை கேட்டிருப்போம். ஆனால், அந்த விதி எதனால் உருவானது என்பதை அறியாமல் இருந்திருப்போம். அப்படி ஒரு விதி தான் “விமானத்தில் பயணிக்கும் போது மொபைல் போனை Flight Mode இல் கண்டிப்பாக போட வேண்டும் என்கிற விதி. ஏன் அப்படி செய்ய சொல்கிறார்கள், அப்படி செய்யாவிட்டால் என்னவாகும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

உங்களது மொபைல் கருவிக்கும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு [Cell Phone Tower] இடையே இருக்கக்கூடிய தொடர்பினை துண்டிக்க உதவும் ஒரு ஆப்சன் தான் Flight Mode. விமானத்தில் நாம் பயணிப்பதற்கு பல கட்டுப்பாடுகள், விதிகள் உள்ளன. சீட் பெல்ட் அணிவது கட்டாயம், பிறருக்கு தொந்தரவாக சத்தமாக பேசக்கூடாது, பறக்க தயாராகும் போது எழுவது என பல விதிகள் உண்டு. அதிலே முக்கியமான விதி “உங்கள் மொபைல் போனை Flight Mode இல் வைப்பது”. விமானப் பணியாளர்கள் பயணிகளிடம் உங்களது செல்போன் கருவியை Flight Mode இல் மாற்றுங்கள் என்று சொன்னாலும் கூட சிலர் அதனை செய்வது இல்லை. ஊழியர்களும் கூட ஒரு அறிவுரையாக கூறிவிட்டு அதனை கண்டுகொள்வது இல்லை. ஏன் Flight Mode இல் வைக்க சொல்கிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை கீழே,

1. ரேடியோ குறுக்கீடு

விமானத்திற்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்பது விமானம் வெற்றிகரமாக பறப்பதற்கும் தரை இறங்குவதற்கும் முக்கியமான விசயம். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உரிய நேரத்தில் விமான ஓட்டிகளுக்கு சென்று சேர வேண்டும். முக்கியமான நேரங்களில் ஒரு நொடி தாமதம் அல்லது குறைபாடு கூட பெரும் விபத்தை ஏற்படுத்தி விடும். நாம் மொபைலை Normal Mode இல் வைத்திருந்தால் மொபைல் போன்கள் அனைத்தும் செல்போன் டவருடன் தொடர்பில் இருக்கும். விமானத்தில் இருக்கும் அனைவரது மொபைலும் இப்படியே தான் தொடர்பில் இருக்கும். மேலும் விமானம் புறப்படும் போது அதிவேகத்தில் விமானம் செல்வதனால் ஒவ்வொருவரின் மொபைல் போனும் செல்போன் டவருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முயலும். ஆகவே, விமானத்திற்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பில் தொந்தரவை ஏற்படுத்தலாம். ஆகவே தான் மொபைல் போனை Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். 

ஆனால், இதுவரைக்கும் இப்படி நடந்து அதற்காக விபத்துக்கள் நடந்ததாக தெரியவில்லை. ஆனாலும், ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள்.

2. நேவிகேஷன் குறைபாடு 

விமானத்தில் பெரும்பான்மையானோர் மொபைல் போனை பயன்படுத்தும் போது navigation குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படியொரு விசயம் நடந்தது இல்லை என்றாலும் கூட Federal Communications Commission விதிப்படி அமெரிக்காவில் விமானத்தில் செல்போனை Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். 

தற்போது உருவாக்கப்படும் விமானங்களில் இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் தான் அவை தயாரிக்கப்படுகின்றன.

3. மொபைல் சார்ஜ் குறைதல்

இதுவொரு முக்கியமான காரணமாக இல்லாவிட்டாலும் கூட சிலர் இதற்காகவும் மொபைலை Flight Mode இல் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் நேரங்களில் நமது மொபைல் போன் டவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக பேட்டரி சக்தியை பயன்படுத்தும், அதேபோல ஒரு டவரில் இருந்து இன்னொரு டவருக்கு மாறும். அப்போதும் பேட்டரி சக்தி குறையும். இதனை தவிர்க்கவும் Flight Mode இல் வைக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular