Site icon Tech Tamilan

உண்மையில் ரேடியோவை கண்டுபிடித்தது யார்? மார்க்கோனியா அல்லது டெஸ்லாவா?

வானொலி கண்டுபிடித்தவர் யாரென நம்மிடம் கேட்டால் 'வில்லியம் மார்க்கோனி' என்று தான் சொல்லுவோம். ஆனால் நீங்கள் இணையத்தில் இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் நிக்கோலா டெஸ்லா தான் உண்மையில் ரேடியோவை கண்டறிந்தவர் என இருக்கும். ஏன் ரேடியோ கண்டுபிடிப்பில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டது? வாருங்கள் பார்ப்போம்.

Who invented Radio?

வானொலி கண்டுபிடித்தவர் யாரென நம்மிடம் கேட்டால் ‘வில்லியம் மார்க்கோனி’ என்று தான் சொல்லுவோம். ஆனால் நீங்கள் இணையத்தில் இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் நிக்கோலா டெஸ்லா தான் உண்மையில் ரேடியோவை கண்டறிந்தவர் என இருக்கும். ஏன் ரேடியோ கண்டுபிடிப்பில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டது? வாருங்கள் பார்ப்போம்.

உலகம் முழுமைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரே விதமான ஆய்வுகள் உலகில் வெவ்வேறு இடங்களில் நடப்பதும் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பை நிகழ்த்திவிடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் யாரோ ஒருவருக்கு கிடைத்துவிடும் காப்புரிமை அவரை வரலாற்றில் நிலைத்து நிற்கச் செய்துவிடுகிறது. மற்றொருவரின் பெயரோ இதுபோன்று யாரேனும் கட்டுரை எழுதினால் மட்டுமே நினைவுகூறப்படும். அதுபோன்றதொரு குழப்பமான  நிலை தான் ரேடியோ கண்டுபிடிப்பிலும் நடந்தது.

நிக்கோலா டெஸ்லா அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ‘எடிசன்’ அவர்களின் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக வந்தார். [அதன் பிறகு நடந்த நிகழ்வுகளையும் நிக்கோலா டெஸ்லா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இங்கே கிளிக் செய்து படியுங்கள்] எடிசனிடம் இருந்து பிரிந்து தனியே நிறுவனம் ஒன்றிய தொடங்கினார் டெஸ்லா.  டெஸ்லா கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு Tesla coil என்ற ஒன்றினை கண்டறிந்தார். இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும். இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும் பெறவும் முடியும். டெஸ்லா முதன் முதலாக ரேடியோ சிக்னலை அனுப்ப தயாராக ஆனபோது தான் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. 1895 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் பல ஆண்டுகால உழைப்பும் சாதனங்களும் வீணாய் போனது. அதன் பிறகு டெஸ்லா ரேடியோ விற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை.

இதே காலகட்டத்தில், இத்தாலி நாட்டை சேர்ந்த இளம் இயற்பியலாளர் இங்கிலாந்து நாட்டில் ரேடியோ கண்டுபிடிப்பில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் 6 கிலோமீட்டர் தொலைவுக்கு இடையே மோர்ஸ் குறியீடு அடிப்படையிலான ரேடியோ அலைகளை அனுப்பவும் பெறவும் செய்து சோதித்துக்காண்பித்தார். அந்த ஆண்டே இங்கிலாந்து நாட்டின் காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து காப்புரிமையும் பெற்றார். அதுதான் உலக அளவில் இணைப்பில்லாத தந்தி [wireless telegraphy] கண்டுபிடிப்புக்காக ஒருவர் காப்புரிமை பெற்றது.

டெஸ்லா தனது கண்டுபிடிப்பிற்காக 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். அவர் 1898 இல் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ரேடியோ கட்டுப்பாட்டுடன்  கூடிய படகு ஒன்றையும் கட்டி நிரூபித்தார். 1900 ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை நிறுவனம் 645,576 மற்றும் 649,621 என்ற இரண்டு காப்புரிமைகளை டெஸ்லா காயில் [Tesla coils] க்காக வழங்கியது. இதனால் டெஸ்லாவிற்கு ரேடியோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளுக்கான காப்புரிமை கிடைத்தது. அதே ஆண்டில் மார்க்கோனி அமெரிக்காவில்  மேம்படுத்தப்பட்ட தந்திக்காக [tuned telegraphy] காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.

காப்புரிமை அலுவலகம் மார்க்கோனி அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது. டெஸ்லாவின் அடிப்படை கண்டுபிடிப்பை அது ஒத்திருப்பதாக கூறியது காப்புரிமை நிறுவனம். மார்க்கோனி இதற்காக கவலைப்படவில்லை, தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் தனது திறமை இவற்றை பயன்படுத்தி தன்னுடைய இணைப்பில்லாத தந்தி தொழில்நுட்பத்தை வியாபாரமாக்கினார். மீண்டும் மார்க்கோனி தனது கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கோரி அமெரிக்காவில் 1904 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். இந்தமுறை அவருக்கு பெரும் முதலீட்டாளர்களான ஆண்ட்ரூ கார்னகி [Andrew Carnegie] மற்றும் தாமஸ் எடிசன் [Thomas Edison] ஆகிய இருவரின் ஆதரவையும் பெற்றிருந்தார். கடந்த பல முறை காப்புரிமைக்கான விண்ணப்பத்தை நிராகரித்த காப்புரிமை நிறுவனம் இந்த முறை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மார்க்கோனிக்கு காப்புரிமை வழங்கியது.

1909 ஆம் ஆண்டு மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1915 ஆம் ஆண்டு காப்புரிமையை மீறியதற்காக மார்கோனியின் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் டெஸ்லா. இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. கிட்டத்தட்ட டெஸ்லா இறப்பதற்கு முன்பு வரைக்கும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே,  முதலாம் உலகப்போரில் தன் அனுமதியின்றி தான் காப்புரிமை பெற்ற ரேடியோ தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்தியது தவறு என்று கூறி மார்க்கோனி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைத்த அமெரிக்கா, மார்கோனிக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு பதிலாக டெஸ்லாவிற்கு ஏற்கனவே வழங்கிய காப்புரிமையே சரி என்று கூறியது. அதாவது ரேடியோவை கண்டுபிடித்தது டெஸ்லா தான் என்று அதன் மூலமாக கூறியது. இதனால் மார்க்கோனியால் தொடரப்பட்ட வழக்கு ரத்தானது.

ஆனாலும், மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தவர் என்பது உலக மக்களிடையே நிலைத்துப்போனது.

நிகோலா டெஸ்லா வாழ்க்கை வரலாறு

Read Here

கணவரும் மனைவியும் உருவாக்கிய காடு

Read Here





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version