இணையம் (Internet) தான் இன்று உலகை ஆள்கிறது . இணையத்தின் உதவியால் மக்களை கிளர்ந்து எழ செய்து ஓர் அரசையே கவிழ்க்க முடியும் அல்லது மக்களை ஒன்றிணைய விடாமல் அவர்களுக்கு உண்மையே தெரியாமல் ஏமாற்றிடவும் செய்யலாம் . இவ்வளவு ஆற்றல் வாய்ந்த இணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது (Who controls the internet)? கட்டுப்படுத்துவபர்கள் நினைத்தால் என்னவெண்டுமானாலும் செய்ய முடியுமா ?
What hapen when we visit a website?

நாம் ஒரு இணையதளத்தை (website) பார்க்க முயலும்போது என்ன நடக்கும்?, name server க்கு இணைப்பு முதலில் போகும் அங்கிருந்து host செய்யும் இடத்திற்கு செல்லும் . அவர்கள் சொந்த server களை பயன்படுத்தினால் அங்கிருக்கும் இணையதகவல்களை பெற்று பிரவுசரில் தகவல்கள் காட்டப்படும் , இல்லையெனில் அவர்கள் யாருடைய server ஐ பயன்படுத்துகிறார்களோ அங்கிருந்து தகவல் பெறப்பட்டு காட்டப்படும் .
தற்போது மிக குறைந்த விலைகளில் cloud storage கிடைப்பதனால் அதனையே host ஆக பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர் . cloud storage ஐ நிர்வகிப்பவர்கள் மிகப்பெரிய நிறுவனங்கள் .இவர்கள் நினைத்தால் தகவல்களை கட்டுப்படுத்த இயலும் என்கிறார்கள் வல்லுநர்கள் .
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியுமா ?
அனைவருமே குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக cloud storage ஐ பயன்படுத்துகிறார்கள் என வைத்துக்கொள்வோம் . உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக்கொள்வோம் அங்கு அரசுக்கு எதிராகவோ அல்லது அந்த அரசாங்கம் பேச கூடாது என மறுத்த தகவல்களையோ உங்களால் பதிவேற்றம் கூட செய்ய இயலாது . அரசு தவறு செய்கின்றது என்றாலும் உங்களால் அதுகுறித்த தகவலை பதிவேற்றி பிறரிடம் கொண்டு செல்ல இயலாது .
இதற்கு அரசு பெரிதாக ஒன்றும் செய்யவேண்டியது இல்லை , cloud storage ஐ நிர்வகிக்கும் கம்பெனியை கட்டுப்படுத்தினால் அல்லது அந்த கம்பெனி அரசுக்கு உதவ முற்பட்டால் போதுமானது .
இது எப்படி சுதந்திரமாகும் ?
Copyright Issue
மிக்பெரிய வீடியோ சேனலாக இருக்கக்கூடிய youtube இல் வேறு யாரேனும் பதிவேற்றம் செய்துள்ள பாடலையோ அல்லது வீடியோவையோ நீங்கள் பதிவேற்றம் செய்யப்போகும் வீடியோவில் பயன்படுத்தியிருந்தால் Copyright பிரச்சனையில் உங்களது வீடியோ சிக்கலாம் . உங்களது வீடியோ நீக்கப்படலாம் அல்லது உங்களது கணக்கே கூட நிரந்தரமாக நீக்கப்படலாம் .

இதனை cloud storage இல் மிக எளிமையாக செய்துவிட முடியும் .
பார்க்கும் போது இது நல்லதாக தெரியும் . ஆனால் விமர்சனம் செய்வதற்க்கோ அல்லது மீம்ஸ் உருவாக்குவதற்கோ கூட அடுத்த நிறுவனங்கள் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்திட முடியாது . உதாரணத்திற்கு எந்திரன் திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்க்கு அதன் காட்சியை உங்களால் பயன்படுத்திட இயலாது .செந்தில் , கவுண்டமணி போட்டோக்களை கூட நம்மால் பயன்படுத்திட முடியாது . பயன்படுத்தினால் Copyright பிரச்சனையில் சிக்குவோம்.
இதற்கு என்னதான் தீர்வு ?
தகவல்கள் அனைத்தும் ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிடுக்கும்போது மிக எளிமையாக அவற்றிற்கான கட்டுப்பாடுகளை நிறுவனங்களோ அரசோ செய்துவிட முடியும் .
இதற்கு தீர்வாகத்தான் “decentralised server ” எனும் திட்டம் முன்வைக்கப்படுகிறது . இதன்படி இணையதளம் வைத்திருப்பவர்கள் சொந்தமாகவே storage server ஐ வைத்திருப்பார்கள் . அப்படி வைத்திருக்கும்போது , ஒருவர் இணையதளத்தை பார்க்க நினைத்தால் அந்த request நேரடியாக உங்களுடைய சர்வருக்கு வந்துவிடும் . இதில் மாற்றம் செய்யவோ கட்டுப்பாடுகளை விதிக்கவோ உங்களால் மட்டுமே முடியும் . இதுதான் உண்மையான இணைய சுதந்திரம் என்கிறார்கள் . செலவு பிடிக்கக்கூடிய விசயம்தான் , ஆனால் சுதந்திரம் வருங்காலத்திற்கு தேவையானது .
Important Keywords :
Internet – இணையம்
Name Server – டொமைனை ரிஜிஸ்டர் செய்திருக்கும் நிறுவனத்தினுடைய சர்வர்
Host Server – நமது இணையதளத்திற்கு தேவையான file களை சேமித்து வைத்திருக்கும் இடம்
TECH TAMILAN