அமெரிக்கா தான் 1406 செயற்கைகோள்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதுதவிர பல நாடுகளுடன் இணைந்தும் அமெரிக்கா பல செயற்கைகோள்களை ஏவியிருக்கிறது.
ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டோடு போட்டி போடுவது எதார்த்தமான ஒன்றுதான். தரையில் போட்டிபோட்ட காலம் மாறி தற்போது விண்வெளி தான் ஒவ்வொரு நாடும் தங்களது திறனை வெளிப்படுத்துகிற இடமாக மாறியிருக்கிறது. முன்பெல்லாம் எதாவது ஒரு நாடு செயற்கைக்கோளை ஏவினால் அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம், அனுபவம், தனியார் நிறுவனங்களின் ஆர்வம் என அத்தனையும் ஒன்று சேர்ந்து செயற்கைகோள்ஏவுதலை எளிமைப்படுத்தி உள்ளன.
ஜூலை 31, 2020 நாள் தரவுப்படி மட்டும் பூமியை சுற்றி 2787 செயற்கைக்கோள்கள் சுற்றிவருகின்றன. இதில் அதிகபட்சமாக, அமெரிக்கா தான் 1406 செயற்கைகோள்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதுதவிர பல நாடுகளுடன் இணைந்தும் அமெரிக்கா பல செயற்கைகோள்களை ஏவியிருக்கிறது. 375 செயற்கைக்கோள்களுடன் சீனா இரண்டாம் இடத்திலும் 170 செயற்கைக்கோள்களுடன் ரஷ்யா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. இந்தியா 58 செயற்கைக்கோள்களுடன் 6 ஆம் இடத்தில் இருக்கிறது.
Country of Operator/Owner | Count |
USA | 1406 |
China | 375 |
Russia | 170 |
United Kingdom | 129 |
Japan | 80 |
Multinational | 64 |
India | 58 |
ESA | 53 |
Canada | 39 |
Germany | 33 |
Luxembourg | 32 |
Spain | 21 |
South Korea | 17 |
Argentina | 16 |
இதில் ஆச்சர்யமான விசயம் என்ன தெரியுமா? லக்ஸ்செம்பெர்க் எனும் நாடு 32 செயற்கைகோள்களுடன் ஸ்பெயின், இஸ்ரேல், பிரான்ஸ் போன்ற பிரபல்யமான நாடுகளைக்காட்டிலும் அதிகமாக செயற்கைகோள்களை ஏவியிருக்கிறது.
ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த நாடுகளை வேவுபார்ப்பதற்காக செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. தண்ணீர் இருப்பு, உலோக பொருள்களின் இருப்பு, பருவநிலை ஆராய்ச்சி போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் அனுப்பப்படுகின்றன.
விண்வெளியிலும் ஆபத்து இருக்கிறது
குறைந்த செலவு, அதிக தேவை மற்றும் போட்டி ஆகிய காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான எண்ணிக்கையில் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. இதனால் அங்கேயும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. அருகருகே பறப்பது, தொழில்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்ட செயற்கைக்கோள் மற்ற செயற்கைக்கோளோடு மோதி பிற செயற்கைக்கோள்களை சேதமாகும் அபாயம் உண்டு. அருகருகே செயற்கைக்கோள் பறப்பதனால் ஒரே அலைவரிசையில் தகவல்களை அனுப்பும் போது அவற்றை இழக்கக்கூடிய சூழல் உண்டாகலாம்.
அத்தனையையும் தாண்டி தொலைத்தொடர்பு, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றமடைய செயற்கைகோள் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமான தேவையாக மாறியிருக்கிறது என்பதனையும் மறுக்க இயலாது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.