WhatsApp Regulation
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோக்களை தொடர்ச்சியாக பகிர்ந்தால் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு ஏதுவாக இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோக்களை WhatsApp இல் பகிர்வதனை தடுக்க முன்வந்திருக்கிறது அந்நிறுவனம். அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,30,000 அக்கவுண்டுகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது WhatsApp. அமெரிக்காவில் இப்படிப்பட்ட WhatsApp கணக்கினை பிளாக் செய்வதோடு மட்டுமல்லாமல் அது குறித்த விவரங்களை National Centre for missing and exploited Children என்ற அமைப்பிற்கும் அனுப்புகிறது. உலகம் முழுமைக்கும் இந்த கண்காணிப்பும் தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது
If you share child pornography videos to one to one or group chat, your account will be deactivated – WhatsApp
WhatsApp இல் அனுப்பப்படும் தகவல்களை எவராலும் இடைமறித்து படிக்க முடியாதவிதமாக End to End Encryption வசதியினை பெற்றிருந்தது. இதன் காரணமாக அரசு ஏஜென்சிகள் கூட யாரையும் கண்காணிக்க இயலாத சூழல் நிலவியது. இந்த வசதியினை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்களுக்குள் செய்திகளை பகிர்வது, பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்புவது போன்ற பல செயல்களை செய்து வந்தனர்.
இது குறித்து முன்னனி சமூக வலைத்தளங்களான WhatsApp, facebook உள்ளிட்டவைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது அனைவரும் அறிந்ததே. Facebook இல் ஏற்கனவே பாலியல் அல்லது வன்முறை நிகழ்வுகளை போஸ்ட் செய்தால் Hide செய்யப்பட்டு காட்டப்படும் வசதி இருக்கிறது, பார்ப்பவர்கள் கூட சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து புகார் அளித்திடவும் முடியும். ஆனால் WhatsApp இல் அப்படி ஏதும் வசதி இருக்கவில்லை.
தற்போது WhatsApp குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில் களமிறங்கி இருக்கிறது. அதன்படி இனி WhatsApp இல் அனுப்பப்படும் போட்டோ, வீடியோ அனைத்துமே AI மூலமாக கண்காணிக்கப்படும். இதற்க்கு Photo DNA எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. Facebook இல் இந்த தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அனுப்புகின்ற ஒவ்வொரு புகைப்படமும், வீடியோவும் AI மூலமாக PhotoDNA தொழில்நுட்பத்தின் மூலமாக கண்காணிக்கப்படும்.
தற்போதும் WhatsApp இல் End to End Encryption வசதி இருக்கிறது. இப்போதும் யாரும் நாம் அனுப்புகிற தகவலை படிப்பது இல்லை. எந்த ஏஜென்சியும் இடைமறித்து தகவல்களை ஒட்டுக்கேட்பதும் இல்லை. AI மூலமாகவே இந்த கண்காணிப்பினை WhatsApp செய்கிறது.
WhatsAppஇன் இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டுதலுக்கு உரியது. வன்முறை, பாலியல் வீடியோக்களை பகிர்வது பெரும்பான்மையாக Chat ஆப் மூலமாகத்தான் நடக்கின்றன. WhatsApp இன் இந்த கண்காணிப்பு ஒரு மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும்.
வரவேற்கிறோம்!
இதையும் தவறாமல் படிங்க !
ஆபாச தளங்களுக்கு தடைவித்த கூகுள் நல்ல முயற்சி
Google Search ஆல் 1 லட்சம் இழந்த பெண் | பாதுகாப்பாக இருப்பது எப்படி?
WhatsApp Business App | குட்டி பிசினஸ் பன்றவங்க கண்டிப்பா பயன்படுத்துங்க
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.