Sunday, June 30, 2024
HomeTech ArticlesQR Code என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? | QR Code meaning in...

QR Code என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? | QR Code meaning in Tamil

முன்பெல்லாம், பணத்தை ஒருவருக்கு அனுப்ப வேண்டுமெனில் அவருடைய வங்கி எண் உள்ளிட்டவற்றை நாம் கொடுத்து அதன் பிறகு தான் அனுப்ப முடியும். ஆனால், இப்போது ஒரு நொடியில் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா மூலமாக நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவருடைய  QR Code ஐ ஸ்கேன் செய்து இரண்டொரு நொடிகளில் பணத்தை அனுப்பிவிட முடியும். இந்த எளிமையான பயன்பாட்டின் காரணமாகத்தான் தள்ளுவண்டி கடைகள் துவங்கி மிகப்பெரிய கடைகள் வரைக்கும் பணத்தை ஆன்லைன் மூலமாக சுலபமாக செலுத்திட முடிகிறது. மாணவர்கள் அவர்களது புத்தகங்களில் கூட அதே மாதிரியான QR Code அச்சடிக்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும் பலர் QR Code Meaning in Tamil  என கூகுளில் சர்ச் செய்வதை பார்க்க முடிகிறது. 

அப்படி உங்களுக்கு QR Code குறித்த கேள்வி எழுந்திருந்தால் இந்தப்பதிவில்  பல தகவல்களை தமிழ் மொழியில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

QR Code என்றால் என்ன?

QR Code Meaning in Tamil என பலரும் கூகுளில் சர்ச் செய்கிறார்கள். நீங்கள் கடைக்கு செல்லும் போது ஒரு அட்டையிலோ அல்லது சுவரிலோ சதுர வடிவிலான barcode ஐ பார்த்து இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதேபோல ஏதாவது பொருள்களின் மீதும் கூட சதுர வடிவிலான barcode ஐ பார்த்து இருக்கலாம். அதற்கு பெயர் தான் QR Code. ஆங்கிலத்தில் QR Code என்பதற்கு Quick Response code என பொருள் . இந்த கோடினை ஸ்மார்ட்போன் கேமராவில் ஸ்கேன் செய்து பண பரிமாற்றம் உள்ளிட்ட வேலைகளை எளிதாக செய்துகொள்ள முடியும். 1994 ஆம் ஆண்டு Denso Wave என்ற நிறுவனம் தான் முதன் முதலாக QR Code ஐ உருவாக்கியது. இப்போது அதன் எளிமையான பயன்பாடு காரணமாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 

இந்த QR Code களை நீங்கள் மேலோட்டமாக பார்த்தால் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருப்பது போல தோன்றலாம். ஆனால், நீங்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் சில பகுதிகள் மட்டும் தான் அனைத்து QR Code களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். அதேபோல சில சில மாற்றங்களும் ஒவ்வொரு QR Code க்கும் இருக்கும். 

உதாரணத்திற்கு, Finder patterns என்றதொரு பகுதி ஒவ்வொரு QR Code லும் இருக்கும். மேலே இரண்டு கட்டங்கள் மற்றும் இடது பக்க கீழ் புறத்தில் ஒரு கட்டம் இருக்கும்.  QR Code நேராக இருப்பதையும் எங்கிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை ஸ்கேனருக்கு சொல்லவும் இந்த கட்டங்கள் இருக்கும். ஒருவேளை நீங்கள் QR Code தலைகீழாக திருப்பினால் மேலே இரண்டு கட்டங்கள் இருக்காது. இதனால் QR Code தவறாக இருப்பது கண்டறியப்படும். 

Finder Patterns

Alignment patterns : மேலே சொன்ன மூன்று பெரிய கட்டங்களைத் தவிர இன்னும் சில சிறிய அளவிலான கட்டங்கள் இருக்கும். அவை ஏதேனும் ஒரு காரணத்தால் QR Code பாதிக்கப்பட்டால் அதனை QR Code Scanner புரிந்துகொண்டு வேலை செய்திட இவை உதவும். 

Alignment patterns

Timing patterns : QR Code இல் இருக்கும் இந்தவகை பேட்டர்ன் QR Code இன் அளவை தீர்மானிக்க உதவுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான சிறிய கட்டங்களாக இவை இருக்கும். 

Timing patterns

Types of QR Code

நான் ஏற்கனவே சொன்னது போல அனைத்து QR Code களும் ஒரே மாத்ரியானதாக தோன்றினாலும் கூட ஒவ்வொன்றும் வேறானவை. அதேபோல, QR Code களிலும் பல வகைகள் இருக்கின்றன. அதுபற்றி இங்கே பார்க்கலாம். 

Static QR code : இந்தவகை QR Code களை நீங்கள் உருவாக்கும் போது என்ன தகவல் கொடுக்கிறீர்களோ அதனை மாற்றவே முடியாது. உதாரணத்திற்கு, ஒரு வங்கி எண்ணுக்காக QR Code உருவாக்கியுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட  QR Code க்கு கொடுக்கப்பட்ட வங்கி எண்ணை உங்களால் மாற்ற முடியாது. 

Dynamic QR code : நீங்கள் QR code ஐ உருவாக்கிய பின்னரும் கூட QR code ஐ மாற்றாமல் அதற்கு பின்னால் உள்ள தகவலை மாற்ற முடியும்.

Visual QR code : QR code பொதுவாக கருப்பு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். அப்படி இல்லாமல் ஒரு படத்தின் வடிவிலோ அல்லது ஏதாவது வடிவிலோ அல்லது வெவ்வேறு நிறத்திலோ உருவாக்கப்பட்டால் அது Visual QR code.

QR Code பயன்கள்

QR Code தற்போது பல்வேறு துறைகளில் பயன்பாட்டில் உள்ளது. வெறுமனே, பணம் அனுப்புவதை தாண்டி பலவிதங்களில் QR Code பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. அப்படி, QR Code இன் பயன்களை இங்கே பார்க்கலாம். 

மார்க்கெட்டிங் : நீங்கள் ஒரு பொருள் குறித்து விளம்பரம் செய்திட துண்டு சீட்டு விளம்பரம் கொடுக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் துண்டு சீட்டை பார்க்கும் ஒருவரை உங்களது இணையதளத்திற்கு எளிமையாக கொண்டுவர QR Code ஐ பயன்படுத்தலாம். உங்களுடைய இணையதள முகவரி அல்லது குறிப்பிட்ட பொருள் பற்றிய மேலதிக தகவல்கள் கொண்ட இணையதள பக்கத்தினைக்கொண்டு ஒரு QR Code ஐ உருவாக்குங்கள். அதனை துண்டு சீட்டில் பதிவிட்டால் போதும் அதனை பார்ப்பவர்கள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் உங்களது இணையதளத்திற்கு வந்துவிட முடியும். அதேபோல, பொருள்களை வாங்கவும், ஆர்டர் செய்திடவும் கூட QR Code ஐ பயன்படுத்தலாம். 

பண பரிவர்த்தனை : எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள QR Code ஐ பயன்படுத்தலாம். வங்கி எண் அல்லது மொபைல் எண் உள்ளிட்ட எதனையும் பகிராமல் உங்களால் QR Code ஐ பயன்படுத்தி பணம் அனுப்ப பணம் பெற முடியும். 

புத்தகங்கள் : பள்ளி புத்தகங்களில் இப்போதெல்லாம் ஒவ்வொரு பாடத்திற்கும் QR Code இருப்பதை நீங்கள் கவனிக்க முடியும். அந்த QR Code களை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்தால் இணையத்தில் குறிப்பிட்ட பாடத்தை டவுன்லோட் செய்து படிக்க முடியும். 

மியூசியம் : ஒருமுறை மியூசியம் சென்றபோது ஒவ்வொரு சிற்பத்திற்கும் அடியிலேயே QR Code இருந்தது. அதனை ஸ்கேன் செய்து பார்த்தால் குறிப்பிட்ட சிலை பற்றிய தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. 

இதுபோன்று ஏராளமான வழிகளில் QR Code ஐ ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும்.

QR Code ஐ உருவாக்குவது எப்படி?

QR Code ஐ உருவாக்குவது மிகவும் எளிமையான ஒன்று. இதற்காக பல்வேறு இணையதளங்கள் மற்றும் ஆப்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இலவசமாகவும் கூட நீங்கள் QR Code ஐ உருவாக்கிக்கொள்ள முடியும்.  நீங்கள் QR Code ஐ உருவாக்க விரும்பினால் சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். 

எளிமை : நீங்கள் உருவாக்கும் QR Code ஐ சிம்பிள் ஆக உருவாக்குங்கள். அதிக நெருக்கமாகவோ அல்லது ஸ்கேன் செய்திடும் கருவிக்கு புரியாத விதத்திலோ இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

கலர்ஸ் : இப்போதைக்கு பல்வேறு வண்ணங்களில், புகைப்படங்களுக்குள் கூட QR Code ஐ உருவாக்க முடியும். ஆனால், அப்படி செய்திடும் போது ஸ்கேன் செய்திடும் போது படிப்பதற்கு கடினமாக இருக்கும். ஆகவே, நீண்ட காலத்திற்கு நீங்கள் QR Code ஐ பயன்படுத்த வேண்டுமெனில் கருப்பு வெள்ளை போன்ற வண்ணங்களை பயன்படுத்துங்கள். 

சோதித்து பாருங்கள் : நீங்கள் உருவாக்கிடும் QR Code ஐ பிறருக்கு பகிர்வதற்கு முன்பாக சோதித்து பாருங்கள். அதேபோல, பண பரிமாற்றம் உள்ளிட்ட விசயங்களுக்கு QR Code ஐ பயன்படுத்தினால் அடிக்கடி சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். 

context:  QR Code ஐ பகிரும் போது அதிலே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறுங்கள். அப்போது தான், ஸ்கேன் செய்கிறவர் வேண்டுமென்றால் செய்வார் இல்லையேல் விட்டுவிடுவார். 

நீங்கள் உங்களுக்கான QR Code உருவாக்க ஆன்லைனில் கிடைக்கும் டூல்களை பயன்படுத்தலாம். ஆனால், பல இலவச QR Code creator களில் பிரச்சனைகளும் இருக்கவே செய்கின்றன. ஆகவே, பண பரிமாற்றம் உள்ளிட்ட விசயங்களுக்காக நீங்கள் QR Code ஐ உருவாக்குகிறீர்கள் எனில் இலவசங்களை பயன்படுத்தாமல் சிறிய அளவில் கட்டணம் செலுத்தி QR Code ஐ உருவாக்கித்தரும் நிறுவனங்களில் QR Code ஐ உருவாக்கலாம். 

பின்வரும் இணையதளங்களில் நீங்கள் இலவசமாக QR Code ஐ உருவாக்கலாம். 

QR Code Generator: https://www.qr-code-generator.com/

QR Code Monkey: https://www.qrcode-monkey.com/

Visualead: https://www.visualead.com/

QR Stuff: https://www.qrstuff.com/

Unitag QR Code Generator: https://www.unitag.io/qrcode

GOQR.me: https://goqr.me/

QR Code Generator by Shopify: https://www.shopify.com/tools/qr-code-generator

QR Code என்பது பல விதங்களில் உதவக்கூடிய ஒன்று. இதனை உருவாக்க நீங்கள் பெரிய அளவில் சிரமப்பட வேண்டாம். அதேபோல அதிகமாக செலவு செய்திடவும் வேண்டியது இல்லை. நீங்கள், மார்க்கெட்டிங் துறையில் இயங்குபவராகவோ அல்லது பிசினெஸ் செய்பவராகவோ இருந்தால் QR Code அதிக அளவில் உங்களுக்கு பயன்படும். இந்தப்பதிவில் QR Code குறித்து தெளிவாக விளக்கி இருக்கிறேன். உங்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக அமையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular