Saturday, November 23, 2024
HomeUncategorizedஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? | இந்தியாவின் சோதனை வெற்றி

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? | இந்தியாவின் சோதனை வெற்றி

Hypersonic Missle Test successfully done by india


போருக்கான ஆயுதங்களை தயாரிப்பதில் “வேகம்” என்பதற்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. ஒலியைவிடவும் பல மடங்கு வேகமாக சென்று தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனையில் இந்தியா வெற்றி அடைந்து இருக்கிறது

இந்தியாவில் தயாரான ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் [Hypersonic Test Demonstrator Vehicle] ஐ வெற்றிகரமாக பறக்க விட்டு சோதனையை செப்டம்பர் 07,2020 அன்று இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு ஹாப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா இதன் மூலமாக பெற்று இருக்கிறது. ஒடிசாவில் இருக்கும் அப்துல் கலாம் தீவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோதித்து பார்க்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு நிலவிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய சோதனை வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு [DRDO : Defence Research and Development Organisation ] தான் ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ஐ உருவாக்கி உள்ளது.

ஹைப்பர்சோனிக் என்றால் என்ன? | What is Hypersonic? Tamil

ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் “ஹைப்பர்சோனிக்” என அழைக்கப்படுகிறது. 

 

மேம்படுத்தப்பட்ட Ramjet என்ஜின் தான் scramjet என அழைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்ற சோதனையில் ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் அல்லது ராக்கெட்டை ஹைப்பர்சோனிக் வேகத்தில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகமாக இந்த என்ஜினைக்கொண்டு ராக்கெட்டை செலுத்த முடியும். 

 

உலகம் முழுமைக்கும் ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பலவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, தற்போது இந்தியா மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்திருக்கின்றன. 

ராணுவ பலத்தை கூட்டும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை

தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை மட்டுமே நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற ஏவுகணைகள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் இந்தியாவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் பல்வேறுவிதமான ஏவுகணைகளை வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை எடுத்துக்கொள்வோம். அவற்றைக்கொண்டு யாரேனும் தாக்கினால் ரேடாரில் தெரிந்துவிடும். ஆகவே ஏவுகனை தடுப்பான்களைக்கொண்டு தடுத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால் ஒலியைவிடவும் பல மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணைகள் ரேடாரில் இருந்து தப்பிவிடும். ஆகவே அதனை தடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 

 

இந்த ஏவுகணை சோதனை வெற்றியின் மூலமாக இந்தியாவின் பலம் உயர்ந்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், சீனாவிடமும் இத்தகைய தொழில்நுட்பம் இருக்கிறது. 

 

குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவ முடியும் :

 

தற்போது சோதித்து பார்க்கப்பட்ட ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் [HSDTV] ஐ கொண்டு செயற்கைகோள்களை மிகக்குறைந்த செலவில் விண்ணில் செலுத்த முடியும் எனவும் இந்த மாதிரியான என்ஜின்களைக்கொண்ட ஒரு ராக்கெட்டால் மட்டுமே விண்வெளியில் செயற்கைகோள்களை செலுத்த முடியும், மற்ற என்ஜின்களால் கடினமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

Anti-Satellite, அதாவது ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. மிஷன் சக்தி எனும் Anti-Satellite சோதனையை இந்தியா வெற்றிகரமாக மார்ச் 27,2019 இல் செய்து முடித்து சாதித்தது இந்தியா. ஹைப்பர்சானிக் ஏவுகணை/தாங்கி இதில் கூடுதல் பங்களிப்பை அளிக்கும் என கூறப்படுகிறது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular