Site icon Tech Tamilan

IoT என்றால் என்ன? | IoT in Tamil

Internet of Things - tamil

Internet of Things - tamil

Internet of Things – IoT வந்தால் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் தேவையை குறைத்துக்கொள்ள முடியும். ஒரு விசயம் நடப்பதற்கு முன்னரே அது குறித்த தகவல் உங்களை வந்து சேரும். IoT வெறும் வீடுகளில் மட்டுமே வைத்து பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அல்ல. அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அதன் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும்.

IoT என்பதன் ஆங்கில விரிவாக்கம் Internet of Things. அதாவது நம்முடைய கணினி, மொபைல் போன்ற டிஜிட்டல் கருவிகள், வீட்டின் கதவு, மைக்ரோ ஓவன் போன்ற மெக்கானிக்கல் பொருள்கள், நீங்கள், உங்களுடைய வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் போன்றவை எந்தவித மனித அல்லது கணினி போன்றவற்றின் உதவி இன்றி குறிப்பிட்ட Unique Identifier [அடையாள எண்] மூலமாக தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்கிற அமைப்பு தான் IoT. பின்வரும் எடுத்துக்காட்டுகள் உங்களுக்கு IoT குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தும்.

IoT எப்படி செயல்படுகிறது?

மேலே நாம் சொன்ன அனைத்து கருவிகள் மற்றும் அமைப்புகளில் இருக்கும் சென்சார்கள் மூலமாக Internet of Things பிளாட்பார்ம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவை இணையத்தின் மூலமாக தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும். மேலும் பல்வேறு கருவிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து அதிலிருந்து முடிவுகளை நீங்கள் ஏதும் சொல்லாமல் தானாகவே எடுக்கும். [IoT Explained In Tamil Here]

IoT ஏன் இன்றியமையாதது?

நாளை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு முக்கியமான ஒருவரை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளீர்கள்.  நீங்கள் அதிகாலை 7 மணிக்கே எழுந்து தயாரானால் மட்டுமே முன்பதிவு செய்த 9 மணி ரயிலை பிடித்து உங்களால் 10 மணிக்கு சரியாக செல்ல முடியும். நீங்கள் அதிகாலை 7 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்கிவிட்டீர்கள். 

நள்ளிரவில் பெய்த தொடர்மழையின் காரணமாக நீங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அந்த தகவல் உங்களது மொபைலுக்கு அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் அப்போது நீங்கள் உறங்கச்சென்று விட்டதனால் நீங்கள் அந்த மெசேஜ் ஐ பார்க்கவில்லை. 

 

IoT இந்த இடத்தில் எப்படி செயல்படுகிறது என பாருங்கள். உங்களது மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் தானாகவே அது என்னவென்று பார்க்கும்.ரயில் ரத்து செய்யப்பட்டால் மாற்றுவழி என்ன இருக்கிறது என தானாகவே இணையத்தில் தேடும். காரில் சென்றால் எத்தனை மணி நேரத்தில் செல்லலாம் என பார்க்கும்.சரியாக 10 மணிக்கு அலுவலகம் காரில் செல்ல வேண்டுமானால் 7 மணிக்கு முன்னர் எப்போது எழுந்திரிக்க வேண்டும் என்பதை ஆராயும்.உங்களது ஸ்மார்ட் காரும் இதற்காக IoT உடன் இணைக்கப்பட்டு இருக்கவேண்டும். நீங்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருந்த அலாரத்தை தானாகவே முன்கூட்டியே மாற்றி அமைக்கும். அல்லது உங்களை உடனடியாக எழுப்பி டிக்கெட் ரத்து செய்யப்பட்ட விவரத்தை உங்களுக்கு தெரிவிக்கும்.இதனால் நீங்கள் சரியாக அலுவலகத்திற்கு சென்றிட முடியும். 

IoT ஆனது இணைந்திருக்கும் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து அதில் இருந்து உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் அல்லது உங்களுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்கும். இதனால் ஒரு விசயம் நடப்பதற்கு முன்னதாகவே அது குறித்த தகவல் உங்களுக்கு வந்து சேரும்.

Dark Mode

காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே தானியங்கி கார்கள் சாலைகளில் ஓட்டுனர்கள் இல்லாமல் செல்ல தயாராகிவிட்டன. பெரிய பெரிய பணக்காரர்களின் வீடுகள் முற்றிலுமாக தானியங்கி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சராசரி மக்களும் கூடிய விரைவில் இவ்வசதிகளை பெறுவார்கள். 

 

IoT வந்தால் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் தேவையை குறைத்துக்கொள்ள முடியும். ஒரு விசயம் நடப்பதற்கு முன்னரே அது குறித்த தகவல் உங்களை வந்து சேரும். IoT வெறும் வீடுகளில் மட்டுமே வைத்து பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அல்ல. அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அதன் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும். 

தற்போது அறிமுகமாகி இருக்கும் 5ஜி தொழில்நுட்பமும் IoT இன் வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணம். மொத்தத்தில் IoT என்பது வீடு துவங்கி அனைத்து துறைகளிலும் பயன்படும். 

TECH TAMILAN

Exit mobile version