Thursday, November 21, 2024
HomeInsuranceHealth Insurance இல் "copay" என்றால் என்ன?

Health Insurance இல் “copay” என்றால் என்ன?

Health Insurance அல்லது மருத்துவ காப்பீடு என்பது தனி நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு காப்பீடு. தற்போது உடல்நலக் குறைபாடு பலருக்கும் ஏற்பட்டு வரும் சூழலில் அதிகப்படியான மருத்துவ செலவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள Health Insurance எடுத்துக்கொள்வது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. Health Insurance இல் “copay” என்றதொரு ஆப்சனும் இருக்கிறது. அதுபற்றி விரிவாக இந்தப்பதிவில் பார்க்கலாம். 

நீங்கள் “health insurance” என ஆன்லைனில் தேடினால் உங்களுக்கு பல்வேறு Health Insurance Plan மற்றும் Health Insurance நிறுவனங்கள் வரும். அதில் இருந்து உங்களுக்கு தேவையான Health Insurance Policy ஐ தேர்வு செய்வது மிகவும் கடினமான மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் வேலை. எப்படி சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ஐ தேர்வு செய்வது என்பது பற்றிய விரிவான கட்டுரை இங்கே உள்ளது, தவறாமல் படியுங்கள்.

Health Insurance ஏன் அவசியம்?

தற்போதைய சூழலில் உடல்நல குறைபாடு பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. அப்படி திடீரென ஏற்படும் குறைபாடுகளுக்கு மருத்துவமனைக்கு சென்றால் அங்கே மருத்துவ கட்டணங்கள் வானுயர வளர்ந்து நிற்கிறது. ஒருமுறை மருத்துவனைக்கு சென்று வந்தாலே நம்முடைய ஒட்டுமொத்த சேமிப்பையும் அவர்கள் உருவி விடும் சூழல் தான் தற்போது உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள இருக்கும் ஒரு வழி தான் “ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி”. 

ஒரு குறிப்பிட்ட பணத்தை பிரீமியம் தொகையாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக கட்டி வந்தால் நமக்கு மருத்துவ செலவு ஏற்படும் நேரங்களில் அதற்கு ஆகக் கூடிய செலவு அனைத்தையும் அந்த இன்சூரன்ஸ் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். உங்களது இன்சூரன்ஸ் பாலிசி விதிமுறையை பொறுத்து 100% செலவையோ அல்லது குறிப்பிட்ட அளவு செலவையோ மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். 

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க வேண்டும் என தேடும் போது “copay” என்றதொரு ஆப்சன் இருப்பதை பார்த்து இருக்கலாம். இந்தப்பதிவில் copay என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

What is copay in health insurance?

ஹெல்த் இன்சூரன்ஸில் இருக்கும் கோ-பே ஆப்ஷனில் நீங்கள் பாலிசி எடுத்து இருந்தால் ஒட்டுமொத்த கிளைம் தொகையில் நீங்கள் ஒப்புக்கொண்ட சதவிகித பணத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், மீதமுள்ள பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும். 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எடுத்துள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் copay என்பது 10% என வைத்துக்கொள்வோம். மொத்த மருத்துவ செலவு 2 லட்சம் என வைத்துக்கொள்வோம். இப்போது, மொத்த செலவில் 10% ஆன 20,000 ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள 1,80,000 பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். 

copay யில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கான சதவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க உங்களது இன்சூரன்ஸ் பிரீமியம் குறையும். 

copay ஆப்ஷனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்

1. குறைவான சதவிகிதம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.மருத்துவ செலவு லட்சங்களில் செல்லும் போது நீங்கள் அதிகப்படியான தொகையை செலுத்த நேரிடும். 

2. copay சதவிகிதம் எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,  ICICI Lombard health insurance இல் இது மாதிரியான ஆப்சன் இருக்கிறது. 

3. குறைவான பிரீமியம் தொகையில் குறைவான copay இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். 

4. policybazaar மாதிரியான தளங்களில் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் தொகையை பார்த்து பிறகு சரியான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

முடிவுரை

Health Insurance வாங்கி வைத்துக்கொள்வது திடீரென வரும் மருத்துவ செலவுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும். பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை என்பது கூடுதலாக இருக்கும். குறைவான பிரீமியம் தொகையில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க நினைப்பவர்கள் “copay” என்ற ஆப்சனை பயன்படுத்தி வாங்கலாம். ஆனால், மருத்துவ செலவில் குறிப்பிட்ட பங்கை நாம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular