Friday, September 20, 2024
HomeTech ArticlesWhat is BIG DATA? Examples, Types, 3V | Tamil | பிக் டேட்டா

What is BIG DATA? Examples, Types, 3V | Tamil | பிக் டேட்டா

big data explained in tamil

Big Data

அதிகப்படியான தகவல்களை ஒருங்கிணைத்து எதிர்காலத்திற்கு தேவைப்படுகிற அல்லது நாம் தெரிந்துகொள்ள விழைகிற முடிவுகளை அறிந்துகொள்வதற்கான தொழில்நுட்பமே big data analysis.


Big Data (பிக் டேட்டா) என்பதனை தமிழில் சரியாக சொல்லவேண்டும் எனில் “அதிகப்படியான தகவல்கள்” எனலாம். அதிகப்படியான தகவல்களை சேகரித்து பின்னர் அதிலிருந்து தகவல்களை பிரித்தெடுத்து பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து அதிலிருந்து தேவையான புள்ளிவிவரத்தை பெறுவது தான் Big Data தொழில்நுட்பம்.  Big Data வில் அதிகப்படியான விவரங்களை சேகரிப்பது (Data Collection), அதனை பாதுகாப்பாக சேமித்து வைப்பது (Storage and Security), அதிலிருந்து தகவல்களை பிரித்தெடுப்பது (Extract Info), மற்றும் இறுதி முடிவுகளை (Statistics) குறைந்த பிழையில் எடுப்பது சவாலான விசயமாக பார்க்கப்படுகிறது.

Examples of BIG DATA

தற்போதைய சூழலில் BIG DATA தொழில்நுட்பத்தினை ஆதார் உதாரணத்தை கொண்டு விளக்கலாம் என நினைக்கிறன். இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களை பற்றிய தகவல்களும் ஆதார் இல் இருக்கிறது. கிட்டத்தட்ட 120 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அதில் இருக்கும். அந்த தகவல்களை முறைப்படி உள்ளீடு செய்து டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்திருக்கிறது இந்திய அரசாங்கம். இந்தியாவில் தற்போது உயர்கல்வி முடித்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் அரசுக்கு வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். நொடிப்பொழுதில் அந்த தகவலை பெற்றுவிட முடியும். தொடர்ச்சியாக இந்த தகவல்களை சேமித்துக்கொண்டே வந்தால் பிற்காலங்களில் பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் அதேசமயம் சரியான பதிலை பெற முடியும். 

 

உதாரணத்திற்கு, கல்வி இடைநிற்றலை குறைக்க அரசு நிதி ஒதுக்க இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நிதியை சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனில் சரியான பகுதியில் அந்த திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் அல்லவா. இதற்கென முதலில் இருந்து தகவல் சேகரிப்பில் ஈடுபடவேண்டும் என்றில்லை,ஏற்கனவே உள்ள தகவல்களில் இருந்தே அதனை நம்மால் பெற முடியும். இது போன்று பல தகவல்களை முறையாக சேமிக்கப்படுகிற தகவல்களில் இருந்து பெற முடியும்.

 

குறிப்பாக பின்வரும் துறைகளில் BIG DATA அதிக அளவில் பயன்படும் 

 

வங்கி 

மருத்துவம் 

தொழிற்சாலைகள் 

அரசு 

 

விற்பனை நிறுவனங்கள்

Types of BIG DATA

 

>> Structured

>> Unstructured

>> Semi-structured

 

Structured : 

 

எந்த தகவல்களை சேகரிக்கப்போகிறோம் என தெரிந்து அதற்கேற்றவாறு முறைப்படி தகவல்களை சேகரிப்பது தான் Structured. உதாரணத்திற்கு ஒரு அலுவலகத்தில் வேலை செய்கின்ற நபரின் பெயர், வயது, பணி, சம்பளம் என்ற தகவலை சேமிப்பதனை Structured முறையில் மேற்கொள்ளப்படும் தகவல் சேமிப்பு முறை என வைத்துக்கொள்ளலாம். ஆதார் தகவல்களும் கூட இம்முறையிலேயே சேகரிக்கப்படுகின்றன.

 

Unstructured :

 

எந்தவித முறையும் இன்றி கிடைக்கின்ற தகவல்களை சேமிக்கும் முறைக்கு Unstructured என பெயர். இம்முறையில் அதிகப்படியான தகவல்கள் இருக்கும் ஆனால் அவை அனைத்தும் ஒரே முறையில் சேமிக்கப்பட்டு இருக்காது. உதாரணத்திற்கு, ஒரு தகவலில் பெயர், வயது இருக்கும் இன்னொரு தகவலில் பெயர், பணி விவரம் இருக்கும். இதுபோன்று வெவ்வேறு விதத்திலான தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் இம்முறையில் தகவல்களை ஒருங்கிணைப்பது, அதிலிருந்து ஒரு தகவலை பெறுவது என்பது மிகவும் சவாலானது. 

 

Semi-structured : 

 

Structured  மற்றும் Unstructured முறையிலான இரண்டு டேட்டாக்களுமே இதில் அடங்கி இருக்கும்.

Characteristics of Big Data

big data explained in tamil

மூன்றுவித முக்கிய அம்சங்களை Big Data கொண்டிருக்கிறது. அவற்றினை 3V என வகைப்படுத்தலாம். 

 

>> Variety

>> Velocity

>> Volume

 

Variety – Structured, Unstructured, Semi-structured என மூன்று விதமான முறையிலேயும் சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டிருப்பது. முன்பெல்லாம் தகவல்கள் spreadsheets அல்லது databases மூலமாக பெறப்பட்டது. தற்போது பல்வேறு விதமான முறைகளில் (emails, PDFs, photos, videos, audios, SM posts) தகவல்கள் திரட்டப்படுகின்றன.

 

Velocity – தகவல்கள் அப்டேட் செய்யப்படும் வேகத்தினை குறிப்பது தான் Velocity. தொடர்ச்சியாக தகவல்கள் அப்டேட் செய்யப்படுமாயின் துல்லியமான தகவல்களை பெற இயலும்.

 

Volume – நாம் ஏற்கனவே அறிந்தது போலவே Big Data என்பது மிகப்பெரிய அளவிலான தகவலை குறிக்கிறது. சமூக வலைத்தளங்கள், நிறுவனங்கள், நேரடியாக பெறப்படும் தகவல்கள் என பல வழிகளில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன

Advantages of Big Data

>> முன்னரே சில விவரங்களை பெறுவதற்கும் கணிப்புகளை மேற்கொள்ளுவதற்கும் BIG DATA பயன்படுகிறது

 

>> பல நிறுவனங்கள் முன்கூட்டியே முடிவுகளை மேற்கொள்ளுவதற்கும் புதிய நிறுவனங்கள் உருவாவதற்கும் BIG DATA மிகப்பெரிய உதவியாக இருக்கும்

 

>> BIG DATA விலிருந்து பெறப்படும் முடிவுகள் விற்பனையை அதிகரிப்பதற்கு பெரிய உதவி புரிகிறது

 

>> BIG DATA விலிருந்து பெறப்படும் தகவல்களை கொண்டு பிற போட்டியாளர்களுக்கு முன்கூட்டியே முடிவுகளை எடுக்க முடியும்.

 

BIG DATA அதிக அளவில் பயன்படுத்தப்படும் அமைப்புகள் 

 

வங்கி 

மருத்துவம் 

தொழிற்சாலைகள் 

அரசு 

விற்பனை நிறுவனங்கள்

கல்வித்துறை

 





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular