Thursday, November 21, 2024
HomeArtificial IntelligenceWhat is AI in Tamil? எளிமையான விளக்கம்

What is AI in Tamil? எளிமையான விளக்கம்

What is artificial intelligence? How does it work?

அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து வைத்திருப்பது இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும்.

What is Artificial Intelligence?

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன என்பதை சுலபமாக விளக்கிட முடியுமா? நிச்சயமாக முடியும்.

ஒரு இயந்திரத்தை புத்திசாலித்தனமாக செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம் தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். நாம் உள்ளீடாக கொடுக்கும் தகவல்களை ஆராய்ந்தும், நாம் கொடுக்கக்கூடிய மாதிரிகளை கற்றுக்கொண்டும் நமது பங்களிப்பு இன்றி ஒரு இயந்திரம் தானாகவே முடிவெடுக்கும் செயல்பாடு தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படுகிறது.

நம்முடைய சுய நினைவோடு தீயை தொடுவோமா? தொட்டால் சுடும் என்பதனால் நாம் அதனை தொடுவது இல்லை. இதனை நாம் பிறக்கும் போதே அறிந்துகொண்டு பிறக்கவில்லை. இந்த அனுபவத்தை ஒன்று நாம் பட்டு தெரிந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது நமக்கு யாரேனும் சொல்லி இருக்க வேண்டும். இப்படி நாம் பெற்ற அறிவைக்கொண்டு தான் நாம் அடுத்தமுறை தீயை பார்க்கும் போது தொடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம். ஒவ்வொருமுறையும் நம்மிடம் வந்து இதனை யாரும் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா.

இப்படி, நாம் கொடுக்கும் உள்ளீடுகளை அடிப்படையாக்கொண்டு அதன் மூலம் கற்றுக்கொண்டு யாருடைய ஈடுபாடும் இல்லாமல் ஒரு இயந்திரம் தானாகவே முடிவெடுக்க கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம் தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்.

மனிதனுக்கு மூளை இருக்கின்றது , உள்ளே நரம்பு இருக்கின்றது , நியூரான்ஸ் இருக்கின்றது . இயந்திரத்திற்கு என்ன இருக்கிறது ? எப்படி கற்றுக்கொள்கிறது ? இந்தக் கேள்வி உங்களுக்கு வந்திருந்தால் சூப்பர்.

வெறுமனே ஒரு இயந்திரத்தால் தானாகவே கற்றுக்கொள்ள முடியாது. மனிதர்கள் தான் கற்றுக்கொள்ளும் திறனை அதற்கு அளிக்க வேண்டும். அப்படி, ஒரு இயந்திரத்தை மாற்ற உதவும் நுட்பம் தான் Machine Learning.

What is machine learning?

மெஷின் லேர்னிங் [Machine Learning] என்பது ஒரு இயந்திரம் கற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த செயல்பாடுகள் என வைத்துக்கொள்ளலாம். அதிலே சில படிநிலைகள் உள்ளன.

machine learning process in tamil
machine learning process in tamil

Learning : நாம் கொடுக்கும் தகவல்களை எப்படி படிக்க வேண்டும், அதில் இருந்து பயனுள்ள தகவல்களை எப்படி பிரித்தெடுக்க வேண்டும், அந்தத் தகவல்களை எப்படி படிக்க வேண்டும் என அனைத்தையும் நாம் சொல்லித்தர வேண்டும். அதற்காக புரோகிராம்ஸ் எழுதிட வேண்டும். இதன் மூலமாக, குறிப்பிட்ட வேலையை எப்படி செய்துமுடிக்க வேண்டும் என்பதனை இயந்திரம் கற்றுக்கொள்ளும்.

Self-correction : ஒரு சரியான முடிவை பெறுவதற்கு தானாகவே இயந்திரத்தை முயற்சி செய்திட வைப்பது தான் Self-correction. நாம் அதிகமாக தகவல்களை உள்ளீடு கொடுக்க கொடுக்க அதன் மூலமாக தானாகவே முடிவுகளை மாற்றிக்கொள்ளும்.

உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணித்து சொல்லக்கூடிய ஒரு இயந்திரத்தை வடிவைக்கிறோம் என வைத்துக்கொள்வோம்.

அதற்காக, பின்வரும் விதத்தில் பல்வேறு தகவல்களை அதற்கு அளிக்கிறோம்.

User 1 chennai to trichy : 4 hours 50 minutes

User 2 chennai to trichy : 5 hours 45 minutes [night]

User 3 chennai to trichy : 6 hours 50 minutes [Festival time, night]

தற்போது இயந்திரத்திடம் நீங்கள் கேட்டால் அதனிடம் இருக்கும் தகவல்களை பொறுத்தே கணிப்புகளை சொல்லும். ஆகவே, அது துல்லியமாக இருக்காது. நீங்கள் அதிகப்படியான தகவல்களை கொடுக்கும் போது, அதன் தகவல் அனைத்தும் சரியானதாக இருக்கும்.

எவ்வளவுக்கு எவ்வளவு தரவுகளை நாம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முடிகளில் துல்லியத்தன்மை அதிகரித்துக்கொண்டே போகும் .

Why is artificial intelligence important?

இப்போது தான் நாம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் துவக்க காலத்தில் இருக்கிறோம் என்றாலும் இன்று பல்வேறு வேலைகளை செய்வதற்கு தனித்துவமான AI வந்துவிட்டன. பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை செய்துகொள்வதற்கு AI களை உருவாக்கி வருகின்றன. சில வேலைகளை மனிதர்களை விடவும் இந்த AI புரோகிராம்கள் மிகவும் துல்லியமாக செய்து முடிக்கின்றன.

ஆகவே, அந்தத் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது.

What are the advantages and disadvantages of artificial intelligence?

AI Advantages :

தரவுகளின் முடிவுகளை நம்பியே தொழில் நடத்தக்கூடிய நிறுவனங்கள் மிகப்பெரிய தரவுகளில் இருந்து எளிதாக தேவையான விசயங்களை தெரிந்துகொள்ள AI பெரிய அளவில் உதவும். அதிக அளவிலான தரவுகளை மனிதர்கள் கையாளுவதில் சிரமம் இருக்கும். ஆனால், AI க்கு அல்ல. உதாரணத்திற்கு, புற்றுநோய் உள்ளிட்டவற்றை எளிதாக கண்டறியும் AI இருக்கின்றன.

திரும்பத் திரும்ப செய்யக்கூடிய மிகவும் கடினமான வேலைகளை செய்வதற்கு AI பெரிய அளவில் உதவும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போலியான மனுக்களை கண்டறிய AI உதவுகின்றன.

மிகப்பெரிய நிறுவனங்கள், தங்களுடைய வேலையை எளிதிலும் விரைவாகவும் முடிக்க AI உதவிகரமாக இருக்கிறது.

AI-powered virtual agents 24 மணிநேர சேவையை வழங்குகின்றன.

AI Disdvantages :

உங்களுக்கான ஒரு AI ஐ உருவாக்க மிகவும் அதிகமாக செலவு செய்திட வேண்டி இருக்கும். அதேபோல, உங்களுக்கு அதீத திறமைசாலிகள் தேவைப்படுவார்கள்.

பணியாட்களுக்கான தேவை என்பது குறையும். இதனால் வேலை இழப்பு ஏற்படலாம்.

பல்வேறு தொழில்வாய்ப்புகள் AI மூலமாக பறிபோகலாம். உதாரணத்திற்கு, கால் சென்டர் என்ற ஒன்றே இனி தேவையில்லாமல் போகலாம்.

மிகப்பெரிய நிறுவனங்கள் அதீத வளர்ச்சி அடையும் அதே சூழலில் சிறிய நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கலாம்.

4 types of artificial intelligence

Reactive machines : இந்த வகை AI க்கு மெமரி என்பது கிடையாது. குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்யும். உதாரணத்திற்கு, IBM நிறுவனத்தின் Deep Blue என்கிற செஸ் புரோகிராம் ஐ கூறலாம். இப்போது இருக்கும் காய்களின் நிலையை வைத்து எங்கே நகர்த்தலாம் என இதனால் முடிவு செய்ய முடியும். ஆனால், முந்தைய ஆட்டங்களில் இருந்து இதனால் கற்றுக்கொள்ள முடியாது.

Limited memory : இந்த வகை AI புரோகிராம்கள் முந்தைய நிகழ்வுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. தானியங்கி கார்களில் இவை பயன்படும்.

Theory of mind : இது மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் திறன் கொண்ட AI.

Self-awareness : மனிதர்களை போல புத்திசாலித்தனம் கொண்ட AI. இது இன்னமும் கண்டுபிடிப்பு முயற்சியில் தான் இருக்கிறது.

What are the applications of AI?

AI in healthcare : இப்போது சில மருந்து நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும் AI மூலமாக உங்களுக்கு என்ன செய்கிறது என சொன்னால் உங்களுக்கு என்ன நோயாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை கண்டறிய முடியும். அதேபோல, உங்களுக்கு மருத்துவ ஆலோசனை சொல்லும் AI கூட உண்டு.

மருத்துவரிடம் செல்வதற்கு முன்பதிவு செய்வது துவங்கி, தேவையான தகவல்களை முன்கூட்டியே சேகரிக்கும் வேலையையும் அது செய்கிறது.

AI in business – மிக அதிக அளவிலான தரவுகளை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பெரும் வர பிரசாதமாக அமைந்துள்ளது AI. AI மூலமாக அவற்றை ஆராய்ந்து அதில் உள்ள தவறுகள், முடிவுகள் என அனைத்தையும் அவர்களால் பெற முடியும். இன்னும் சில நிறுவனங்களோ தங்களுக்கு தேவையான சிறிய சிறிய புரோகிராம்களை எழுதவும் AI ஐ வைத்துள்ளன.

AI in education : மாணவர்களின் தேர்வுத்தாள்களை திருத்துவது துவங்கி மாணவர்களுக்கு சொல்லித் தருவது அவர்களது சந்தேகத்தை தீர்ப்பது என பல்வேறு விசயங்களை செய்வதற்கு இன்று AI உதவுகிறது. ChatGPT, Google Bard போன்ற AI புரோகிராம்கள் நீங்கள் பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள உதவுகின்றன.

AI in finance : பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான AI புரோகிராம்கள் இருக்கின்றன.

AI in law : ஒரு பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதனை ஆராய்ந்து சொல்லும் திறன் கொண்ட AI இப்போது உள்ளன. இவை சட்டம் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

AI in entertainment and media – சினிமா, விளம்பரம் உள்ளிட்ட துறைகளில் பெரிய அளவில் AI உதவுகிறது. Newsroom களில் இவை அதிக சிரமான வேலைகளை செய்வதற்கு உதவுகிறது.

AI in software coding and IT processes : கோடிங் எழுதுவதற்கும், அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்கும் AI பெரிய அளவில் உதவுகிறது. ata entry, fraud detection, customer service, மற்றும் predictive maintenance & security என அனைத்திலும் உதவுகிறது.

இப்படி பல்வேறு துறைகளிலும் AI மிகப்பெரிய அளவில் உதவுகிறது.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து வைத்திருப்பது இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும். தொடர்ச்சியாக இங்கே ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த பதிவுகள் சேர்க்கப்படும்.

மேலும் இது மாதிரியான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை படிக்க நமது WhatsApp Channel இல் இணைந்திடுங்கள்.

RELATED ARTICLES

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular